வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு தங்களது மொபைல் போனை உபயோகிக்க தடை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: அமெரிக்கப் பாராளுமன்றம் என அழைக்கப்படும் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரங்களில் மட்டும் இல்லாமல் வளாகத்தின் உள்ளே முழுவதும் சொந்த மொபைல் போனை பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இதனால் வெள்ளை மாளிகையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது பிள்ளைகள், குடும்பம், சொந்தங்களுடன் வேலை நேரங்களில் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

 எப்போது முதல் தடை?

எப்போது முதல் தடை?

வெள்ளிக்கிழமை முதல் வெள்ளை மாளிகை வளாகத்தில் ஊழியர்கள் அவர்களது சொந்த மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது டிரம்ப் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த மொபைல் போனில் பேசுவதற்காகத் தடை என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஜான் கெல்லி கூறியுள்ளார்.

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப் அவர்கள் பதவி ஏற்றக் காலகட்டத்தில் இருந்து பல ரகசி முடிவுகள் ஊடகங்களுக்குக் கசிந்து வருவதாகக் குற்றம்சாட்டி வந்ததாகவும் அதனால் தான் தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறிவரும் நிலையில் அமெரிக்க ஊடகங்கள் அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதுவும் இப்படி வருவதில்லை என்பதால் எங்களுக்கு இதுபற்றிக் கவலையில்லை என்று கூறுகின்றனர்.

வயர்லெஸ் நெட்வொர்க்
 

வயர்லெஸ் நெட்வொர்க்

வெள்ளை மாளிகையின் வயர்லெஸ் நெட்வொர்க்கில் பல தனிநபர்களின் மொபைல் போன்களுக்குச் சிக்னல் செல்வதால் ஃபெடரல் அரசின் தகவல்கள் பாதுகாப்பிற்காக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவித்தன.

அலுவலகப் போனில் சிக்கல்

அலுவலகப் போனில் சிக்கல்

இதில் என்ன ஒரு சிக்கல் என்றால் வெள்ளை மாளிகை ஊழியர்களால் சொந்த பணிகளுக்காக அலுவலகப் போனை பயன்படுத்த முடியாது என்பதே ஆகும். இந்தத் தடையால் அவசரக் காலங்களில் குடும்ப உறுப்பினர்களைத் தொடர்புகொள்ள முடியாது நிலையில் உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

White House bans employees from using personal mobile phones

White House bans employees from using personal mobile phones
Story first published: Thursday, January 4, 2018, 15:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X