அமெரிக்காவில் அமெரிக்கர்களை விட இவர்கள் தான் கெத்து..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவில் பிறந்தவர்களை விட வெளிநாட்டில் பிறந்து குடியேறியவர்கள் தான் புதிதாகப் பிஸ்னஸ் துவங்கியுள்ளனர் என்று தரவுகள் கூறுகின்றன. இதற்கு ஏடி&டி அலெக்சாண்டர் கிரகாம் பெல் முதல் கூகுள் செர்ஜி பிரின் வரை பலரை உதாரணமாகக் கூறலாம்.

அமெரிக்கர்கள் புதிதாகப் பிஸ்னஸ் துவங்கினாலும் அதற்கு இரண்டு மடங்கு அதிகமாகக் குடியேறியவர்கள் பிஸ்னஸ் துவங்கியுள்ளதாகக் கௌஃப்மேன் அறக்கட்டளை ஆய்வாளர் அர்னோபியோ மோரிலிக்ஸ் தெரிவித்துள்ளார்.

சரிந்த நிறுவனங்கள்

சரிந்த நிறுவனங்கள்

வல்லுனர்கள் செய்துள்ள ஆய்வில் 2002-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை சராசரியாக ஆண்டுக்கு 5,24,000 புதிய பிஸ்னஸ் அமெரிக்காவில் துவங்கப்பட்டுள்ளதாகவும் இதுவே 2015-ம் ஆண்டு 4,14,000 ஆகக் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

டொனால்டு டிரம்ப்

டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வெளிநாடு குடியேறிகளைக் குறைக்கப் பல நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் புதிதாகப் பிஸ்னஸ் துவங்குவது மேலும் சரியும் என்றும் கூறப்படுகிறது.

2016

2016

2016-ம் ஆண்டு அமெரிக்காவில் புதிதாகப் பிஸ்னஸ் துவங்கியதில் 30 சதவீதத்தினர் வெளிநாட்டில் வந்த முதல் தலைமுறை குடியேறிகள் ஆவர். 1996-ம் ஆண்டு முதல் இது 13 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கென்யா

கென்யா

ஐந்து வருடத்திற்கு முன்பு கென்யாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய லாவெண்டர் வச்சிரா மற்றும் மே லெபோ உள்ளிட்டோர் 500 டாலர் முதலீட்டில் வணிக நிறுவனங்களைச் சுத்தம் செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தினைத் துவங்கியது மட்டும் இல்லாமல் 1000 கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் அளித்து வருகின்றனர்.

 வேலை

வேலை

பலர் படித்த படிப்புக்கு வேலை இல்லை என்று இருக்கும்பட்சத்தில் வெளிநாட்டில் இருந்து அமெரிக்கச் சென்றவர்கள் அதிகளவில் தொழில் துவங்கி வருகின்றனர். சில அமெரிக்க நிறுவனர்கள் இந்தியாவில் பட்டம் பெற்றவர்களா அல்லது லுதியானவில் அனுபவம் உள்ளவர்கள்ள என்று குழம்பி உள்ளனர்.

 முக்கிய நிறுவனர்கள்

முக்கிய நிறுவனர்கள்

ரஷ்யாவில் பிறந்த பிரின் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர். தென் ஆப்ரிக்காவில் பிறந்த எலன் மஸ்க் டெஸ்லா எனும் எலக்ட்ரிக் கார் நிறுவனத்தினைத் துவங்கியுள்ளார். பேபால் நிறுவனத்தினை ஜெர்மானியர்கள் மூன்று நபர்கள் சேர்ந்து துவங்கியுள்ளனர்.

பார்ச்யூன் 500

பார்ச்யூன் 500

பார்ச்யூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 43 சதவீத நிறுவனங்கள் அமெரிக்காவில் முதல் அல்லது இரண்டாம் தலைமை முறையாக வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் ஆவர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why immigrants start so many businesses in America

Why immigrants start so many businesses in America
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X