நெட்வொர்க் பிரச்சனையால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,800 இழப்பீடு.. லண்டனில் அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டனில் கடந்த வாரம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நெட்வொர்க் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த த்ரீ மொபைல் நெட்வொர்க்கினை சேர்ந்த வாடிக்கையாளர்கள் சுமார் 1,800 ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளனராம்.

 

இந்த நிறுவனத்தின் 10 மில்லியன் வாடிக்கையாளர்கள், நிறுவனத்தினை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனராம்.

இந்த நிலையில் தங்களது தொலைபேசியில் பலர் தொலைபேசி சமிக்கை இல்லாமலும், இணைய இணைப்புகள் இல்லாமலும் பல மணி நேரம் இல்லாமல் தவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு

இந்த த்ரீ மொபைல் நெட்வொர்க் பிரச்சனையால் பல மில்லியன் வாடிக்கையாளர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக நிறுவனம் தான் இழப்பீடு தர வேண்டும் என்றும், இதில் த்ரீ மொபைல் நெட்வொர்க்கினை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தனித் தனியாக வழக்கு தொடுத்திருந்தனராம். இந்த நிலையில் இவர்கள் தனித் தனியாக இந்திய மதிப்பில் சுமார் 1,800 ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளனர் என்று கூறப்படும் நிலையில், நெட்வொர்க் நிறுவனம் இவர்களுக்கு வழங்கிய தொகையை எவ்வளவு என்று வெளிப்படையாக கூறவில்லையாம்.

 வாடிக்கையாளர்களின் இழப்புக்கு ஏற்ப இழப்பீடு

வாடிக்கையாளர்களின் இழப்புக்கு ஏற்ப இழப்பீடு

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொருவரும் தனித் தனியாக மதிப்பீடு செய்யப்படுவார்கள் என்றும், இவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டின் அளவு இருக்கும் என்றும், ஒவ்வொரு வாடிக்கையாளரின் இழப்புக்கு ஏற்றவாறு நிர்ணயிக்கப்படும் என்றும், இது ஒரு நாடு தழுவிய பிரச்சனை என்றும் கூறியுள்ளனர். மேலும் இந்த இழப்பீட்டுக்கு உண்மையில் எவ்வளவு வழங்கப்படுகிறது என்றும் இதுவரை உண்மை நிலவரம் தெரியவில்லை என்றும், எனினும் சில வாடிக்கையாளர்களுக்கு ரூ.1800 தரப்பட்டுள்ளது என்றும் MoneySavingExpert அறிக்கை கூறியுள்ளது.

பணத்தினை திரும்ப பெற வழி உள்ளது
 

பணத்தினை திரும்ப பெற வழி உள்ளது

இது குறித்து அறிய வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் இருந்து 333 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும், இதே ஆன்லைன் சாட்டிங் வசதியும் உண்டு என்றும் த்ரீ மொபைல் நெட்வொர்க் இணைய தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நுகர்வோர் சட்டம் 2015ன் படி, நியாயமான திறமையுடனும், அக்கறையுடனும் மேற்கொள்ளப்பட வேண்டிய சேவைகள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லையெனில் செயலிழப்பின் விளைவாக, உங்கள் தொலைபேசி இணைப்பை பயன்படுத்த முடியாமல் போனதற்கு நீங்கள் முழுமையான பணத்தை திரும்ப பெறலாம் என்றும் அந்த சட்டத்தின் மூலமாக கூறப்பட்டுள்ளது.

இதையெல்லாம் கவனிங்க

இதையெல்லாம் கவனிங்க

மேலும் நீங்கள் இதில் நினைவில் கொள்ள வேண்டியது என்னவெனில் உங்கள் தொலைபேசியில் வழக்கமான செயல்பாடுகளில் எதையும் பயன்படுத்த முடியாததன் விளைவாக, நீங்கள் உங்கள் பாக்கெட்டிலிருந்து எவ்வளவு செலவு செய்தீர்களே, அதை நிவர்த்தி செய்ய உரிமை உண்டு என்றும் கூறப்படுகிறது. ஆக உங்களது செயல்பாட்டின் மூலம் உங்களுக்கு எவ்வளவு நேரம் இழப்பு, இதே போல் நிதி செலவு, இந்த நடவடிக்கையினால் ஏற்பட்ட நஷ்டம், அதுவும் மீண்டும் தயாராகும் வரை ஆகும் செலவு இதையெல்லாம் கண்காணியுங்கள் என்றும் அந்த நாட்டு சட்டம் சொல்கிறதாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: mobile fines
English summary

Three mobile network customers claimed Rs.1,800 for some network issue

Three mobile network customers claimed Rs.1,800 for some network issue, and company says Customers can call 333 from their mobile or they can use the live chat facility on Three’s UK website.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X