டொனால்டு டிரம்ப் விசா தடையை எதிர்க்க ஒன்றுகூடிய பெரிய தலைகள்.. கூகிள் முதல் டெஸ்லா வரை..!

அமெரிக்காவில் 7 முஸ்லிம் நாட்டு மக்கள் மற்றும் அகதிகளுக்கு நுழையத் தடை விதித்தார் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த அறிவிப்பு அமெரிக்க மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் நிறுவனங்கள் மத்தியிலும் கிளர்ச்சிய

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவில் கடந்த ஒரு மாத காலத்தில் தலைப்புச் செய்திகளில் டொனால்டு டிரம்ப் மட்டுமே இருந்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவில் 7 முஸ்லிம் நாட்டு மக்கள் மற்றும் அகதிகளுக்கு நுழையத் தடை விதித்தார் அதிபர் டொனால்டு டிரம்ப், இந்த அறிவிப்பு அமெரிக்க மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் நிறுவனங்கள் மத்தியிலும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் டொனால்டு டிரம்ப் அரசு விதித்த 7 நாடு மக்கள் மீதான தடையை எதிர்த்து 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வழக்குத் தொடுத்துள்ளது.

வழக்குத் தொடுத்தவர்கள் சாதாரணக் குப்பனும், சுப்பனும் இல்லை.. எல்லாம் பெரிய தலைகள். எதிர்த்தால் அமெரிக்கப் பொருளாதாரமே ஆடிப்போய்விடும்.!

எதிர் வழக்குகள்

எதிர் வழக்குகள்

சர்வதேச சந்தையில் டெக்னாலஜி துறையில் சிறந்து விளங்கும் பெரும்பாலான நிறுவனங்கள் டிரம்ப் அறிவித்த 7 முஸ்லிம் நாடுகள் மீதான தற்காலிக தடையின் மூலம் தங்களது ஊழியர்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை அமெரிக்காவை விட்டுவெளியேற்ற வேண்டிய நிலை உருவாக்கும் என எச்சரித்துள்ளது.

இப்படி வெளியேற்றினால் அமெரிக்காவில் லேவைவாய்ப்புகள் இருக்காது என்பதே இதன் பொருள்.

 

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஆப்பிள் இன்க், கூகிள் இன்க், மைக்ரோசாப்ட் கார்ப், ஆல்பபெட் ஆகிய நிறுவனங்களுக்கு 127 நிறுவனங்கள் சான் பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

எலான் மஸ்க்
 

எலான் மஸ்க்

சர்வதேச ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எனக் கூறப்படும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் அவர்களுடன் சேர்ந்து சுமார் 127 நிறுவனங்கள் மற்றும் நிறுவன தலைவர் இவ்வழக்கிற்குச் சாதகமாக வையெழுத்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

உபர்

உபர்

7 முஸ்லிம் நாட்டு மக்கள் மீதான தடை வெளியான பின் டிரம்ப் வர்த்தக ஆலோசனை குழுவில் இருந்த பல நிறுவன தலைவர்கள் வெளியேறி வந்தனர்.

இந்நிலையில் இக்குழுவில் இடம்பெற்ற உபர் டாக்ஸி நிறுவனத்தின் தலைவர் டிராவீஸ் கலாநிக் கடந்த வியாழக்கிழமை வெளியேறிய நிலையில், நேற்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்-ம் இக்குழுவை விட்டு வெளியேறியுள்ளனர்.

 

தீவிரவாதம்

தீவிரவாதம்

அமெரிக்காவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் விதமாக டொனால்டு டிரம்ப் ஜனவரி 27ஆம் தேதி இத்தடையை விதித்தார். இதன் விளைவாக அமெரிக்க விமான நிலையங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவியது என அமெரிக்க மக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

முக்கிய நிறுவனங்கள்

முக்கிய நிறுவனங்கள்

மேலும் இந்தப் போராட்டத்தில் பேஸ்புக், டிவிட்டர், இன்டெல், ஈபே, நெட்பிளிக்ஸ், உபர், லிவீஸ் ஸ்டராஸ் அண்ட் கோ மற்றும் கோபானி மட்டும் அல்லாமல் பார்சூன் 500 பட்டியலில் இருக்கும் 200 நிறுவனங்கள் இந்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டொனால்டு டிரம்ப் விசா தடையை எதிர்க்க ஒன்றுகூடிய பெரிய தலைகள்.. கூகிள் முதல் டெஸ்லா வரை..!
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

US tech titans lead legal brief against Donald Trump travel ban

US tech titans lead legal brief against Donald Trump travel ban
Story first published: Thursday, February 9, 2017, 13:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X