அமெரிக்கா சொன்ன நல்ல செய்தி.. இந்தியாவுக்கு சாதகமா, பாதகமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: உலகின் இரு பெரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் இரண்டு ஆண்டுகளாக வர்த்தக போர் நடந்து வந்தது.

 

இதன் விளைவாக அமெரிக்கா சீனா பொருட்களுக்கு வரி விதிப்பதும், இதே சீனா அமெரிக்கா பொருட்களுக்கு வரி விதிப்பதும் தொடர்கதையாகி இருந்து வந்தது.

கிட்டதட்ட இரு ஆண்டுகளாக நடந்து வரும் பேச்சு வார்த்தை, தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

நீங்கள் ஆன்லைன் வங்கி சேவைகளை உபயோகப்படுத்துபவரா.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..!

வர்த்தக போர் ஆரம்பம்

வர்த்தக போர் ஆரம்பம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், சீனா நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக குற்றம் சாட்டி வந்தார். அதோடு சீனா அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களையும், தொழில் நுட்பங்களையும் திருடி வருவதாகவும் குற்றம் சாட்டினார். இதுவே இவ்விரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் ஆரம்பமாக அமைந்தது. இந்த இரு தரப்பு வர்த்தக போரும் நீயா நானா என்ற அளவில் விருவிருப்பாக இருந்து வந்தது.

சீனாவின் குற்றச்சாட்டு நிராகரிப்பு

சீனாவின் குற்றச்சாட்டு நிராகரிப்பு

ஒரு புறம் அமெரிக்கா அரசு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதித்தது. ஆனால் இந்த பகிரங்கமான டிரம்பின் குற்றச்சாட்டுகளை சீன அதிபர் ஜின்பிங் நிராகரித்தார். அது மட்டுமின்றி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கிற வகையில், சீனாவில் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தார். இதற்கு பதில் கொடுக்கும் வகையில் சீனாவும் வரி அதிகரிப்பை செய்தது. இந்த நிலையிலேயே இரு நாடுகளும் மாறி மாறி வரிகளை உயர்த்தி வந்தன.

உலகளவில் பொருளாதார மந்தம்
 

உலகளவில் பொருளாதார மந்தம்

ஒரு புறம் இந்த நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை சர்வதேச அளவில் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. இந்த வர்த்தக போர் உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு ஒரு காரணமாகவும் கூறப்பட்டது. இதனால் உலக நாடுகள் பெரும்பாலான நாடுகளும், வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர அறிவுறுத்தின. இதனால் உலக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு வருவதாகவும் குற்றம் சாட்டின.

பேச்சு வார்த்தை

பேச்சு வார்த்தை

இப்படியாக விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும், உலக நாடுகள் அனைத்தும் கூறி வந்தன. இதையொட்டி இந்த இரு நாடுகளின் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்த பேச்சு வார்த்தையானது இன்று நேற்றல்ல சுமார் ஒன்றறை ஆண்டுகாலமாக நடத்தி வந்த நிலையில் தற்போது தான், சுமூகமான ஒரு நிலை வந்துள்ளது.

சாதகமான ஒப்பந்தம்

சாதகமான ஒப்பந்தம்

இரு நாடுகளுக்கு இடையேயான முதல் கட்ட ஒப்பந்தம் இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று அமலுக்கு வரவிருந்த சீன பொருட்கள் மீதான 15 சதவிகித அமெரிக்க வரி விதிப்பு ரத்தாகியுள்ளது. மேலும் இது தவிர இரண்டாம் கட்ட ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தையை, அடுத்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிகிற வகையில் காத்திருக்காமல் உடனடியாக தொடங்குவோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வர்த்தகர்கள் வரவேற்பு

வர்த்தகர்கள் வரவேற்பு

தற்போது முதல் கட்ட ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருப்பதற்கு, அனைத்து தரப்பிலும் சூமூகமான நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் அமெரிக்க விவசாயிகளும், சில்லரை வியாபாரிகளும் இதற்கு மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் சீன பொருட்கள் மீதான 15 சதவிகித வரி விதிப்பு ரத்தாகமல் இருந்திருந்தால், கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் அமெரிக்க மக்கள் சீன ஆடைகள், ஸ்மார்ட்போன்கள், பொம்மைகள் போன்றவற்றை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டி இருந்திருக்கும். இதனால் விலை மக்களிடையே இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

என்ன சொல்கிறது சீனா?

என்ன சொல்கிறது சீனா?

அமெரிக்காவின் இந்த முன்னேற்ற நடவடிக்கையில் திருப்தி அடைந்துள்ள சீனா, அமெரிக்காவில் இருந்து கூடுதல் அளவு சோயாபீன், பால் பொருட்கள், பிற விவசாய பொருட்களை வாங்க முன்வந்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இரு தரப்பு மோதல் ஏற்படுவதற்கு முன்பாக சீனா தான் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய விவசாய சந்தையாக இருந்தது.

சீனாவின் ஏற்றுமதி வீழ்ச்சி?

சீனாவின் ஏற்றுமதி வீழ்ச்சி?

கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடும்போது, சுமார் 1.1% அளவுக்கு சீனாவின் ஏற்றுமதி குறைந்துள்ளது. இதுமட்டும் அல்ல கடந்த நான்கு மாதங்களாக சீனாவின் ஏற்றுமதி தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. இதே கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவுக்கான சீன ஏற்றுமதி 23% அளவுக்கு குறைந்துள்ளது. இந்த நிலையில் தற்போது இருநாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தமானது, இனி ஏற்றுமதிகளை ஊக்குவிக்க தொடங்கும்.

பொருளாதாரம் மீண்டு வரும்?

பொருளாதாரம் மீண்டு வரும்?

அமெரிக்கா சீனா வர்த்தக போர் சற்று சுமூகமான நிலையை எட்டியுள்ள நிலையில், நலிவடைந்துள்ள பொருளாதாரம் மீளும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் எனினும் இது மற்ற நாடுகளுக்கு சற்று பாதகமான செய்தியாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமெரிக்கா சீனா பிரச்சனையால் அன்னிய முதலீடுகள் பல நாடுகளுக்கு சிதறிய நிலையில், தற்போது அவையெல்லாம் மீண்டு வரும். மேலும் இதனால் மற்ற நாடுகளில் உள்ள முதலீடுகள் வெளியேற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா?

இந்தியாவுக்கு சாதகமாக இருக்குமா?

ஏற்கனவே பொருளாதார மந்த நிலையில் இருக்கும் இந்தியாவுக்கு இது சற்று பாதகமான செய்தியாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள அன்னிய நேரடி முதலீடுகள் வெளியேற வாய்ப்புள்ளது. அமெரிக்கா சீனா பிரச்சனையால் அமெரிக்காவிலிருந்து வெளியேறிய சீனா நிறுவனங்கள், சீனாவிலிருந்து வெளியேறிய மற்ற நிறுவனங்கள் இந்தியாவில் நிறுவ விருப்பம் தெரிவித்தன. ஆனால் இனி இதெல்லாம் நிறைவேறுவது சாதகமா என்று சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US- china trade war: America agree to china’s demand

China and the America have agreed a first phase one economic and trade agreement based on the principle of equality and mutual respect.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X