சும்மா இருந்தாலே போதும் மாதம் 1,70,866 ரூபாய் தருகிறது சுவிட்சர்லாந்து..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெர்ன்: உலகில் விலையுயர்ந்த வாழ்க்கை முறையைக் கொண்டுள்ள நாடுகளில் சுவிட்சர்லாந்து முக்கியமானவை. வங்கி சேவை மற்றும் நிதி பரிமாற்றத்தை முக்கிய வர்த்தகமாகக் கொண்டுள்ள இந்நாட்டு.

 

அரசு மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சில சலுகைகளை விலகிவிட்டு ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஒவ்வொரு மாதமும் நிபந்தனையற்ற அடிப்படை ஊதியம் என்ற வகையில் சுமார் 2,500 சுவிஸ் பிராங்களை வழங்க இந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

2,500 சுவிஸ் பிராங் என்றால் இந்திய ரூபாய் மதிப்பில் 1,70,866 ரூபாய். அமெரிக்க டாலர் மதிப்பில் 2525 டாலர்..!

மாதமாதம் 1,70,866 ரூபாய்

மாதமாதம் 1,70,866 ரூபாய்

சுவிஸ் அரசு திட்டமிட்டுள்ள படி, இந்நாட்டில் வருமையை ஒழிக்கும் விதமாகக் குடிமக்களுக்கு, அரசு அளிக்கும் சில சலுகைகள் அளிப்பதை நிறுத்திவிட்டு மாதம்தோறும் 2,500 சுவிஸ் பிராங், குழந்தைகளுக்கு 625 சுவிஸ் பிராங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

வாக்கெடுப்பு

வாக்கெடுப்பு

இத்திட்டம் நிறைவேற்றப்பட 1 லட்சம் கையெழுத்து வேண்டும் என்பதால் பொது வாக்கெடுப்புக்குச் செல்ல முடிவு செய்துள்ளது. இதன் முடிவுகள் வருகிற ஜூன் 5ஆம் தேதி வாக்கெடுப்பின் முடிவில் தான் தெரியும்.

வறுமைக் கோடு 2014

வறுமைக் கோடு 2014

தற்போது சுவிஸ் அறிவித்துள்ள படி மாதம் 2500 பிராங் என்ற முறையில் வருடம் 30,000 பிராங் அளிக்க முடிவு செய்துள்ளது. ஆனால் அது சுவிஸ் நாட்டில் 2014ஆம் ஆண்டுச் செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் அளவான 29,501 பிராங்களுக்குச் சற்றே அதிகமாகும்.

சுவிஸ்
 

சுவிஸ்

உலகச் சந்தையில் சுவிட்சர்லாந்து ஒரு பணக்கார நாடாக இருந்தாலும், இங்கு 8 பேரில் 1 ஒருவர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பிரான்ஸ், டென்மார்க் மற்றும் நார்வே நாடுகளை விடவும் அதிகமாகும்.

இந்தியாவிலும் இதே முறை..

இந்தியாவிலும் இதே முறை..

இத்தகைய முறையை இந்தியா, கனடா போன்ற நாடுகளிலும் கொண்டு வரத் தத்தம் அரசுகள் ஆலோசனையும் ஆய்வுகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Swiss mull paying people $2,500 a month for doing nothing

Switzerland's unconditional basic income initiative proposes $30,000-a-year payout for everyone. The country will vote June 5 on whether the government should introduce an unconditional basic income to replace various welfare benefits.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X