குடும்ப அரசியல் போல இது குடும்ப வியாபாரம்.. 113 வருடங்களாக உச்சத்தில் இருக்கும் போர்டு..!

113 வருட வெற்றிப் பயணம்: போர்டு நிறுவனத்தின் 'சிதம்பர ரகசியம்'

By Dhayanithi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போர்டு மோட்டார்ஸ் உலகப் புகழ் பெற்ற மோட்டார் தயாரிப்பு நிறுவனம் மட்டுமின்றிப் பல தலைமுறைகள் கடந்து வாழும் ஒரு குடும்பத்தின் வெற்றி ஆகும். ஐந்து தலைமுறைகளைக் கடந்து வெற்றிப் பாதையில் பயணித்து வரும் போர்டு மோட்டார்ஸ் எப்படி இத்தகைய வளர்ச்சியை அடைந்தது.

 

போர்டு குழுமத்தின் நிறுவனர் ஹென்ரி போர்டு முதல் தற்போதைய இயக்குனர் வில்லியம் கிளே போர்டு வரை பல தலைமுறைகள் பின்பற்றி வரும் வெற்றி சகாப்தத்திற்கான யுக்தி மற்றவர்கள் கணிக்க முடியாதவையாக இருந்தன.

ஐந்து தலைமுறைகள்

ஐந்து தலைமுறைகள்

அமெரிக்காவின் ஹார்வேர்டு வர்த்தகப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜான் டேவிஸ் ஆய்வுகளின் படி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகளைக் கடந்து மூன்றாவது தலைமுறையில் வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வது மிகவும் சவாலான ஒன்று ஆகும். இப்படி இருக்கையில் போர்டு நிறுவனம் ஐந்து தலைமுறைகளாகப் போர்டு வெற்றிப் பயணம் தொடர்ந்து வருகிறது.

113 வருட வர்த்தகம்

113 வருட வர்த்தகம்

போர்டின் 113 வருட வெற்றியின் தொடக்கமான ஹென்ரி போர்டு அவர்கள் மோட்டார் தொழில்நுட்ப பிரிவில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தினார்.

ஆனால் அவரின் தொடக்கம் எதிர்பார்த்த வெற்றியைத் துவக்கத்திலேயே அவருக்கு வழங்கவில்லை. ஆம், மோட்டார் துறையில் ஹென்ரி போர்டின் முதல் இரண்டு நிறுவனங்கள் தோல்வியைத் தழுவின.

 

1913 ஆம் ஆண்டு
 

1913 ஆம் ஆண்டு

மூன்றாவதாக ஹென்ரி போர்டு துவங்கிய நிறுவனம் இத்தகைய உயரத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டியாக விளங்குகிறது.

1913 ஆம் ஆண்டு முதல் அவரது போர்டு நிறுவனம் சிறந்த வெற்றியை தழுவி அமெரிக்க மோட்டார் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்கச் சாதனைகளைப் புரிய துவங்கியது.

 

மிகச்சிறந்த வரவேற்பு

மிகச்சிறந்த வரவேற்பு

தலைசிறந்த பொறியாளர்கள், தரமான இயந்திர உதிரிப் பாகங்களைக் கொண்டு அட்டகாசமான மோட்டார் வாகனங்களைப் போர்டு நிறுவனம் குறைந்த விலையில் உற்பத்தி செய்தது.

சாதாரண நடுத்தர மக்களும் வாங்கிப் பயன்படுத்தக் கூடியதாகப் போர்டு நிறுவன கார்கள், அக்காலத்து வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றன.

 

ஹென்ரி போர்டின் குறிக்கோள்

ஹென்ரி போர்டின் குறிக்கோள்

சாதாரணப் பணியில் இருப்பவர்களும் தங்களுக்கெனக் கார் ஒன்றை வாங்கச் செய்ய வேண்டும் என்ற ஹென்ரி போர்டின் குறிக்கோள், அவரை மற்ற நிறுவனங்களிடம் இருந்து தனிமை படுத்தியது. இதனாலேயே ஹென்ரியின் புகழ் அமெரிக்கா மட்டுமின்றிப் பல்வேறு நாடுகளிலும் பரவியது.

மாடல் T

மாடல் T

உலக மோட்டார் சந்தையில் முதல் வர்த்தகக் காரினை கார்ல் பென்ஸ் அறிமுகம் செய்தாலும், போர்டு நிறுவனத்தின் மாடல் T வகைக் கார் குறைந்த விலை, எளிமையாய் இயக்கும் வசதி உள்ளிட்டவற்றால் அதிகம் விற்பனையானது. அமெரிக்க மோட்டார் விற்பனையில் மிகப்பெரிய மைல்கல்லாக இந்த மாடல் அமைந்தது.

825 அமெரிக்க டாலர்

825 அமெரிக்க டாலர்

போர்டு நிறுவனத்தின் மாடல் T விலை 1908-ஆம் ஆண்டில் 825 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன, இன்றைய மதிப்பில் இதன் விலை 21,760 டாலர்கள் ஆகும்.

போர்டு மாடல் T வெளியீட்டுக்குப் பின் பெரும்பாலான அமெரிக்கர்கள் கார் ஓட்டப் பழகினர் என்றும் கூறப்பட்டது. மிகவும் கைதேர்ந்த பொறியாளர்களைப் பணியில் அமர்த்திய ஹென்ரி போர்டு கார்களைக் குறுகிய காலத்திலேயே விநியோகம் செய்தார்.

எனினும், இந்தக் கார்களின் விலை அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டார். ஹென்ரி போர்டு கார் விற்பனை அமெரிக்கப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியது.

 

அடுத்தத் தலைமுறை

அடுத்தத் தலைமுறை

பல்வேறு சாதனைகள், வெற்றிகளைத் தொடர்ந்து போர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பினை தன் ஒரே மகனான எட்செல்லிடம் (Edsel) 1919ஆம் ஆண்டில் ஒப்படைத்தார். எட்செல் பொறுப்பேற்ற இரண்டே வருடத்தில் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்ட கார்களில் 50 சதவிகிதம் போர்டு மாடல் T தான் என்ற சரித்திரத்தை உருவாக்கினார்.

விற்பனை வளர்ச்சி

விற்பனை வளர்ச்சி

போர்டின் விற்பனை வளர்ச்சி எட்செல் காலத்திலும் சீரானதாக அமைந்தது. எட்செலின் இருபது வருட சாதனைப் பயணம் 1943 ஆம் ஆண்டில் எதிர்பாராத விதமாக நிறைவுற்றது.

மோட்டார் துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்த எட்செல் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மகன் மறைவுக்குப் பின் ஹென்ரி போர்டு மீண்டும் நிர்வாகப் பொறுப்புகளை எடுத்துக் கொண்டார்.

 

ஹென்ரி போர்டு II

ஹென்ரி போர்டு II

இரண்டு ஆண்டுகள் நிர்வாகப் பொறுப்புகளைக் கவனித்து வந்த ஹென்ரி போர்டு நிர்வாகத்தைத் தன் பேரன் ஹென்ரி போர்டு II-இடம் ஒப்படைத்தார். ஹென்ரி போர்டு II நிர்வாகத்தின் கீழ் 15 ஆண்டுகளில் போர்டு நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறின. இன்று வரை எந்தவொரு நிறுவனத்திலும் இல்லாதளவு மிகப்பெரிய மாற்றங்கள் போர்டு II காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டன.

போர்டு நிறுவனத்தின் தனித்துவ வழிமுறைகள்

போர்டு நிறுவனத்தின் தனித்துவ வழிமுறைகள்

1906-ஆம் ஆண்டில் போர்டு மோட்டார் நிறுவனம் தனது குடும்ப வியாபார வழிமுறையில் இருந்து பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது.

நிர்வாக ரீதியிலான பங்குகள் போர்டு குடும்பத்தாரிடம் இருந்தாலும், நிர்வாக முடிவுகளை எடுக்கப் போர்டு குடும்பத்தில் அல்லாதவர்கள் அடங்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. இதனால், போர்டு குடும்பத்தார் இன்று வரை மேற்பார்வை உள்ளிட்ட பணிகளை மட்டுமே செய்து வருகின்றனர்.

 

இமாலய வெற்றி

இமாலய வெற்றி

மோட்டார் சந்தையில் இம்மாதிரியான வியாபார யுக்தியானது லாபமளிக்காது என்ற கருத்து இருந்து என்றாலும், போர்டு நிறுவனத்தின் இமாலய வெற்றிக்கு இந்த யுக்தியே மிகப்பெரிய காரணமாக அறியப்படுகிறது.

வெற்றிப் பாதை தொடரும்..

வெற்றிப் பாதை தொடரும்..

போர்டு நிறுவனத்தின் வியாபார யுக்தி அந்நிறுவனத்திற்குச் சீரான வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வருகிறது. போர்டு நிறுவனத்தைப் பொறுத்த வரை கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேலான லாபம் ஈட்டி வருகிறது.

மோட்டார் சந்தையில் போர்டு நிறுவனத்தின் வளர்ச்சி இனி வரும் தசாப்தங்களுக்கும், போர்டு குடும்பத்தாரின் தலைமுறைகளிலும் போர்டு நிறுவனத்தின் வெற்றிப் பயணம் என்றும் தொடரும்..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Incredible Legacy of the Ford Family Business

The Incredible Legacy of the Ford Family Business
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X