வாஷிங்டன் : வாய்க்கால் வரப்பு பிரச்சனையில் தற்போது உடைந்துள்ளது ஈரானின் மண்டைதான். ஆமாங்க.. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி தீயை வைப்பது போல அடுத்தடுத்து ஒவ்வொரு பிரச்சனையும் ஈரானுக்கு எதிராகவே முடிகிறது.
யார் எங்கு எந்த பிரச்சனையை செய்தாலும் அது ஈரானின் மீதே குற்றம் விழுகிறது. இந்த நிலையில் ஹார்மூஸ் ஜலசந்தி மேல் பறந்த இரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரித்துள்ளார்.
இது எரிகிற நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றி எரிய வைப்பது போல, தற்போது துளிர் விட்டு எரிய தொடங்கியுள்ளது இந்த பிரச்சனை.

எங்ககிட்ட வந்துச்சு அதான் பாதுகாப்புக்காக சுட்டோம்?
ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிக அருகே அதாவது கிட்டதட்ட 1000 யார்ட்கள் தொலைவில் இருந்த ஈரானின் ஆளில்லா விமானம் பறந்து வந்ததால், அமெரிக்க தரப்பு தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு பதிலடியா?
எனினும் ஈரானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் செய்தி குறித்து எந்த தகவலும் இல்லை என்று ஈரான் கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இது ஈரானுக்கு தக்க பதிலடியாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

எண்ணெய் கப்பலை நாங்கள் கடத்த முயன்றோம்?
அதோடு வளைகுடா பகுதியில் எண்ணெயை கடத்த முயன்றதாக ஒரு வெளிநாட்டு எண்ணெய் கப்பல் மற்றும் அதில் இருந்த 12 பணியாளர்களை தாங்கள் பிடித்து வைத்துள்ளதாகவும் ஈரான் நாட்டு பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளும் ஒளிப்பரப்பானது. இதனால் சரியான கடுப்பான டிரம்ப் இதை செய்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் அருகில் விமானம்?
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் இது குறித்து கூறுகையில், ஹார்மூஸ் ஜலசந்தியில், நடந்த தாக்குதல் பற்றி நான் கூறுகிறேன். அமெரிக்க கப்பலின் பாதுகாப்பையும் அச்சுறுத்தும் வகையில் கிட்டதட்ட 1000 யார்ட்கள் தொலைவில் அந்த ஆளில்லா விமானம் பறந்தது. இது கப்பலின் பாதுகாப்புக்கு அச்சறுத்தலாக உள்ளது என பலமுறை எடுத்துக் கூறியும் அந்த ஆளில்லா விமானம் விலகி செல்லவில்லை. இதனால், தற்காப்பு நடவடிக்கைக்காக அந்த டிரோன் உடனடியாக சுட்டு வீழ்த்தப்பட்டது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

இப்படித்தான் இருக்குமோ?
கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை, ஈரான் சுட்டு வீழ்த்தியாக குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அக்கால கட்டத்தில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் மீது ராணுவ தாக்குதல் மேற்கொள்வதற்கு உத்தரவிட்டதாகவும், பின்பு உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாகவும் கூறியுள்ளார். ஆமாங்க.. அன்னைக்கு பதிலடி கொடுக்க முடியலா அதான் இன்னைக்கு கொடுத்திட்டாரே.

தொடர்ந்து எண்ணெய் கப்பல்களுக்கு பிரச்சனை?
ஒரு புறம் தொடர்ந்து ஹார்மூஸ் ஜலசந்தியில் தொடர்ந்து பல நாட்டு, எண்ணெய் கப்பல்களுக்கும் பிரச்சனை தொடர்ந்து நிலவிக் கொண்டே தான் வருகிறது. இந்த நிலையில் இதை ஈரான் தான் செய்தது என அமெரிக்கா மறுபுறம் தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதும், ஈரான் இதை மறுத்து வருவதும் தொடர் கதையாகவே மாறி வருகிறது.

தொடரும் பிரச்சனைகள்?
ஒரு புறம் அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தத்தில் வெளி வந்ததிலிருந்தே, இந்த இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலையில் ஒரு புறம் அமெரிக்கா பேச்சு வார்த்தைக்கு வந்தால் அதை ஈரான் ஏற்றுக் கொள்வதாக இல்லை. ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைத்தாலவது அமைதியாக இருக்கும் என்றும் ஈரானின் மீது அடுத்தடுத்த பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. எனினும் இதற்கெல்லாம் ஈரான் மசிந்ததாக தெரியவில்லை. மீண்டும் அமெரிக்காவை எதிர்த்துக் கொண்டே, யுரேனியம் ஒப்பந்த அளவை விட தன்னிடம் அதிகமாக இருப்பதாகவும் கூறிக் கொண்டது.

முடிவு தான் என்ன?
இந்த நிலையில் இந்த இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. தொடரும் இந்த பிரச்சனைக்கு என்னதான் முடிவு? அடுத்த என்ன நடக்கப்போகிறதே பதட்டத்திலேயே இந்த இரு நாட்டு பிரச்சனைகளும் நீடித்து வருகிறது.