நம்ம ட்ரம்ப் சும்மா இருக்கமாட்டார் போலருக்கே! அமெரிக்க நடவடிக்கையால் கடுப்பில் கனடா! என்ன ஆச்சு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான பஞ்சாயத்து இன்று சர்வதேச அளவில் ஒரு பெரிய பிரச்சனையாக புகைந்து கொண்டு இருக்கிறது.

 

இந்த பிரச்சனைத் தீயை முதலில் பற்ற வைத்தது அமெரிக்கா தான். 2018-ம் ஆண்டு காலத்தில், சீனாவில் இருந்து, அமெரிக்கா இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது வரி விதித்தது அமெரிக்கா.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தான், சீனா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது.

வர்த்தகப் போர்

வர்த்தகப் போர்

மெல்ல அமெரிக்கா வரி விதிக்க, அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சீனா வரி விதிக்க என வர்த்தகப் பிரச்சனை, வர்த்தகப் போராக மாறிவிட்டது. வர்த்தகப் போர் இன்றைக்கு வரை ஒரு சுமூகமான முடிவுக்கு வரவில்லை. அப்படி ஒரு முடிவுக்கு வருவதற்குள்ளேயே கொரோனா வைரஸ் வந்து, ஒட்டு மொத்த ஆட்டத்தையும் களைத்துவிட்டது.

கனடா மீது வரி விதிப்பு

கனடா மீது வரி விதிப்பு

ட்ராகன் தேசமான சீனா உடனான வர்த்தகப் பிரச்சனைகளை அமெரிக்கா சுமூகமாக முடிப்பதற்குள், தற்போது கனடா உடன் இன்னொரு வர்த்தகப் பிரச்சனையைத் தொடங்கி இருக்கிறது. கனடாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் கனடா நாட்டின் சில அலுமினியப் பொருட்களுக்கு 10 % வரி விதித்து இருக்கிறது.

எதற்கு எல்லாம் 10 % வரி
 

எதற்கு எல்லாம் 10 % வரி

அமெரிக்க தடாலடியாக விதித்து இருக்கும் இந்த வரி, கனடா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யபப்டும் raw aluminum மற்றும் un-alloyed aluminum போன்றவைகளுக்கு தான் பொருந்துமாம். மற்றபடி downstream aluminum போன்றவைகளுக்கு எல்லாம் பொருந்தாதாம். இந்த திடீர் 10 % வரிக்கு ஒரு பதிலையும் சொல்லி இருக்கிறார் ட்ரம்ப்.

சொன்னபடி நடந்து கொள்ளவில்லை

சொன்னபடி நடந்து கொள்ளவில்லை

சில பல மாதங்களுக்கு முன், கனடா நாட்டின் அலுமினிய துறை, அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்து, அமெரிக்க அலுமினிய துறையில் இருக்கும் வேலைகளை காலி செய்யக் கூடாது என்கிற நம்பிக்கையின் அடிப்படையில், கனடா நாட்டின் மீது விதித்து இருந்த சில வரிகளை விலக்கிக் கொள்ள அமெரிக்க சம்மதித்ததாம்.

ஏன் இந்த கூடுதல் வரி

ஏன் இந்த கூடுதல் வரி

அமெரிக்கா தன் நாட்டின் அலுமினிய தொழிற்சாலைகளைப் பாதுகாக்க, கனடா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினிய பொருட்கள் மீது, 10 சதவிகிதம் வரி விதித்து இருப்பது அவசியம். கனடா நாட்டு அலுமினிய உற்பத்தியாளர்கள் சொன்ன படி நடந்து கொள்ளவில்லை என, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு கூட்டத்தில் பேசி இருக்கிறார்.

அரசியல் ஆதாயம்

அரசியல் ஆதாயம்

இப்படி திடீரென கனடா நாட்டின் அலுமினியம் மீது வரி விதித்து இருப்பது, அமெரிக்காவில் வாக்களிக்கும் மக்களுக்கு, தங்களின் வேலைக்காக அதிபர் ட்ரம்ப் போராடுவது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தலாம். ட்ரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தால், இதே வர்த்தகக் கொள்கைகளை தொடருவார் எனவும் சொல்வதாக அமையலாம் எனவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கனடா தரப்பு

கனடா தரப்பு

அமெரிக்காவின் இந்த கூடுதல் வரி, ஏற்கனவே கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கும் கனடா நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். அமெரிக்காவின் நித வரி விதிப்புக்கு, கனடா நாடும் தக்க பதிலடி கொடுக்கும் எனச் சொல்லி இருக்கிறார் கனடா நாட்டின் துணைப் பிரதமர் கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட் (Chrystia Freeland).

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Trump imposes tariffs on Canadian aluminum Canada will retaliate US

Donald Trump impose 10 % tariff on Canadian aluminium import. The Canada deputy prime minister said that they will retaliate america for the tariff.
Story first published: Saturday, August 8, 2020, 18:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X