ஊழியர்களால் 'இந்த' நிறுவனத்திற்கு எவ்வளவு லாபம் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் டாப் நிறுவனங்கள் என்றாலே அவரைப் பணம் சம்பாதிக்கும் இந்யதிரங்கள் என்று கூறலாம். இப்படிப் பட்ட நிறுவங்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது நிறுவனத்தின் லாபத்தினைப் பெருக்க இரவு பகல் என்று பாராமல் பாடாப் படுகின்றன.

 

இவர்களின் மாட்டி முழிப்பிதுங்கி வேலை செய்வது ஊழியர்கள். இப்படிப்பட்ட ஒவ்வொரு ஊழியர்களிடம் இருந்தும் அதிக வருவாயினைப் பெறும் டாப் 10 நிறுவனங்கள் பற்றி விளக்கமாக இங்குப் பார்ப்போம்.

ஆப்பிள்

ஆப்பிள்

உலகளவில் தங்களது ஊழியர்களின் உழைப்பில் இருந்து அதிக வருவாயினைப் பெறும் நிறுவனங்களில் முதல் இடத்தினை ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த நிறுவனத்தில் மொத்தமாக 1,16,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சராசரியாக ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவரும் 1.9 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 12.3 கோடி ரூபாய் வருவாயினை அளிக்கின்றனர். அதே நேரம் ஊழியர்களுக்கு அதிகச் சம்பளத்தினை இந்த நிறுவனம் அளிப்பது குறிப்பிடத்தக்கது.

 

பேஸ்புக்

பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனத்தின் சமுக வலைத்தளத்தில் பில்லியினுக்கும் மேற்பட்ட பயனர்கள் உள்ளனர். ஆனாலும் உலகம் முழுவதும் 20,000 ஊழியர்களுடன் மட்டுமே இந்த நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தில் பணிப்புரியும் ஒவ்வொரு ஊழியர்கள் மூலமாகவும் சராசரியாக 1.6 மில்லியன் டாலார் அதாவது 10.4 கோடி ரூபாய் வருவாயினைப் பெறுகின்றது.

 ஆல்ப்பாபெட்
 

ஆல்ப்பாபெட்

கடந்த 5 வருடத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்த போதிலும் இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தினை ஆல்பாபெட் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 70,000 ஊழியர்கள் பணிபுரியும் இந்த நிறுவனத்தில் சராசரியாக ஒவ்வொரு ஊழியரும் 1.3 மில்லியன் டாலர் அதாவது 8.5 கோடி ரூபாய் வருவாயினை அளிக்கின்றனர்.

வெரிசைன்

வெரிசைன்

வெறும் 1,019 ஊழியர்கள் மட்டுமே பணிபுரியும் வெரிசைன் நிறுவனம் இணையதளப் பாதுகாப்பு சேவைகளை வழங்கி வருகின்றது. இங்குப் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களும் 1.2 மில்லியன் டாலர் வரை வருவாயினை நிறுவனத்திற்கு அளிக்கின்றனர்.

விசா

விசா

உலகம் முழுவதும் உள்ள வங்கி நிறுவனங்களுக்குக் கிரெடிட் / டெபிட் கார்டு சேவை அளித்து வரும் விசா நிறுவனத்தில் 11,300 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு ஊழியரும் சராசரியாக 1.1 மில்லியன் டாலர் வரை வருவாயினை அளிக்கின்றனர்.

மாஸ்டர் கார்டு

மாஸ்டர் கார்டு

மாஸ்டர் கார்டு நிறுவனமும் விசா போன்றே கிரெடிட் / டெபிட் கார்டு சேவை அளித்து வருகின்றது. இங்கு 10,300 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். சராசரியாக 906,000 டாலர்கள் வருவாயினை ஒவ்வொரு ஊழியர்களும் அளிக்கின்றனர். இது இந்திய மதிப்பில் 5.85 கோடி ரூபாய் ஆகும்.

பிராட்காம்

பிராட்காம்

நெட்வொர்க்கின் சேவை அளித்து வரும் பிராட்காம் 1991-ம் ஆண்டுத் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக 843,000 டாலர் இந்திய மதிப்பில் 5.39 கோடி ரூபாய் வருவாயினை அளிக்கின்றனர்.

லாம் ரிசர்ச்

லாம் ரிசர்ச்

செமிகண்டக்டர் போன்ற பொருட்களைத் தயாரிக்கும் லாம் ரிசர்ச் நிறுவனத்தில் 9,100 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இங்குப் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களிடம் இருந்தும் 785,000 டாலர் வருவாயினை லாம் ரிசர்ச் பெறுகின்றது.

குவால்காம்

குவால்காம்

மொபைல் போன் மற்றும் மொபைல் போன் சிப்புகளைத் தயாரித்து வரும் குவால் நிறுவனத்தில் 33,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இங்குப் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியர்களும் 772,000 டாலர் வருவாயினை நிறுவனத்திற்கு அளிக்கின்றனர்.

மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட்

டாப் 10 பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் 1,24,000 ஊழியர்களில் ஒவ்வொருவரும் சராசரியாக 7,48,000 டாலர் வருவாயினை நிறுவனத்திற்கு அளிக்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

These top companies gets crore's of income from employee

These top companies gets crore's of income from employee
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X