வெடிகுண்டாக மாறிய சாம்சங் போன்.. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் தொழில்நுட்ப ரீதியாகவும், மக்களின் விருப்பத்தின் படி பார்த்தால் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுக்குத் தனி இடம் உடன், ஆனால் விற்பனை அளவில் பார்க்கும் போது ஐபோனுக்கும் சாம்சங் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு.

ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் முதல் இடத்தில் இருக்கும் சாம்சங் 2016ஆம் ஆண்டில் சந்தித்த சோதனைகளால் அடுத்தச் சில வருடங்களில் நோக்கியா நிறுவனத்தைப் போல் முடங்கிவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஏன், எதனால் இப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டது.?

சாம்சங்

சாம்சங்

ஸ்மார்ட்போன் விற்பனையில் சிறகடித்துப் பறந்த சாம்சங் நிறுவனத்திற்கு விழுந்த முதல் அடி ஆப்பிள் நிறுவனத்துடனான போட்டி மற்றும் திருட்டு வழக்கு.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை போலவே சந்தையில் அதிக விலைமதிப்புடைய போன்களைக் களமிறக்க வேண்டும் என்று திட்டமிட்ட சாம்சங் அவசர அவரசமாக ஐபோனின் டிசைனை திருடி அதன் விடிவிலேயே வெளியிட்டது.

 

வழக்கு

வழக்கு

ஆப்பிள் நிறுவனத்திற்கு இணையாகவும், உருவத்திலும் ஒத்திருக்கும் வகையில் ஸ்மார்ட்போன்களைச் சந்தையில் அறிமுகம் செய்த சாம்சங் போன் விற்பனையில் கலக்கியது.

இதனால் ஐபோனின் வர்த்தகம் அதிகளவில் பாதிக்கப்பட்டது. வர்த்தகச் சரிவிற்கான காரணங்களை ஆராயத் துவங்கிய ஆப்பிள் நிறுவனம் அதற்கு முழுமையான காரணமான சாம்சங் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தது.

 

விசாரணை

விசாரணை

ஆப்பிள் நிறுவனம் சாம்சங் நிறுவனத்திற்கு எதிராகத் தொடுத்த வழக்கிற்கான முடிவில் 2015ஆம் ஆண்டின் கடைசியில் உறுதியான நிலையில், வர்த்தகச் சரிவிற்கான நஷ்டஈடு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தது.

இது சாம்சங் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது.

 

2016 துவக்கம்

2016 துவக்கம்

திருட்டு வழக்கின் தீர்ப்பு 2016ஆம் ஆண்டின் துவக்க வர்த்தகத்தை அதிகளவில் பாதித்தது.

சீன நிறுவனங்கள்

சீன நிறுவனங்கள்

அதனை அடுத்து 2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆசிய மற்றும் அமெரிக்கச் சந்தையில் சீன நிறுவனங்களின் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் வாடிக்கையாளர் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றது.

இப்புதிய ஸ்மார்ட்போன்கள் சாம்சங் போன்களுக்கு இணையான தொழில்நுட்பத்திலும், விலை குறைவாகவும் உள்ளதால், மக்கள் அனைவரும் இப்புதிய நிறுவனங்களை நாடிச் சென்றனர்.

இதனால் 2016ஆம் ஆண்டின் முதல் 2 காலாண்டில் சாமசங் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கையில் மிகப்பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டது.

 

சாம்சங் நோட் 7

சாம்சங் நோட் 7

அனைத்திற்கும் மேலாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 அறிமுகம் அதன் வர்த்தக வாய்ப்புகளை எதிர்கொள்ளச் சாம்சங் எஸ்7 என்ற ஸ்மார்ட்போனை தயாரித்தாலும், ஆடம்பர சந்தைக்கு அடுத்த மட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களைக் குறிவைக்கும் வகையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.

இந்தத் திட்டத்தின் வாயிலாக ஆப்பிளின் ஐபோனின் விற்பனை அளவுகளைக் குறைப்பதே சாம்சங் திட்டம்.

 

பிரச்சனை மட்டுமல்ல போனும் வெடித்தது.

பிரச்சனை மட்டுமல்ல போனும் வெடித்தது.

சாம்சங் நிறுவனம் திட்டம் தீட்டியது ஒன்று நடந்தது ஒன்று. கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனில் பேட்டரியில் ஏற்பட்ட பிரச்சனையால் சாம்சங் கேலக்ஸி நோட் 7 வாங்கிப் பல வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போன் வெடித்துள்ளது, சிலரின் போனில் இருந்து மிகப்பெரிய அளவில் புகை வந்துள்ளது.

இதன் எதிரொலியாகக் கேலக்ஸி நோட் 7 உட்படச் சாம்சங் நிறுவனத்தின் பல்வேறு மாட்டல்களுக்கு விமானத்தின் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

திரும்பப்பெற்றது

திரும்பப்பெற்றது

உலகளவில் விற்பனை செய்யப்பட்டு இருந்த கேலக்ஸி நோட் 7 திருப்பப்பெற்ற துவங்கியதுள்ளது.

இத்தகைய மோசமான சூழ்நிலையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 தயாரிப்பை முழுமையாக நிறுத்த உத்திரவிட்டுது சாம்சங்.

 

சியோல் பங்குச்சந்தையில்

சியோல் பங்குச்சந்தையில்

தென் கொரியாவை தலைமையாகக் கொண்டு செயல்படும் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 மொபைல் தயாரிப்பை நிறுத்த உத்தரவிட்ட பின்னர்ச் சியோல் பங்குச்சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் புதன்கிழமை மட்டும் சுமார் 3 சதவீதம் வரை சரிந்தது.

கடந்த 6 நாட்களில் இந்நிறுவனத்தின் பங்கு சுமார் 8.04 சதவீதம் வரை சரிந்து வர்த்தகச் சந்தையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

வாடிக்கையாளர்

வாடிக்கையாளர்

கேலக்ஸி நோட் 7 உற்பத்தியை நிறுத்திய நிலையில் உலகம் முழுவதும் உள்ள தனது டீலர்களிடம் இதன் விற்பனை முடக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ஆனால் கேலக்ஸி நோட் 7 வெளியான துவக்கத்தில் வெடிக்கும் பிரச்சனையைச் சந்தித்த பல வாடிக்கையாளர்களுக்குப் புதிய போனை சாம்சங் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 

பிராண்ட்

பிராண்ட்

கேலக்ஸி நோட் 7 சந்தைப் பிரச்சனையால் இதன் உற்பத்தியும், விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய போராட்டத்தைச் சாம்சங் சந்திக்க உள்ளது.

சந்தையில் சாம்சங் நிறுவனத்திற்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் இழந்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு மிகப்பெரிய அளவில் பாதிக்கத் துவங்கியது.

 

25 லட்சம் கேலக்ஸி நோட் 7

25 லட்சம் கேலக்ஸி நோட் 7

தற்போது விற்பனை செய்யப்பட்ட 25 லட்சம் கேலக்ஸி நோட் 7 மொபைல் போனை வாடிக்கையாளர்களுக்கு எப்படி மாறிக்கொடுப்பது என்பதைச் சாம்சங் யோசித்து வருகிறது.

பிக்செல்

பிக்செல்

கூகிள் நிறவனம் மொபைல் வர்த்தகச் சந்தையில் இறங்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வரும் நிலையில், சாம்சங் வீழ்ச்சியைப் பயன்படுத்துத் தற்போது சந்தையில் குதித்துள்ளது.

பல கட்ட முயற்சிகளுக்குப் பின் கூகிள் நிறுவனம் தற்போது தனது சொந்த முயற்சியில் 'பிக்செல்' என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

கூகிள் நிறுவனத்தின் தற்போதைய அறிமுகம் ஆப்பிள் ஐபோனுக்கு நிகராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் மற்றும் கூகிள் நிறுவனத்திற்கு மத்தியில் சாம்சங் காணாமல் போகக் கூட வாய்ப்புகள் உள்ளது.

 

சாம்சங் நிறுவனத்தில் பிளவு..!

சாம்சங் நிறுவனத்தில் பிளவு..!

 

இத்தகைய சரிவிற்கு பின் மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் சந்தையில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கச் சாம்சாங் நிறுவனம் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற அமெரிக்க முதலீட்டு நிறுவனமான ஏலாய்ட் மேனேஜ்மென்சட் நிறுவனத்தின் திட்டத்தை ஆதரிப்பதாகத் தெரிகிறது.

இத்திட்டத்தின் படி சாம்சங் ஹோல்டிங் நிறுவனம் உரிமை நிறுவனம், செயல்பாட்டு நிறுவனம் என இரண்டாகப் பிரிக்கப்பட உள்ளது எனச் சியோல் எக்னாமிக் டெயில் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What Happen To Samsung: Do Or Die Situation

What Happen To Samsung: Do Or Die Situation - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X