அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு மக்களுக்கு அளிக்கப்படும் 85,000 ஹொச்1பி விசாவை லாட்டரி முறையில் தேர்வு செய்யப்படாமல் ஊதியத்தின் அடிப்படையில் வழங்க முடிவு செய்துள்ள நிலையில், இதற்கான இறுதி விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் ஹோம்லேண்டு செக்யூரிட்டி அமைப்பு விசா வழங்கும் முறையும், அதற்கான தேர்வுகளை வரைமுறை செய்யும் இறுதிக்கொள்கையை வடிவமைக்குமாறு அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற அமைப்புக்கு அறிவுறுத்தியுள்ளது.
இப்புதிய வரைமுறையின் கீழ் தான் இனி ஹெச்1பி விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

டிரம்ப் அரசு
டிரம்ப் அரசின் புதிய ஊதிய அடிப்படையிலான ஹெச்1பி விசா வழங்கும் முறையை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கு டிரம்ப் அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தது. இதைத் தொடர்ந்து இப்புதிய கொள்கை கட்டாயம் நடைமுறைப்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் அரசு அமைப்புகள் உள்ளது.

ஹோம்லேண்டு செக்யூரிட்டி அமைப்பு
இந்நிலையில் அமெரிக்காவின் ஹோம்லேண்டு செக்யூரிட்டி அமைப்பு ஊதியம் அடிப்படையில் புதிய விசா வழங்கும் முறையையும், அதற்கான தேர்வுகளை வரைமுறை செய்யும் இறுதிக்கொள்கையையும் வடிவமைக்குமாறு அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற அமைப்புக்கு அறிவுறுத்தியுள்ளது. இது விரைவில் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.

புதிய கொள்கை
இப்புதிய கொள்கையின் கீழ் ஒருவரின் கல்வி மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் Level 1 (entry level), Level 2 (qualified), Level 3 (experienced), Level 4 (fully competent) என நான்கு பிரிவுகளின் கீழ் விசா விண்ணப்பங்களைப் பிரிக்கும். இந்தப் பிரிவின் கீழ் இருக்கும் விசா விண்ணப்பங்களை அமெரிக்காவின் ஊழியர்கள் தரவுகளின் சம்பளத்தை முதன்மையாகக் கொண்டு விசா வழங்குவார்கள்.

இந்தியர்களுக்குப் பாதிப்பு
பொதுவாகப் பிற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் சம்பள அளவுகள் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தாலும், திறமை அதிகமாக இருக்கும் காரணத்தாலும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து அதிக ஊழியர்களைப் பணியில் சேர்த்து வந்தது.

அதிகச் சம்பளம்
இப்புதிய கொள்கையால் அதிகச் சம்பளம் கொண்ட ஊழியர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் காரணத்தால் இந்தியர்கள் வெளிநாட்டுக்குச் செய்யும் வாய்ப்பு பெரிய அளவில் பாதிக்கும்.
குறிப்பாக ஐடி துறையில் இருக்கும் துவக்க நிலை ஊழியர்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு வாய்ப்புகள் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

வெளிநாட்டு மாணவர்கள்
அவை அனைத்தையும் தாண்டி வெளிநாட்டுக்குச் சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் அனைவரும் லெவல் 1 அதாவது என்டரி பிரிவில் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் பெரிய அளவிலான வாய்ப்புகளை இழக்க நேரிடம்.
இதுகுறித்து கடுமையான விமர்சனத்தை அமெரிக்க அரசு எதிர்கொண்டது.

அமெரிக்க அரசின் பதில்
இந்த விமர்சனத்திற்கு அமெரிக்க அரசு, அமெரிக்கக் கல்லூரிகளில் படிப்பை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்குக் கிடைக்கும் 3 வருட OPT காலத்தில் பெறும் அனுபவத்தின் வாயிலாக அதிகச் சம்பளம் பெறும் லெவல் 3 அல்லது 4வது பிரிவுக்குச் செல்ல முடியும் எனப் பதில் அளித்துள்ளது.

ஜோ பிடன் அரசு
ஆனால் இந்த விதிமுறையைப் புதிதாக அமைய உள்ள பிடன் அரசால் கண்டிப்பாக ரத்து செய்யவோ அல்லது மறுசீரமைப்புச் செய்து அனைவருக்குமான வாய்ப்புகளை அளிக்கவோ முடியும்.
ஜோ பிடன் அரசு இந்தியாவிற்கு மிகவும் சாதகமாக இருக்கும் எனப் பெரிய அளவில் நம்பப்படும் நிலையில், இந்த விசா முறையும் ரத்து செய்யப்படும் என நம்பப்படுகிறது.

புதிய பிரச்சனை
ஆனால் அதற்கான வாய்ப்புகள் சற்று குறைவாகவே உள்ளது எனத் தெரிகிறது. இதற்குக் காரணம் அமெரிக்க நீதிமன்றத்தில் புதிய விசா கொள்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ளதால் மட்டுமே தற்போது புதிய விசா கொள்கை அமலாக்கம் செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.