ஏணி வைச்சா கூட எட்டாது: டொனால்டு டிரம்ப் - விளாடிமிர் புடின்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு பயணம் என்பது நம்முடைய உலக அறிவை பெருக்குவதற்காக இருக்கலாம், அல்லது தொழில் சார்ந்ததாகவும், அரசியல் சார்ந்ததாகவும் இருக்கலாம். நம்முடைய பயணத்தின் குறிக்கோள் உலக அறிவைப் பெறுவதாக இருந்தால், நம்முடைய பயண வாகனத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

அதுவே அரசியல் அல்லது தொழில் முறைப் பயணம் எனில், பயணம் செய்யக்கூடிய வாகனம் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது. நாம் பயணம் செய்யக்கூடிய வாகனம், நாம் செய்ய வேண்டிய வேலையில் பாதியை முடித்து விடும்.

உலக தலைவர்கள்

உலக தலைவர்கள்

உலகத் தலைவர்கள் பயணம் செய்யக்கூடிய வாகனத்தின் தாக்கம், பல்வேறு தருணங்களில் உணரப்பட்டுள்ளது. எனவே உலக தலைவர்கள், மற்றும் வியாபார சக்ரவர்த்திகள், தங்களுடைய பயண வாகனத்தை மிகவும் திட்டமிட்டு கட்டமைக்கின்றனர். அதற்காக பணத்தை தண்ணீர் போன்று செலவழிக்கின்றனர். அதிலும் அவர்களின் ப்ரத்யேக விமானம் என்பது மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த ஜெட் விமானங்களில் உள்ள ஸ்பா, சாப்பாட்டு அறை, சமீபத்திய தொழில்நுட்ப கருவிகள் மற்றும் உள் வடிவமைப்பு போன்றவை நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாத நிலையில் உள்ளன.

அனுமதியில்லை

அனுமதியில்லை

இந்த விமானங்களில் சவாரி செய்ய நமக்குக் கண்டிப்பாக அனுமதியில்லை. எனினும் குறைந்தபட்சமாக நாம் உலகெங்கிலும் புகழ்பெற்ற தலைவர்களின் ப்ரத்யேக ஜெட் விமானங்களைப் பற்றிய விபரங்கள் மற்றும் அதிலுள்ள சிறப்பு அம்சங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ராணி எலிசபெத்தின் விமானம்.

ராணி எலிசபெத்தின் விமானம்.

உலகில் உள்ள அனைத்து ஆடம்பர வசதிகளையும் குறைவின்றி அனுபவித்து வரும் மாட்சிமை பொருந்திய இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத், தனது சர்வதேச சுற்றுப்பயணங்களுக்கு ராயல் ஏர் ஃபோர்ஸ்சின் 32 வது படைப் பிரிவைப் பயன்படுத்துகின்றார்.

அவர் தன்னுடைய உள்நாட்டுப் பயணங்களுக்கு, தனது இரண்டு AW 109 மற்றும் ஆறு BAE-125 ஐப் பயன்படுத்துகிறார். இதைத் தவிர்த்து அரச குடும்பத்தின் தனிப்பட்ட உபயோகித்திற்காக ஒரு சிகோர்ஸ்கி S-76 ஸ்பிரிட் வகை ஹெலிகாப்ட்டர் உள்ளது. ஒரு சில சமயங்களில், பிரிட்டிஷ் அரச குடும்பம் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் விர்ஜினிய அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் விமானங்களைப் பயன்படுத்துகின்றது.

 

தெரசா மே, இங்கிலாந்து பிரதமர் | £ 196 மில்லியன்.

தெரசா மே, இங்கிலாந்து பிரதமர் | £ 196 மில்லியன்.

இங்கிலாந்தின் பிரதம மந்திரி தெரசா மே ஏர்பஸ் A330 ஐ பயன்படுத்துகிறார். அவருடைய உத்தியோகபூர்வ சுற்றுப்பயணங்களுக்கு இந்த விமானமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த விமானத்தில், விமானியின் முதல் அறைக்கு அருகில் ஒரு விஐபி மண்டலம் புதிதாக £ 15 மில்லியன் செலவில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் இறுதியில் எக்கானமி வகை இருக்கைகள் பத்திரிக்கையாளர்களின் பயணத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

அவரது ஜெட் விமானத்தின் விரிவான விளக்கப்படம் உங்களுக்காக இங்கே!.

அவரது ஜெட் விமானத்தின் விரிவான விளக்கப்படம் உங்களுக்காக இங்கே!.

இந்த விமானத்தில் மந்திரிகள் மற்றும் மிக முக்கிய பயணிகளுக்காக 50க்கும் அதிகமான பிரீமியம் மற்றும் ஆடம்பர இருக்கைகள் உள்ளன. இந்த விமானம், நடுவானில் எரிபொருள் நிரப்பிக் கொள்ளும் விதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

விளாடிமிர் புடின், ரஷ்யாவின் தலைவர் | £ 390 மில்லியன்.

விளாடிமிர் புடின், ரஷ்யாவின் தலைவர் | £ 390 மில்லியன்.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட, இந்த விமானம் பரந்த உடல் அமைப்புடன், நீண்ட தூரப் பயணங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி திரு விளாடிமர் புடினின் இந்த உத்யோகப்பூர்வ விமானம் ரேடாரை ஏமாற்றும் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. திரு புதினின் உபயோகத்திற்காக மூன்று ஒத்த அமைப்புடைய விமானங்கள் உள்ளன. எனவே திரு புதின் எதில் பயணம் செய்கின்றார் என்பதை எளிய மக்களால் எளிதில் யூகிக்க இயலாது.

 புட்டினின் விமானத்தின் விவரங்கள்.

புட்டினின் விமானத்தின் விவரங்கள்.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் ஆடம்பரமானது. பல்வேறு உள் அலங்காரங்களுடன் வடிவமைக்கப்பட்ட இது மிகவும் அகலமானது மற்றும் இதில் பல்வேறு வசதிகள் உள்ளன. இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இந்த விமானத்தில் ஒரு உடற்பயிற்சி மையமும், ஜனாதிபதி அலுவலகமும் உள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் | £ 780 மில்லியன்.

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் | £ 780 மில்லியன்.

அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்பின் விமானம் பெரிதும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏர் ஃபோர்ஸ் ஒன் என அழைக்கப்படும், இந்த விமானம் நீங்கள் கற்பனையிலும் நினைத்துப்பார்த்திராத உலகின் அனைத்து ஆடம்பரங்களையும் கொண்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கான தனி காபின், தனியான மருத்துவ விடுதி, மற்றும் உடற்பயிற்சிகூடம் போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இந்த ஏர்போர்ஸ் ஒன்னை ஒரு பறக்கும் அதிபரின் அலுவலகம் என்றே நாம் அழைக்கலாம்.

விமானம் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்:

விமானம் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்:

தென்கிழக்கு பாணியில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் மனைவி நான்சி ரீகனால் வடிவமைக்கப்பட்ட இந்த போயிங் 747 விமானம், வானத்திலேயே எரிபொருள் நிரப்பப்படக்கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது.

 ஜி ஜிங்பிங்க், சீனாவின் தலைவர் | £ 195 மில்லியன்.

ஜி ஜிங்பிங்க், சீனாவின் தலைவர் | £ 195 மில்லியன்.

சீனாவின் ஜனாதிபதிக்கு என்று எந்தவிதமான தனிப்பட்ட விமானமும் இல்லை. ஏர் சீனாவைச் சேர்ந்த போயிங் 747 மற்றும் 400 களைப் ஜனாதிபதியின் பயணத்திற்காக சீனா பயன்படுத்துகிறது. இந்த விமானம் வழக்கமான விமான சேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

இங்கே சீன விமானத்தைப் பற்றிய விளக்கப்படம் உங்களுக்காக.

இங்கே சீன விமானத்தைப் பற்றிய விளக்கப்படம் உங்களுக்காக.

ஜி ஜின்பிங்க் தனது பயணத்தை திட்டமிடும் போது, ​​அந்த விமானம் முதலில் பாதுகாப்புக் காரணங்களுக்காக பாதுகாப்புப் படையினால் பரிசோதிக்கப்படுகிறது. விமானத்தில் உள்ள இருக்கைகள் இட வசதிக்காக அகற்றப்பட்டு பல்வேறு அறைகள், படுக்கையறை மற்றும் அலுவலக அறை ஆகியன உருவாக்கப்படுகின்றன.

ஏங்கேலா மேர்க்கெல், ஜெர்மனியின் அதிபர் | £ 235 மில்லியன்.

ஏங்கேலா மேர்க்கெல், ஜெர்மனியின் அதிபர் | £ 235 மில்லியன்.

ஏஞ்சலா மேர்கெல் பயணத்திற்காகப் பயன்படுத்தும் விமானம் இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய ஜேர்மன் அரசியலமைப்பாளரான கொன்ராட் அடெனேர் என்பவரின் பெயரால் அழைக்கப்படுகின்றது. 2011 வரை, லுஃப்தான்சா ஏர்பஸ் ஏ 340 விமானம் மாற்றி அமைக்கப்பட்டு ஒரு விஐபி விமானமாக உபயோகிக்கப்பட்டது. இந்த விமானத்தில் படுக்கையறை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பலவும் இடம்பெற்றுள்ளது.

  மேர்கெலின் பிற விமானங்கள்.

மேர்கெலின் பிற விமானங்கள்.

ஏர்பஸ் ஏ 319 மற்றும் பாம்பார்டியர் குளோபல் 5000 உட்பட இரண்டு விமானங்கள், ஹெலிகாப்டர்களை ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்கெல் பயன்படுத்துகின்றார். அவரின் ஹெலிகாப்டர்களில் ஒன்று உள்நாட்டுப் பயணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இம்மானுவல் மேக்ரோன், பிரான்சின் தலைவர் | £ 210 மில்லியன்.

இம்மானுவல் மேக்ரோன், பிரான்சின் தலைவர் | £ 210 மில்லியன்.

பிரஞ்சு ஜனாதிபதியின் விமானத்தில் ஒரு சமையலறை, படுக்கையறை, மற்றும் ஒலியினால் பாதிக்காத பேச்சுவார்த்தை அறை ஆகியன உள்ளது.

இம்மானுவல் மேரோனின் விமானத்தின் புகைப்படங்கள் உங்களுக்காக!

இம்மானுவல் மேரோனின் விமானத்தின் புகைப்படங்கள் உங்களுக்காக!

பிரெஞ்சு ஜனாதிபதியின் தேவைக்காக டஸ்ஷால்ட் பால்கன் 7X விமானங்களும் உள்ளன.

ஹஸ்ஸனல் போல்கியா, புரூனை சுல்தான் | £ 170 மில்லியன்.

ஹஸ்ஸனல் போல்கியா, புரூனை சுல்தான் | £ 170 மில்லியன்.

பறக்கும் அரண்மனை என அழைக்கப்படும், புருனே சுல்தானின் விமானத்தில் விலைமதிப்பற்ற உலோகங்கள், கற்கள் மற்றும் தங்க இலைகள் பொறிக்கப்பட்டுள்ளது.

புரூனை சுல்தானின் விமானத்தைப் பற்றிய விளக்கப்படம் இங்கே உங்களுக்காக .

புரூனை சுல்தானின் விமானத்தைப் பற்றிய விளக்கப்படம் இங்கே உங்களுக்காக .

இந்த விமானத்திற்கு வானத்திலேயே எரிபொருள் நிரப்பலாம். இந்த விமானத்தின் பயணத்தை ஒரு மணிநேரத்திற்கு 12,500 கி.மீ. லிருந்து 15,000 கி.மீ. வரை அதிகரிக்கலாம்.

 தமிக் பின் ஹமத் அல் தானி, கத்தார் எமிர் | £ 1.2 பில்லியன்.

தமிக் பின் ஹமத் அல் தானி, கத்தார் எமிர் | £ 1.2 பில்லியன்.

கத்தார் நாட்டிலுள்ள செல்வந்தர்களில் ஒருவரான இவர் உலகில் எங்கும் பயணிக்கத் தக்க வகையில் பல்வேறு விமானங்களை வைத்திருக்கின்றார். ஒரு முறை இவர் ஜப்பானின் பிரதமரை சந்திக்கச் செல்லும் பொழுது பத்து விமானங்களுடன் ஜப்பான் சென்றார்.

Tamim bin Hamad Al Thani

Tamim bin Hamad Al Thani

கத்தார் எமிரின் விமானத்தைப் பற்றிய சில முக்கிய தகவல்கள் இங்கே உங்களுக்காக.

கத்தார்அரசுக்கு சொந்தமான கட்டார் அமிரி விமான சேவை நிறுவனம், கத்தார் அமிரின் குடும்பத்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Which World Leader Has the Most Expensive Jet Plane?

Which World Leader Has the Most Expensive Jet Plane?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X