அமெரிக்க கனவில் இருக்கும் IT ஊழியர்களுக்கு சிக்கல் வரலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெக்னாலஜி, ஐடி போன்ற துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு அமெரிக்காவில் வேலை செய்வது ஒரு பெரிய கனவாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியர்களளாகிய நாம், அமெரிக்காவை அப்படி மோகித்துக் கொண்டு இருக்கிறோம்.

 

இந்தியாவில் இருந்து ஒரு நபர், அமெரிக்காவுக்குச் சென்று வேலை பார்க்க வேண்டும் என்றால் பெரிதும் பயன்படுத்துவது H1B விசாக்கள் தான்.

இந்த விசாக்கள் தொடர்பான சட்ட திட்டங்கள், கட்டணங்கள் என பல பிரச்சனைகள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இப்போது இந்த பிரச்சனைகளுக்கு மேல், அமெரிக்காவின் தொழிலாளர் துறை சம்பளம் தொடர்பாக ஒரு பரிந்துரை செய்து இருக்கிறது.

Paytm CEO காரசார பேச்சு! கூகுளுக்கு எதிரான போராட்டத்தில் எல்லா வழிகளும் திறந்து இருக்கு!

US Department of Labour

US Department of Labour

அமெரிக்காவின் தொழிலாளர் துறை, US (Department of Labour) H1B விசா மற்றும் வேலை சார்ந்த பச்சை அட்டை தாரர்களுக்கான (employment-based Green Card holders) சம்பளம் தொடர்பாக (wage conditions), Office of Management and Budget-க்கு ஒரு பரிந்துரை செய்து இருக்கிறார்களாம். இந்த பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டு, அனுமதி கொடுத்தால், உடனடியாக அமலுக்கு வந்துவிடுமாம்.

சம்பளம்

சம்பளம்

இந்த சம்பள விவகாரம் பற்றிய முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. ஒருவேளை, H1B விசாதாரர்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனச் சொன்னால், எல்லா ஐடி கம்பெனிகளும் இந்த விதியை கடைபிடிக்க வேண்டி இருக்கும். இதனால் ஐடி கம்பெனிகளுக்கு செலவு அதிகரிக்கும்.

H1B விசாவில் இந்தியர்கள்
 

H1B விசாவில் இந்தியர்கள்

இந்த H1B விசாவால் அதிகம் பயன் அடையும் கம்பெனிகள் ஐடி துறை சார்ந்தவைகள் தான். ஒரு ஆண்டுக்கு சுமாராக 1.8 லட்சம் H1B விசாக்கள் வழங்கப்படுகின்றன. அதில் சுமாராக 85,000 விசாக்களை ஐடி கம்பெனிகளே அள்ளிக் கொள்கிறார்கள். இந்த ஒட்டு மொத்த 1.8 லட்சம் விசாக்களில் சுமாராக 1 லட்சம் விசாக்களை நம் இந்தியர்கள் மட்டுமே பெறுகிறார்கள்.

கம்பெனிக்கு பாதிப்பு

கம்பெனிக்கு பாதிப்பு

ஏற்கனவே, H1B விசா கட்டணங்கள் அதிகரித்து இருக்கின்றன. கடந்த இரண்டு வருடங்களில், H1B விசாதாரர்களின் சராசரி சம்பளம் 2016 - 17-ல் 78,120 டாலரில் இருந்து 2018 - 19-ல் 90,730 டாலராக அதிகரித்து இருப்பதாகச் சொல்கிறது ஹெச் டி எஃப் சி அறிக்கை. இப்படி கம்பெனிகள் கூடுதல் செலவு செய்து நம் இந்தியர்களை H1B விசாவில் வேலைக்கு எடுப்பதற்கு பதிலாக, அமெரிக்காவில் அமெரிக்கர்களையே வேலைக்கு எடுப்பது அதிகரித்து இருக்கிறது.

இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ்

அமெரிக்காவில், அமெரிக்கர்களை வேலைக்கு எடுப்பது வருங்காலத்தில் அதிகரிக்கலாம் என்கிறது மணி கண்ட்ரோல் வலைதளம். நம் இந்தியக் கம்பெனியான இன்ஃபோசிஸ் (Infosys) அடுத்த 2 ஆண்டுகளுக்குள் 12,000 பேரை வேலைக்கு எடுக்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. ஏற்கனவே இன்ஃபோசிஸ் கம்பெனியில் 13,000 அமெரிக்கர்கள் வேலை பார்க்கிறார்கள். டிசிஎஸ் கம்பெனியின் 20,000 அமெரிக்கர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்தியர்களுக்கு சிக்கல் வரலாம்

இந்தியர்களுக்கு சிக்கல் வரலாம்

இப்படியே போனால், H1B விசா மூலம் அமெரிக்காவுக்குள் நுழையும் இந்தியர்களுக்கு, வேலை கிடைப்பது எல்லாம் கணிசமாக குறையலாம். இவை எல்லாமே, அமெரிக்க தொழிலாளர் துறையின் பரிந்துரையிலும், அதை அனுமதிப்பவதிலும் தான் இருக்கிறது. அமெரிக்க கனவுகளோடு இருக்கும் ஐடி இளைஞர்களுக்கு இனி யார் துணை நிற்பார்களோ தெரியவில்லை நல்லது நடக்கும் என நம்புவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US Department of Labor submit a proposal to increase the H1B visa wages

The American Department of Labor submitted a proposal to the white house to increase the H1B visa wages.
Story first published: Tuesday, September 22, 2020, 19:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X