42,000 கோடி ரூபாய்க்கு அதிபதி சொல்கிறார் “மீதி உணவை பார்சல் செய்து அடுத்த நாள் சாப்பிடுவேன்”

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எது சிக்கனம், எது கஞ்சத்தனம் என்று வரையறுப்பது சிரமமான விஷயம் தான். எனக்கு சிக்கனமாக தோன்றுவது, உங்களுக்கு கஞ்சமாகத் தெரியலாம். ஆனால் பொதுவாக பெரிய பணக்காரர்கள், billionaire-கள் என்றாலே மிகப் பெரிய பங்களா, மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் கார்கள், கோடி ரூபாய்க்கு உடைகள், தான் நினைவுக்கு வரும். ஆனால் இங்கு சில பணக்காரர்கள் க்ளாசிக்காக தனக்கு தேவையானதை சிம்பிளாக செய்து கொள்கிறார்கள். அதுவே நமக்கு கஞ்சமாகத் தான் தெரிகிறது. அட்ராசிட்டி billionaire-களை ஒப்பிடும் போது.

 10. சார்லி எர்கின் (Charlie ergen)

10. சார்லி எர்கின் (Charlie ergen)

சொத்து மதிப்பு 10.8 பில்லியன் டாலர். டிரக்குகளில் டிஷ் ஆண்டனாக்களை வைத்து வியாபாரம் செய்து வந்த சார்லி எர்கின் தான் டிஷ் நெட்வொர்க் என்கிற சாட்டிலைட் டிவி நிறுவனத்தின் நிறுவனர்.

இந்த நிறுவனத்தின் சேவையை சுமாராக 1.3 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.  அதோடு சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தின் பிராட்பேண்ட் சேவைகளை பயன்படுத்துகிறார்களாம். இந்த நிறுவனத்தில் சுமார் 17,000 பேர் வேலை செய்கிறார்கள்.

அமெரிக்க பங்குச் சந்தை

அமெரிக்க பங்குச் சந்தை

இப்போது டிஷ் நெட்வொர்க் என்கிற நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாகில் பட்டியலிடப்பட்டு வர்த்தகமாகி வருகிறது. இவருடைய இன்னொரு நிறுவனமான எக்கோ ஸ்டாருக்கு சொந்தமாக செயற்கைக் கோள்கள் எல்லாம் கூட உண்டு. அந்த அளவுக்கு பிசினஸ் அறிவும், அமெரிக்க அரசியலில் செல்வாக்கும் படைத்தவர்.

Charlie ergen கஞ்சத்தனம்

Charlie ergen கஞ்சத்தனம்

இவ்வளவு பெரிய நிறுவனத்தை நடத்தும் நம் சார்லிக்கு 5 ஸ்டார் ஹோட்டல்களில் கிடைக்கும் சான்விச்சுகள் அவ்வளவு பிடிக்கும். பெரும்பாலும் விமானத்தில் எகானமி வகுப்பில் தான் பயணிப்பார், வெளிநாடுகளுக்கோ வெளியூர்களுக்கோ வேலை விஷயமாக பயணித்தால் தனி அறையை எடுக்கமாட்டாரம், நண்பர்களோடு அறையை பகிர்ந்து கொள்வாராம்.

 9. கார்லோஸ் ஸ்லிம் ஹுலு (carlos slim helu)

9. கார்லோஸ் ஸ்லிம் ஹுலு (carlos slim helu)

இவருடைய சொத்து மதிப்பு மார்ச் 2018 கணக்கு படி 67.1 பில்லியன் டாலர். MOVIL என்கிற அமெரிக்க டெலிகாம் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்கி நிர்வகித்து வருகிறார். 1990-களில் மெக்ஸிகோவில் டெலிகாம் துறையின் வளர்ச்சிக்காக Telmex என்கிற நிறுவனத்தை உருவாக்கியவரும் இவர் தான். இப்போது டெல்மெக்ஸ் மொவில் நிறுவனத்தின் ஒரு பகுதி.

Conglomerate

Conglomerate

இவர் பல தொழில் செய்யும் தொழிலதிபர். கல்வி, ஹெல்த் கேர், தொழில்துறை உற்பத்தி, ரியல் எஸ்டேட், மீடியா, எனர்ஜி, ஹோட்டல்கள், பொழுதுபோக்கு, டெக்னாலஜி, ரீடெயில், விளையாட்டு, நிதி சேவைகள் என இவர் பார்க்காத துறைகள் மிகக் குறைவு தான். இவர் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் 17% பங்குகளையும் வைத்திருக்கிறார். நம் இந்தியாவில் டாடா குருப் எப்படியோ, மெக்ஸிகோவில் கார்ஸோ குரூப் என்றால் அத்தனை பிரபலம். சுருக்கமாக மெக்ஸிகோவின் ஜிடிபியில் 6% இவர் நிறுவனங்களுடையத் தானாம்.

carlos slim helu கஞ்சத்தனம்

carlos slim helu கஞ்சத்தனம்

இப்படி மனிதர் தொடாத இடங்கள் மிகக் குறைவு என்றாலும், பல பெரிய பங்களாக்களை சொந்தமாக்கினாலும் மனிஷனுக்கு 40 வருடத்துக்கு முன் வாங்கிய பழைய வீடு தான் அத்தனை இஷ்டமாம். மனிஷன் உடுத்தும் உடை எல்லாம் சாதாரணமாக அவருடைய ரீடெயில் கடைகளுக்கே சென்று வாங்கி வந்து விடுவாராம். பெரிய பெரிய ஃபேஷன் டிசைனர்களைக் கூப்பிட்டு முதுகையே மூனு முறை அளவு எடுத்து தைத்துப் போடுவது எல்லாம் நம்மாளுக்கு சுத்தமாகப் பிடிக்காதாம்.

8. ஜிம் வால்டன் (Jim Walton)

8. ஜிம் வால்டன் (Jim Walton)

சொத்து மதிப்பு 45.2 பில்லியன் டாலர் (அக்டோபர் 2018). இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு என்கிற வார்த்தையை சாதாரன மக்களுக்கும் தன் பிசினஸ் ஆசையால் புரிய வைத்த பெருமை கொண்ட வால்மார்ட் குழுமத்தின் பிள்ளை. சாம் வால்டனின் கடைக் குட்டி மகன்.

1962-ல் தொடங்கப்பட்டு, 1969-ல் முறையாக அரசாங்கத்திடம் ஒரு நிறுவனமாக பதிவு செய்து இயங்கும் இந்த வால்மார்டுக்கு இன்று உலகம் முழுக்க 11,277 கடைகளும், 27 க்ளப்புகளும் இருக்கின்றன. கூடுதல் செய்தி: வால்மார்ட்டின் 11,277 அவுட் லெட்களுக்கு 54 வெவ்வேறு பெயர்களில் இயக்குகிறார்கள்.

Walmart-ன் பெயர்கள்

Walmart-ன் பெயர்கள்

Walmart de México y - அமெரிக்கா மற்றும் கனடாவில், Centroamérica - மெக்ஸிகோ & மத்திய அமெரிக்காவில், Asda - இங்கிலாந்தில், Seiyu Group - ஜபானில் என்று ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பெயரில் கடை நடத்துகிறார் நம் ஜிம் வால்டன்.

ஃபோர்ப்ஸ்

ஃபோர்ப்ஸ்

2018-ல் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் பட்டியலில் வால்மார்டுக்குத் தான் முதல் இடம். அதோடு உலகிலேயே அதிக ஊழியர்களை வைத்திருக்கும் தனியார் நிறுவனமும் வால்மார்ட் தான் 23 லட்சம் ஊழியர்கள். அப்பேர்பட்ட வால்மார்ட்டின் இயக்குநர் குழுவில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருந்துவிட்டு தற்போது Arvest வங்கியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த வங்கி சுமார் 17 பில்லியன் டாலர் சொத்துக்களை நிர்வகித்து வருகிறது.

முதல் வால்மார்ட்

முதல் வால்மார்ட்

இந்த பிரமாண்ட ஸ்டோர்களையும், வங்கியையும் நிர்வகிக்கும் ஜிம் வால்டன் தங்கள் குடும்பத்தின் முதல் வால்மார்ட் ஸ்டோருக்கு பக்கத்தில் வாங்கிய வத்திப் பெட்டி சைஸில் இருக்கும் அலுலகத்தில் இருந்து தான் இன்னும் செயல்படுகிறாராம். அந்த plain oak red building எனக்கு அவ்வளவு பிடிக்கும் என அர்கன்சாஸ் மாகாணத்தின் bentoville பகுதியில் இருக்கும் தன் வீட்டை மெச்சிக் கொள்கிறார். இருக்குற காசுக்கு மொத்த bentoville பகுதியையே விலை பேசலாம்யா...? இவர் என்ன பழைய வீட்டுக்கு இப்புடி உருகுறாரு.

7. ஜான் காட்வெல் (John Caudwell)

7. ஜான் காட்வெல் (John Caudwell)

இங்கிலாந்து டெலிகாம் துறை மன்னனின் சொத்து மதிப்பு மார்ச் 2018 படி 2.8 பில்லியன் டாலர். ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த Phone4u நிறுவனத்தின் நிறுவனர்.

மொபைல் போன்

மொபைல் போன்

மொபைல் போன்களை விற்பதில் பெரிய லாபம் உண்டு என உலகுக்கு நிரூபிக்கப் பிறந்தவர்கள். 1987-ல் மோடோரோலா செல் போன் நிறுவனத்திடம் இவர்கள் திட்டத்தைப் பேசி விளக்க சிரித்துவிட்டார்கள். சரி இந்த போன்களை முதலில் விற்றுவாருங்கள் பார்க்கலாம் என சவால் விட்டார்கள். அப்போது 1,350 பவுண்ட் ஸ்டெலிங்குக்கு ஒரு மொபைல் போன் என 26 செல் போன்களை கொடுத்தது மோட்டோரோலா நிறுவனம். இந்த 35,100 பவுண்ட் ஸ்டெலிங் தான் இந்த நிறுவனத்தின் முதலீடு. இந்த 26 போனை 8 மாதங்கள் காத்திருந்து காத்திருந்து பேசி ஒவ்வொரு போனையும் 2000 பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு விற்றார்கள்.

காட்வெல் வளர்ச்சி

காட்வெல் வளர்ச்சி

1991-ல் போன்களை விற்று கிடைத்த வருவாய் 13 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங். அன்றே இங்கிலாந்தின் மிகப் பெரிய செல் போன் வியாபாரி ஆகிவிட்டார்கள். 2003-ல் ஒரு நிமிடத்துக்கு 26 போன்களை விற்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்கள்.

 

 

மிகப் பெரிய வரி செலுத்தியவர்

மிகப் பெரிய வரி செலுத்தியவர்

இப்படி படிப்படியாக வலர்ந்த காட்வெல் ஒரு கட்டத்தில் இங்கிலாந்திலேயே அதிக வரி செலுத்துபவராக உருவெடுத்தார். வரியும் செலுத்தினார். ஆனால் இலகிய மனசு. நிறைய தான தர்மங்கள் செய்பவர். அதோடு நிறைய முதலீடுகளையும் செய்பவர். ரியல் எஸ்டேட், ஃபேஷன், தொழிற்சாலைகள் என பல துறைகளில் முதலீடு செய்து வருகிறார். ஜூலை 2010-ல் காட்வெல் குழுமத்தை மொத்தமாக 1.47 பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங்குக்கு விற்றுவிட்டார்.

காட்வெல் மொட்டை

காட்வெல் மொட்டை

இங்கிலாந்தின் பிரபலமான காட்வெல் சில்ட்ரன் அமைப்பு இவருடையது தான். இப்படி ஒரே வாழ்கையில் சாதாரன ஆளாக இருந்து பணக்காரன் ஆகி, மீண்டும் கொஞ்சம் காசோடு நல்லது செய்து வரும் இவருக்கு சலூன் என்றால் பிடிக்காது. முடிவெட்ட இவ்வளவு செலவு செய்யணுமா என கேட்பாராம்...? அதோடு
தன் முடியைக் கூட தானே வெட்டிக் கொள்ளும் மிகப் பெரிய கஞ்சன். தினமும் அலுவலகத்துக்கோ அல்லது தேவையான இடங்களுக்கோ இரு சக்கர வாகனத்திலேயே போய் வருவாராம். இவர் காட்வெல் குழுமத்தை விற்பதற்கு முன் தினமும் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு 22 கிலோமீட்டர் அப் & டவுன் இருசக்கர வாகனத்தில் தான் பயணிப்பாராம். ஒரு கார் வாங்கக் கூட செலவு பண்ண மாட்டீங்களா மகா பிரபு..?

 6. அமென்சியோ ஆர்டிகோ (Amancio Ortega)

6. அமென்சியோ ஆர்டிகோ (Amancio Ortega)

மார்ச் 2018 கணக்குப் படி 70.01 பில்லியன் டாலர் சொத்து உண்டு.  டொமாடினா (Tomatina) விழாவைக் கொண்டாடும் ஸ்பெயின் நாட்டைச் சேர்தவர். INDITEX என்கிற காஸ்ட்லியான ஆடை வடிவமைப்பு மற்றும் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் இணை நிறுவனர். சுருக்கமாக டெக்ஸ்டைல் உலகின் ராஜா.

உலகின் மிகப் பெரிய ஃபேஷன் டெக்ஸ்டைல் நிறுவனங்கள் பட்டியலில் INDITEX-க்குத் தான் முதலிடம். உலகம் முழுக்க ஐந்து கண்டங்களில் 73 நாடுகளில் 7,200 கடைகளுடன் கம்பீரமாக கால் மேல் கால் போட்டு அமர்கிறது இந்த INDITEX. INDITEX -ன் முக்கிய பிராண்டு ஸ்டோர் என்றால் அது Zara -தான்.

Zara

Zara

Zara தவிர Zara Home, Massimo Dutti, Bershka, Oysho, Pull and Bear, Stradivarius and Uterqüe போன்ற பிராண்டுகளை INDITEX நிறுவனம் வைத்திருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு பிரிவு வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக உடைகளை தயாரிக்கும். உதாரணமாக  Oysho - பெண்களுக்கான உள்ளாடைகளை தயாரிக்கும், Massimo dutto - குழந்தைகளுக்கான ஆடைகளை தயாரிக்கும்.

உடைக் கஞ்சம்

உடைக் கஞ்சம்

இப்படி உலகம் முழுக்க இருக்கும் பணக்காரர்களின் இவரின் உடைகளை வாங்கினாலும், அமென்சியோ மட்டும் சாதாரண ப்ளூ ப்ளேசர் மற்றும் வெள்ளை சட்டை தான் உடுத்துவாராம். சொல்லப் போனால் அதை ஒரு யூனிபார்ம் போல ரெகுலராகவே உடுத்துவாராம். சிறிய ஸ்பானிய நகரத்தில் தன்னுடைய இரண்டாவது மனைவியோடு ஒரு அபார்ட்மெண்டில் தான் இன்று வரை வசித்து வருகிறாராம். சார் வேறு வீடு பாக்கலாமே என்றால் "இந்த வீட்டுக்கு என்ன குறை" என்பாராம். சரிங்க அதனால தான் நீங்க பணக்காரனா இருக்கீங்க..!

 5. டேவிட் ஷெரிட்டன் (David Cheriton)

5. டேவிட் ஷெரிட்டன் (David Cheriton)

மார்ச் 2018-ல் ஃபோர்ப்ஸ் மதிப்பீடுகள் படி 6 பில்லியன் டாலர் சொத்து இருக்கிறது. இந்த கஞ்சப் பணக்காரர்களிலேயே சிறந்த கஞ்சர் அல்லது சிறந்த சிக்கனவாதி என்றால் அது நம் டேவிட் தான். ஒரு லோயர் மிடில் க்ளாஸ் என வகைப்படுத்தும் மக்களின் மன நிலையிலேயே வாழ்கிறார் மனிதர்.

ஒரு கல்லூரி பேராசிரியர் பணக்காரர் ஆக முடியுமா..? முடியும் என விடை சொல்லி பில்லியனரும் ஆகி இருக்கிறார் டேவிட். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டு கூகுளில் 1,00,000 டாலர் மட்டும் முதலீடு செய்தவருக்கு இன்று பில்லியன் டாலரில் கல்லா கட்டிவிட்டது. 

இன்வெஸ்டார்

இன்வெஸ்டார்

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இன்று நல்ல பிசினஸ் ஐடியாக்களைத் தேடிப் பிடித்து முதலீடு செய்து வருகிறார். அரிஸ்டா நெட்வொர்க்ஸ், க்ரானைட் சிஸ்டம்ஸ், கேலியா என பல நிறுவனங்களைச் சொல்லலாம்.

 

 

டீக் கஞ்சர்

டீக் கஞ்சர்

ஒரு வெளிநாட்டு டூரில் அதிக பணம் செலவாவது பற்றி கதறி அழுதது எல்லாம் வேற லெவல். அட இது எல்லாம் கூட ஓகே, நம் ஊரில் கல்யாண பந்தியில் உட்கார்ந்து கொண்டு, உணவை பார்சல் பண்ணச் சொல்லுவார்கள் இல்லையா அதே மாதிரி பெரிய ஹோட்டல்களுக்கு போய் சாப்பிட்டு விட்டு மிச்சம் இருக்கும் உணவை எல்லாம் பார்சல் பண்ணச் சொல்லி அடுத்த நாள் சாப்பிடுவாராம். இதை விடக் கொடுமை என்ன தெரியுமா... ஒரு டீ பேகை (Tea Dip) ரெண்டு மூன்று முறை பயன்படுத்துவாராம்.

ஹோண்டா கார்

ஹோண்டா கார்

தன்னுடைய முடியை தானே வேட்டிக் கொள்வது, விமானங்களில் எகானமி க்ளாஸிலேயே பரப்பது, தன்னுடைய பழைய வீட்டிலேயே 35 வருடமாக வாழ்ந்து வருவது. 2012-ல் வாங்கிய ஹோண்டா காரிலேயே தொடர்ந்து பயணம் செய்வது என செலவை பார்த்துப் பார்த்து செய்வார் பேராசிரியர்.

5. அசீம் ப்ரேம்ஜி (Azim Premji)

5. அசீம் ப்ரேம்ஜி (Azim Premji)

இந்த பட்டியலில் இருக்கும் ஒரே இந்தியர். இவரின் சொத்து மதிப்பு ஜூலை மதிப்பீடுகள் படி 21.1 பில்லியன் டாலர். இந்தியாவின் டெக் முகமாகப் பார்க்கப்படும் விப்ரோ டெக்னாலஜி நிறுவனத்தின் தலைவர். 

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது தந்தையின் மரணத்தால் இந்தியாவுக்கு வந்து குடும்ப பிசினஸை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். இவரின் குடும்ப வியாபாரம் என்ன தெரியுமா..? சமையல் எண்ணெய் வியாபாரம்.

 

பழைய டொயோட்டா கார்

பழைய டொயோட்டா கார்

அதன் பிறகு அசீமின் பிசினஸ் தொலை நோக்குப் பர்வையால் விப்ரோவை ஒரு மென்பொருள் ஐடி நிறுவனமாக மாற்றினார். விளைவு இன்று இந்தியாவின் 3-வது பெரிய ஐடி நிறுவனம், உலகின் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்று.

இப்படி நம்மவருக்கும் ஒரு சில சிக்கனக் பழக்கங்கள் உண்டு. அசீமுக்கு பழைய டொயோட்டா கொரோலா கார் தான் இன்னமும் அதிகார பூர்வமான காராம். அதில் தான் இன்னும் அலுவலகம் வீடு என்று எல்லா இடங்களுக்குக்கு சுற்றுவாராம். நம் தலைவருக்கு அவர்கள் ஊழியர்கள் செலவு செய்கிற டாய்லட் டிஸ்ஸூ பேப்பரைக் கூட கணக்கு வைத்திருப்பாராம். தினமும் அலுவலகத்தில் வேலை முடிந்து போகும் போது லைட், ஃபேன் எல்லாம் அனைத்துவிட்டுச் செல்லும் வழக்கத்தை பெருவாரியான கார்ப்பரேட்களிடம் விதைத்ததில் நம்மவருக்கு தனி இடம் உண்டு.

4. மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)

4. மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)

அக்டோபர் 2018 மதிப்பீடுகள் படி 61 பில்லியன் டாலர் சொத்து. உலக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் உபயோகிக்கும் ஒரு செயலி (அப்ளிகேஷன்) ஃபேஸ்புக். 2014-ல் ஹார்வெர்ட் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டு இன்று உலகை சைலெண்டாக ஆள்கிறது.

2009-ல் மொபைல் போன்களில் முகநூலைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை பெருக்கல் வாய்ப்பாடு போல அதிகரித்தது. 2011-ல் ”என்ன கூகிள் நல்லா இருக்கியா..?” என தோல் மேல் கைபோட்டு பேசும் அளவுக்கு கூகுளுக்கு அடுத்தபடியாக அதிகபட்ச பயனாளர்களை கொண்ட வலைதளமாக அரியாசனம் இட்டு அமர்ந்தது முகநூல்.

 

அசுர வளர்ச்சி

அசுர வளர்ச்சி

2008-ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலுக்கு, பின் 2011-ல் ஃபேஸ்புக்கின் முகம் மாறியது. ஜாலி, கேலி என்று இருந்தது போய் சீரியஸான விஷயங்களுக்கும் முகநூல் உதவியது. எகிப்திய புரட்சி தொடர்பான பல்வேறு கருத்துக்கள் நேரடியாக ஃபேஸ்புக்கில் விவாதிக்கப்பட்டது. அய்யாதுரை ஸ்டாலின் தொடங்கி, ஐந்து ரூபாய் சாமான் விற்பவர் வரை எல்லோருக்கும் ஒரு களம்... ஒரே தளம்... ஃபேஸ்புக். அது தான் மார்க் அதற்காகத் தான் மார்க் இன்று கொண்டாடப்படுகிறார்.

Dress & Car

Dress & Car

தலைவனைப் பற்றி அதிகம் பேச வேண்டாம். எல்லாருக்கும் தெரியும். இவருடைய சிக்கனத்துக்கு வருவோம். மனிதர் இன்னும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் காரில் தான் பயணிக்கிறார். அதுவுm வோக்ஸ் வேகன் பிராண்ட் கார் தான். நம் லோக்கல் கவுன்சிலர்கள் போல ஆடி, பி.எம்.டபிள்யூ எல்லாம் கிடையாது. மனிஷனோட Dressing sense பற்றி அதிகம் பேச வேண்டாம். அந்த பாழாய் போன க்ரே கலர் டிஷர்ட் & ஜூன்ஸ் காம்போ தான். யோவ் மார்க்கு என்னயா இது..? உங்க அடக்கத்துல மண் அள்ளிக் கொட்ட..! என கடுப்பாகாத மார்க் ரசிகர்களே கிடையாது என உறுதியாகச் சொல்லலாம்.

3. வாரன் பஃபெட் (Warren Buffet)

3. வாரன் பஃபெட் (Warren Buffet)

இந்த பணக்கார தாத்தாவின் சொத்து மதிப்பு 88.3 பில்லியன் டாலர், அக்டோபர் 2018 மதிப்பீடு. உலக பணக்காரர்களில் நம்பர் 3. உலகில் நம்பர் 1 பங்குச் சந்தை முதலீட்டாளர்.

1970-ல் தொடங்கப்பட்ட பெர்க்‌ஷேர் ஹதவே, நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ-வாக இருக்கிறார் நம் வாரன் பஃபெட். இவரும் அப்பன் சொல்லைக் கேட்காத பிள்ளை தானாம். வாரன் பஃபெட்டின் தந்தை பங்குச் சந்தையில் வியாபாரம் செய்ய வேண்டாம் எனச் சொல்லியும் விடாபிடியாக பங்குச் சந்தையில் முதலீடு செய்து பங்குச் சந்தைகளிலேயே தடம் பதித்தவர்.

வாரன் பஃபெட்

வாரன் பஃபெட்

நம் வாரன் பஃபெட்டுக்கு டெக்ஸ்டைல் பிசினஸ் மற்றும் டெக்னாலஜி கம்பெனிகள் மீது பெரிய நம்பிக்கை கிடையாது. இவரைப் பற்றி HBO வெளியிட்ட டாக்குமெண்ட்ரியை காண:

இப்படி கோடிகளில் புரளும் நம் பங்குச் சந்தை பிதாமகர் இன்னும் 1958-ல் 32,000 டாலருக்கு வாங்கிய 6000 சதுர அடி கொண்ட அந்த பழைய வீட்டில் தான் மனிஷன் இன்னும் வாழ்கிறார். மனிதருக்கு மெக்டானல்ட்ஸ் பர்கர் தான் ரொம்பப் பிடிக்கும். டெய்லி காரில் அலுவலகம் செல்லும் போது, இதை வாங்கிக் கொண்டு தான் பயணிப்பாராம். ரொம்ப முக்கியமான விஷயம் இந்த தள்ளாத 88 வயதிலும் காரை அவரே ஓட்டிச் செல்வார்.

2. பில் கேட்ஸ் (Bill Gates)

2. பில் கேட்ஸ் (Bill Gates)

இவரின் சொத்து மதிப்பு 96.1 பில்லியன் டாலர். உலகின் இரண்டாவது பணக்காரர், டெக் உலகின் நம்பர் 1 பணக்காரர். இன்று வரை டெக் உலகில் இவர் இடத்தை ஆப்பிள், அமேஸான் என எவரும் பிடிக்கவில்லை.

இவரைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன..? மைக்ரோசாஃப்டின் தலைவர், பெரிய தான வள்ளள், ஆப்பிள் தத்தளித்த போது கை கொடுத்து உதவிய நல்ல மனிதர், அதை ஸ்டீவ் ஜாப்ஸே பகிரங்கமாக பாராட்டினார். பில் & மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் தலைவர். இந்த உலகுக்கு எதாவது நல்லதை ஆணித்தரமாக செய்ய வேண்டும் என வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார்.

மெக்டொனல்ட் கூப்பன்

மெக்டொனல்ட் கூப்பன்

உலக பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் பல வருடம் பட்டா போட்டு உட்கார்ந்து இருந்தவர். இன்னும் ஃப்ரீ மெக்டொனல்ட் கூப்பன்களை பயன்படுத்தி பர்கர்களை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். நாம் பில் கேட்ஸ் இடத்தில் இருந்தால் இலவச கூப்பன்களை பயன்படுத்துவோமா என்ன..? அதனால் தான் அவர் பில் கேட்ஸ்..!

1. ஜெஃப் பிசாஸ் (Jeff Bezos)

1. ஜெஃப் பிசாஸ் (Jeff Bezos)

உலகின் நம்பர் 1 பணக்காரரின் சொத்து மதிப்பு 160 பில்லியன் டாலர். அமேஸான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ. கடந்த 30 ஆண்டுகளில் ஃபோர்ப்ஸ் பணக்காரர் பட்டியலில் 150 பில்லியன் டாலர் என்கிற பெரிய தொகையைக் கடந்த முதல் பணக்காரர் நம் ஜெஃப் பிசாஸ் தான்.

இவர் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்..? 1994-ல் தொடங்கிய அமேஸான் என்கிற இ-காமஸ் நிறுவனம், ப்ளூ ஆரிஜின் நிறுவனம், வாசிங்டன் போஸ்ட் என பல நிறுவனங்களை தொடங்கியும், வாங்கியும் நடத்தி வருகிறார். சமீபத்தில் தான் அமேஸானின் சந்தை மதிப்பு பங்குச் சந்தையில் 1 லட்சம் கோடி டாலராக அதிகரித்தது. ஆப்பிள் நிறுவனத்துக்குப் பின் உடனடியாக 1 லட்சம் டாலர் மதிப்பீடு கொண்ட நிறுவனமாக மாறியது அமேஸான் மட்டும் தான்.

 

ஹோண்டா அக்கார்ட் கார்

ஹோண்டா அக்கார்ட் கார்

மனிஷனுக்கு எப்போதோ வாங்கிய ஹோண்டா அக்கார்ட் கார் தான் ரொம்பப் பிடிக்குமாம். நம் தற்போதைய உலகின் நம்பர் 1 பணக்காரரின் ஆடைகள் அவரின் அலுவலகத்தில் சாதாரண ஹேங்கர்களில் தொங்கிக் கொண்டிருக்குமாம். அவ்வளவு ஏன் ஜெஃப் பிசாஸின் வொர்க்கிங் டெஸ்க் கூட சாதாரண ப்ளை உட் மரக்கட்டைகளால் தான் செய்யப்பட்டதாம். அந்த அளவுக்கு மிகவும் சாதாரண வசதிகளுடனேயே வாழ்வாராம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

world top 10 miserly billionaire who do bizzare things

world top 10 miserly billionaire who do bizzare things
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X