அடியாத்தி! வங்கி & நிதி நிறுவன பங்குகளை விற்று தள்ளிய வாரன் பஃபெட்! எதை வாங்கி இருக்கிறார் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாரன் பஃபெட் போன்ற உலக பங்குச் சந்தை மேதாவிகள் எல்லாம் தங்கத்திலோ அல்லது தங்கம் சார்ந்த கம்பெனிகளிலோ முதலீடு செய்வார்களா?

 

அதுவும், வாரன் பஃபெட்-ன் கம்பெனி வைத்திருக்கும் வங்கி & நிதி நிறுவனப் பங்குகளை எல்லாம் விற்று விட்டு, தங்கத்தில் முதலீடு செய்வார்களா?

2020-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் செய்து இருக்கிறார்கள். அப்படி என்றால் தங்கம் சார்ந்த வியாபாரத்தை, வாரன் பஃபெட் நம்புகிறார் என்று தானே பொருள்? அதைத் தான் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கப் போகிறோம். சரி முதலில் எந்த பங்குகளை விற்று இருக்கிறார் எனப் பார்ப்போம்.

எந்த பங்குகள் விற்பனை

எந்த பங்குகள் விற்பனை

உலகின் முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளரான வாரன் பஃபெட், பெர்க்‌ஷர் ஹதவே (Berkshire Hathaway) என்கிற பெயரில் தான் தன் கம்பெனியை நடத்தி வருகிறார். இந்த கம்பெனி, தான் வைத்திருக்கும் 62 % ஜே பி மார்கன் சேஸ் பங்குகள், 26 % வெல்ஸ் ஃபார்கோ (Wells Fargo) பங்குகளை விற்று இருக்கிறது. அதோடு பி என் சி ஃபைனான்ஷியல் சர்வீசஸ், எம் & டி பேங்க் கார்ப், பேங்க் ஆஃப் நியூ யார்க் மெலன் கார்ப், மாஸ்டர் கார்ட், விசா போன்ற கம்பெனிகளிலும் கம்பெனி வைத்திருக்கும் பங்குகளில் ஒரு கணிசமான அளவை குறைத்து இருக்கிறதாம்.

தங்க சுரங்க கம்பெனி

தங்க சுரங்க கம்பெனி

வங்கி மற்றும் நிதித் துறை சார்ந்த பங்குகளை விற்று இருக்கும் இந்த நேரத்தில், ஒரு புதிய பங்கை வாங்கி இருக்கிறது வாரன் பஃபெட்டின் பெர்க்‌ஷேர் ஹதவே கம்பெனி. அந்த பங்கின் பெயர் Barrick Gold Corp. இது ஒரு தங்க சுரங்க கம்பெனி. பல ஆண்டுகளாக அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகமாகி வருகிறது.

Valuation குறைவு
 

Valuation குறைவு

இந்த Barrick Gold Corporation கம்பெனியின் மதிப்பு (Valuation) 605 மில்லியன் டாலராக இருக்கிறதாம். ஆனால் வாரன் பஃபெட்டின் கம்பெனி, இந்த தங்க சுரங்க கம்பெனியின் மதிப்பீடு இன்னும் நன்றாக அதிகரிக்கும். இப்போதைக்கு இந்த கம்பெனியின் மதிப்பீடு குறைவாக இருக்கிறது என பெர்க்‌ஷேர் தரப்பில் சொல்கிறார்கள்.

வாரன் பஃபெட்டே தங்கம் சார் கம்பெனியில் முதலீடு

வாரன் பஃபெட்டே தங்கம் சார் கம்பெனியில் முதலீடு

வாரன் பஃபெட் என்கிற மாபெரும் முதலீட்டாளர், கடந்த பல தசாப்தங்களாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்து கொண்டு இருக்கிறார். பங்குச் சந்தைகளில் பல்வேறு கால கட்டங்களில், பல ஏற்ற இறக்கங்களைக் கடந்து வந்தவர். அவரே தங்கம் சார்ந்த கம்பெனியில் முதலீடு செய்து இருப்பது ஆச்சர்யமளிக்கும் விஷயம் தான். பொதுவாக வாரன் பஃபெட், தங்கத்தில் முதலீடு செய்வதை ஊக்குவித்ததில்லை.

பயத்தின் வெளிப்பாடு

பயத்தின் வெளிப்பாடு

பொதுவாக தங்கத்தில் முதலீடு செய்வது, பயத்தில் எடுக்கும் முடிவு (Act of Fear) என்கிறது எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் வலை தளச் செய்திகள். ஆக வாரன் பஃபெட்டே உஷாராக தங்கம் சார்ந்த கம்பெனிகளில் முதலீடு செய்கிறார் என்றால், நாமும் கொஞ்சம் உஷாராகிக் கொள்வது நல்லது.

நீங்கள் என்ன செய்யலாம்

நீங்கள் என்ன செய்யலாம்

மக்களே, உங்கள் முதலீடுகளை ஒரு முறை பரிசீலனைக்கு உட்படுத்துங்கள். முடிந்தால் உங்கள் முதலீட்டு ஆலோசகரையும் தொடர்பு கொண்டு, தற்போது செய்திருக்கும் முதலீடுகளை அப்படியே தொடரலாமா அல்லது ஏதாவது மாற்றங்களை மேற்கொள்ளலாமா என ஆலோசனை செய்வது நல்லது. இந்த நேரத்தில் அதிக ரிஸ்க் எடுத்து வியாபாரம் செய்வதைத் தவிர்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Warren buffett sold banking and financial shares bought gold mine company

The legendary investor Warren buffett had sold a considerable amount of banking and financial company shares and bought gold mine company shares in the second quarter of this year.
Story first published: Saturday, August 15, 2020, 15:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X