பைக் உலகின் டெஸ்லா.. ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு அடித்தது யோகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நவீன உலகம், தற்பொழுது சுற்றுச் சூழலை பற்றி அதிகம் கவலைப்படுகின்றது. அதிலும் வாகன உலகத்திற்குச் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் கடமை அதிகம். அதை மனதில் வைத்து, வாகன உலகம் மின்சார வாகனத் தயாரிப்பில் அதிகக் கவனம் செலுத்துகின்றது.

 

தற்பொழுது வாகனத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுனங்கள், சிறந்த மின்சார வாகனங்களை விரைவில் சந்தைக்குக் கொண்டு வரவில்லை எனில், அந்த நிறுவனங்கள் எதிர்காலத்தில் சந்தையில் இருந்து காணாமல் போய்விடலாம்.

இதை மனதில் வைத்து பைக் தயாரிப்பில் முண்ணயில் உள்ள ஹார்லி-டேவிட்சன் நிறுவனம், மின் மோட்டார் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.

ஹார்லி-டேவிட்சன்

ஹார்லி-டேவிட்சன்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் மின் மோட்டார் சைக்கிள் ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்தது. எனினும் அது புதிய மின்-பைக்கை ஆரம்பத்தில் இருந்து உருவாக்கப் போவதாக அறிவிக்கவில்லை.

எனவே எந்த நிறுவனம் ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் மின் மோட்டார் தயாரிப்பில் உதவப் போகின்றது என்பது மோட்டார் வாகனச் சந்தையின் விவாதப் பொருளாக மாறி விட்டது. இதற்கான விடை தான் இந்தக் கட்டுரை.

 

 அல்டா மோட்டார்ஸ்

அல்டா மோட்டார்ஸ்

கலிஃபோர்னியாவை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியாளரான அல்டா மோட்டார்ஸ் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டது. மேலும் இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் இளம் வயதினராக உள்ளனர். மேலும் இந்த நிறுவனம் எந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் எதிர் கொள்ளும் உள்கட்டமைப்பு மற்றும் நிதி சார்ந்த பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றது.

மேம்பட்ட திறன்
 

மேம்பட்ட திறன்

கடந்த ஆண்டு முழுவதும், அல்டா அதனுடைய நான்கு வகையான பைக்குகளின் வரம்புகளையும் சக்தியையும் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் அதனுடைய விலையையும் குறைத்துள்ளது.

அமெரிக்கா மட்டும் தான்

அமெரிக்கா மட்டும் தான்

இதுவரை அமெரிக்காவைத் தாண்டி வெளிநாட்டில் விற்பனையைத் தொடங்காத ஆல்டாவின் உள்நாட்டு விற்பனைகளும் அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 2016 - 17 ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் விற்பனை சுமார் 18 மடங்கு அதிகரித்துள்ளது.

அல்டா ரெட்ஷிட்ட் SM

அல்டா ரெட்ஷிட்ட் SM

ரெட் ஷிஃப்ட் எஸ்எம் மாடல் எளிமையான மற்றும் தூய்மையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதனுடைய சராசரி சவாரி உயரம் 35.5 அங்குலம். ஆகும். இதில் மென்மையான பைரெல்லி ரோசோ II டயர்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் உயரமான கைப்பிடிகளும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் இதில் முன்புறம் மற்றும் பின்புற சக்கரங்கள் மற்றும் ஃபெண்டெர்ஸுகளுக்கு இடையில் போதுமான இடைவெளி உள்ளது. இந்த மாடல் வெள்ளை நிறத்தில் மட்டுமே வருகிறது. இந்த மாடலின் முன்புறம் எரிபொருள் டாங்க் இருக்க வேண்டிய இடத்தில் பரவலாகக் குறுக்கு நெடுக்காகச் சிவப்பு நிறம் தெறக்கப்படள்ளதைப் போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது. இதில் சொகுசான கருப்பு நிற இருக்கை பொருத்தப்பட்டுள்ளது.

 

 அதிகத் திறன்

அதிகத் திறன்

இதனுடைய எடை வெறும் 128 கிலோ மட்டுமே. இந்தப் பைக் தற்பொழுது சந்தையில் உள்ள பைக்குகளை விட மிகவும் லேசானது. இது அதிகபட்சமாக 80 மைல்களுக்கு மேலான வேகத்தைத் தொடுகின்றது. இந்தப் பைக்குகளின் 0 விலிருந்து 60 மைல் வேகத்தை எட்டும் நேரத்தை அல்டா நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் சந்தை வல்லுனர்கள் இந்த நேரம் BMW M3 இன் நேரத்தை ஒப்பீட்டளவில் ஒத்திருக்கும் என எதிர்பார்க்கின்றார்கள்.

எதிர்பார்க்கும் முன்னேற்றம்

எதிர்பார்க்கும் முன்னேற்றம்

இதனுடைய மலிவான பேட்டரி வரம்பு இந்தப் பைக்குக்களை ஒரு படி கீழே இறக்கி விடுகின்றது. ஒரு சராசரி வாடிக்கையாளர் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 50 மைல்கள் வரை இதில் பயணிக்கலாம். அதுவே மிகவும் வேகமாகச் செல்லும் வாடிக்கையாளர் சுமார் 40 மைல்கள் வரை மட்டுமே சவாரி செய்ய இயலும். அதுவே நீங்கள் பந்தயத்தில் பங்கு கொண்டால் இந்த வண்டியினுடைய பேட்டரியீன் திறம் சுமார் 20 நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும். இந்த வண்டியை முழுவதுமாகச் சார்ஜ் செய்ய 240 வோல்ட் மின்சாரத்தில் சுமார் 4 மணி நேரம் பிடிக்கும். அதுவே 120 வோல்ட் மின்சாரம் எனில் சுமார் 6 மணி நேரம் பிடிக்கின்றது.

மோட்டார் சைக்கிள்களின் டெஸ்லாவா?

மோட்டார் சைக்கிள்களின் டெஸ்லாவா?

அல்டா ஒரு நல்ல தோற்றமான, செயல்பாட்டுத் திறன் உடைய, வேடிக்கையான மின்சார மோட்டார் சைக்கிளை உருவாக்கியது. இந்தப் பைக்குக்கள் சிறந்ததுதான்.

எனினும் இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் ஒரு மந்திரம் போல மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்ற 'மோட்டார் சைக்கிள்களின் டெஸ்லா' எனக் குறிப்பிடக்கூடிய அளவு மிகச் சிறந்ததல்ல. ஒப்பீட்டளவில் நகரத்தின் உள்ளே குறுகிய பயணம் செய்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கலாம். இது இன்னும் மோட்டார் சைக்கிள் உலகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் இது மோட்டார் உலகில் ஒரு நல்ல தொடக்கமாகக் கருதப்படுகின்றது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

The Tesla of motorcycles Alta Motors: Harley Davidson’s electric future

The Tesla of motorcycles Alta Motors: Harley Davidson’s electric future
Story first published: Tuesday, June 12, 2018, 18:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X