கிரீன் கார்டு பெறுவதில் புதிய தளர்வு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் விசா மற்றும் குடியுரிமை விதிகளில் இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வெளிநாட்டவர்களுக்குப் பெரிய அளவிலான உதவிகளைச் செய்து வருகிறது.

 

இதில் மிகவும் முக்கியமாக டொனால்டு டிரம்ப் ஆட்சி காலத்தில் விதிக்கப்பட்ட கடுமையான ஹெச்1பி விசா கட்டுப்பாடுகளை, படிப்படியாக ஜோ பைடன் அரசு நீக்கி பழைய முறைகளை மீண்டும் அமலாக்கம் செய்தது. இதன் மூலம் அதிகளவில் அமெரிக்க நிறுவனங்களும் வெளிநாட்டு மக்களும் நன்மை அடைந்தனர்.

பொருளாதாரத்தை மேம்படுத்த வேக்சின் தான் மருந்து.. நிர்மலா சீதாராமன் அதிரடி..!

தற்போது அனைத்திற்கும் மேலாகக் கிரீன் கார்டு அதாவது அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமை பெறுவதற்கு வெளிநாட்டவர்களுக்கு மிகப்பெரிய சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பல லட்சம் இந்தியர்கள் பெரிய அளவில் நன்மை அடைய உள்ளனர்.

அமெரிக்க அரசு

அமெரிக்க அரசு

அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வேலைவாய்ப்பு மூலம் கிரீன் கார்டு பெற விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் சினீயாரிட்டி அடிப்படையில் தகுதியானவர்களை ஆய்வு செய்து கிரீன் கார்டு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் பணிகளை இன்னும் வேகப்படுத்த புதிய திட்டத்தை அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ளது.

கிரீன் கார்டு

கிரீன் கார்டு

கிரீன் கார்டு பெற விண்ணப்பித்தவர்கள் சம்பளிமெண்ட் கட்டணம் அல்லது சூப்பர் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்ப வரிசையில் இருந்து முன்னுக்குச் செல்ல ஒரு வாய்ப்பை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள Reconciliation Bill-ன் ஒரு பகுதியாக அறிவித்துள்ளது. இது மட்டும் அல்லாமல் ஹெச்1பி விசா பெற்றுள்ளவர்களின் பிள்ளைகள் 21 வயது ஆன பின்பு இந்த முறையின் கீழ் கிரீன் கார்டு பெறவும் இந்த மசோதா அனுமதி அளித்துள்ளது.

சூப்பர் கட்டணம்
 

சூப்பர் கட்டணம்

மேலும் இந்த மசோதாவில் கிரீன் கார்டு பெறுவதற்கு அமெரிக்க அரசு விதித்துள்ள நாடு வாரியான 7 சதவீத கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் அல்லது ஹெச்1பி விசா எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்கிற நீண்ட நாள் கோரிக்கையைக் குறிப்பிடவில்லை என்பது வருத்தம் அளித்தாலும், இந்தச் சூப்பர் கட்டணம் இந்தியர்களுக்கு ஜாக்பாட் ஆக உள்ளது.

இந்தியர்களுக்கு ஜாக்பாட்

இந்தியர்களுக்கு ஜாக்பாட்

அமெரிக்க அரசு கிரீன் கார்டு விசா விண்ணப்ப வரிசையில் முன்னுக்குச் செல்ல 5000 டாலர் என்ற தொகையைச் சூப்பர் கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளது. இந்தக் கட்டணம் மூலம் ஹெச்1பி விசா பெற்று கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்துள்ளவர்கள் விரைவாக அமெரிக்கக் குடியுரிமை பெற முடியும்.

7 சதவீத கட்டுப்பாடு

7 சதவீத கட்டுப்பாடு

அமெரிக்க அரசு ஒவ்வொரு நாட்டுக்கும் 7 சதவீதத்திற்கு அதிகமாக விசா அளிக்கக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு வருடமும் 1.40 லட்சம் விண்ணப்பத்தை ஒதுக்கி வைத்து வருகிறது. இந்தச் சூப்பர் கட்டணம் மூலம் ஒதுக்கிவைக்க வேண்டிய அவசியம் இல்லை, அதேபோல் தகுதியான அனைவரும் கிரீன் கார்டு பெறலாம், இந்தச் சூப்பர் கட்டணம் மூலம் 7 சதவீதம் ஆண்டு வாரியான கட்டுப்பாடுகளைத் தகர்க்க முடியும் எனக் கூறப்படுகிறது.

5000 டாலர் கட்டணம்

5000 டாலர் கட்டணம்

கிரீன் கார்டு பெற வேண்டும் என்ற மிகப்பெரிய கனவுடன் இருக்கும் இந்தியர்கள் 5000 டாலர் உடன் சூப்பர் கட்டணத்தைச் செலுத்தி விசா விண்ணப்பம் சமர்ப்பிப்பது மூலம் விரைவாகக் கிரீன் கார்டு பெறலாம். அமெரிக்காவில் ஹெச்1பி விசா உடன் நீண்ட காலம் பணியாற்றி வரும் அமெரிக்கர்களுக்கு இது மிகப்பெரிய ஜாக்பாட் என்றால் மிகையில்லை.

7.41 லட்சம் இந்தியர்கள்

7.41 லட்சம் இந்தியர்கள்

வேலைவாய்ப்பு அடிப்படையில் கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் ஏப்ரல் 2020ல் 7.41 லட்சம் பேர். இவர்களின் காத்திருப்புக் காலம் மட்டும் சுமார் 84 வருடம். கிரீன் கார்டு பெற வேண்டும் என்ற கனவே இந்த 84 வருடக் காத்திருப்புக் காலம் மூலம் அழிந்து விடுகிறது.

பெரு நிறுவனங்கள்

பெரு நிறுவனங்கள்

இதுமட்டும் அல்லாமல் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் உலக நாடுகளில் இருந்து ஊழியர்கள் பணியில் அமர்த்தி வரும் நிலையில், இந்தத் திட்டம் மைக்ரோசாப்ட், கூகுள், பேஸ்புக், டெஸ்லா, அமேசான் போன்ற பெரு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும்.

ஆட்சி மாற்றம்

ஆட்சி மாற்றம்

மேலும் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் நடக்கும் போது விசா கட்டுப்பாடுகள் மாறும் வேளையில் இந்தத் திட்டம் பெரு நிறுவனங்களுக்கான பிரச்சனையைத் தீர்க்கும் எனக் கருதப்படுகிறது.

இறுதி ஒப்புதல்

இறுதி ஒப்புதல்

மேலும் இந்த மசோதா குறித்த இறுதி முடிவும் எடுக்கப்பட உள்ளது. இது மட்டும் அல்லாமல் இது அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் ஒரு திட்டம் என்பதால் அமெரிக்க அரசு இதற்கு இறுதி ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US green card Super fee: Jackpot for Indian IT Employees With H1B visa

US green card Super fee: Jackpot for Indian IT Employees With H1B visa
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X