ஹெச்-1பி, எல்-1 விசா கட்டணங்கள் இரட்டிப்பு.. கண்ணீர் வடிக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: அமெரிக்காவில் 9/11 ஹெல்த்கேர் திட்டம் மற்றும் பயோமெட்ரிக் திட்டத்திற்கு நிதி சேர்க்க அந்நாட்டு அரசு ஹெச்-1பி மற்றும் எல்-1 விசா கட்டணத்தை 4,500 டாலர் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டின் 1.1 டிரில்லியன் டாலர் செலவினத் திட்டத்தில், அமெரிக்கக் காங்கிரஸ் அளித்த மனுவின் படி ஹெச்-1பி விசா கட்டணத்தை 4,000 டாலராகவும், எல்-1 விசாவிற்கான கட்டணத்தை 4,500 டாலராகவும் உயர்ந்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுக் கூடிய வரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது.

1.1 டிரில்லியன் டாலர் செலவினத் திட்டத்திற்கான வாக்கெடுப்பு அமெரிக்கா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பதிவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு இந்தக் கட்டணம்..?

யாருக்கு இந்தக் கட்டணம்..?

அமெரிக்கச் சந்தையில் இயங்கும் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கு அதிகமான ஹெச்-1பி மற்றும் எல்-1 விசா வைத்துள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தப் புதிய கட்டணம் பொருந்தும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

தற்போது புதிய கட்டணங்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நிறுவனங்களைப் பற்றி எவ்விதமான குறிப்புகளும் இல்லை. ஆனால் மொத்த கட்டண விதிப்பும் இந்திய ஐடி நிறுவனங்களைப் பாதிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதே இதன் சிறப்பு என இந்திய ஐடி நிறுவனங்கள் கூறுகிறது.

10 வருடம்..

10 வருடம்..

மேலும் இந்திய புதிய கட்டணம் அடுத்த 10 வருடத்திற்கு நிலையாக இருக்கும் எனவும் அமெரிக்க அரசு தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதுவரை அதன் கால அளவுகள் 5 வருடமாக இருந்தது. செப்டம்பர் 30ஆம் தேதியில் முடிவடைந்த கட்டண விதிப்பின் படி ஹெச்-1பி மற்றும் எல்-1 விசா பெற வெறும் 2000 டாலர் மட்டுமே வசூல் செய்து வந்தது.

நாஸ்காம்

நாஸ்காம்

இந்திய ஐடி நிறுவனங்கள் அமெரிக்கக் கருவூல அமைப்பிற்கு வருடத்திற்கு விசாவிற்கான கட்டணமாக 70-80 மில்லியன் டாலர் வரை செலுத்தி வருகிறது. தற்போது கட்டண உயர்வால் அதன் அளவுகள் 1.4 -1.6 பில்லியன் டாலர் வரை உயரும் என எதிர்பார்ப்பதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது.

நிதி வைப்பு

நிதி வைப்பு

விசா கட்டண உயர்வின் மூலம் திரட்டப்படும் சுமார் 1 பில்லியன் டாலர் நிதியை அமெரிக்க அரசு தனது 9/11 ஹெல்த்கேர் திட்டத்திற்காக ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது.

மோடி

மோடி

மேலும் பிரதமர் நரேந்திர மோடி விசா கட்டண உயர்வு குறித்தும், இந்திய ஐடி நிறுவனங்களின் பாதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா-வை நேரடியாகத் தொடர்புகொண்டார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US to double H1-B, L-1 visa fee to upto $4,500 for Indian firms

The US Congress has imposed a special fee of up to $4,500 on the H-1B and L-1 visas popular among Indian IT companies to fund a 9/11 healthcare act and biometric tracking system.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X