இப்போதைக்கு இவங்கதான் டாப்பு.. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பங்குச்சந்தை முதலீட்டிலும், பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 2 தசாப்தங்களாகவே தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது.

 

வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் இத்துறையில் இருக்கும் நிறுவனங்களின் வளர்ச்சியும் ஒவ்வொரு நாளும் மாறுபட்ட நிலையிலேயே உள்ள காரணத்தால் பணக்காரர்கள் பட்டியலில் ஒவ்வொரு வாரமும் மாற்றுப்பட்டு வருகிறது.

பல வருடங்களாக முதல் இடத்தைப் பிடித்துக்கொண்டு தன் இடத்தை யாருக்கும் கொடுக்க முடியாது என உறுதியாக நின்ற பில்கேட்ஸ் தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டார். இப்போது முதல் இடத்தில் யார் தெரியுமா..?

10வது இடம்

10வது இடம்

பர்னீச்சர் உலகில் மூடிசூடா மன்னனாக இருக்கும் ஐகியா நிறுவனத்தை நிறுவிய இங்வார் கெம்பார்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மொத்த சொத்து மதிப்பு: 50.7 பில்லியன் டாலர்

வயது: 91

தாய் நாடு: சுவீடன்

துறை: ரீடைல்

நிறுவனம்: ஐகியா

9வது இடம்

9வது இடம்

டெக் உலகை மாற்றி அமைத்த, இனி வரும் காலத்தை மாற்றி அமைக்கப்போகும் ஆல்பபெட் நிறுவனத்தின் சீஇஓ மற்றும் இணை நிறுவனரான லேரி பேஜ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார்.

மொத்த சொத்து மதிப்பு: 51.5 பில்லியன் டாலர்

வயது: 44

தாய் நாடு: அமெரிக்கா

துறை: தொழில்நுட்பம்

நிறுவனம்: கூகிள்

8வது இடம்
 

8வது இடம்

1977ஆம் ஆண்டுத் தன்னுடன் பணியாற்றிய இரண்டு நண்பர்களுடன் இணைந்து துவங்கிய ஒரு எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பயணம் இன்று உலகின் முன்னணி வன்பொருள் மற்றும் மென்பொருள் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

மேலும் அமெரிக்காவின் சிஐஏ அமைப்பிற்கு உருவாக்கி அளித்த டேட்டாபேஸ் சிஸ்டத்தின் மூலம் புதிய அந்தியாயத்தை எழுதத் துவங்கினார் லேரி எலிசன்.

லேரி எலிசன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இன்றைய நிலைக்கு 8வது இடத்தில் உள்ளார்.

மொத்த சொத்து மதிப்பு: 53.9 பில்லியன் டாலர்

வயது: 73

தாய் நாடு: அமெரிக்கா

துறை: டெக்னாலஜி

நிறுவனம்: ஆரக்கிள்

7வது இடம்

7வது இடம்

நுகர்வோர் சந்தையில் இருக்கும் உலகின் முன்னணி பிராண்டுகளில் ஒன்றான லூயிஸ் உட்டான் நிறுவனத்தின் தலைவர் பெர்நார்டு அர்னால்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார்.

மொத்த சொத்து மதிப்பு: 61.5 பில்லியன் டாலர்

வயது: 68

தாய் நாடு: பிரான்ஸ்

துறை: நுகர்வோர்

நிறுவனம்: லூயிஸ் உட்டான்

6வது இடம்

6வது இடம்

லத்தின் அமெரிக்காவில் மொபைல் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் அமெரிக்கா மோவில் மற்றும் குரூப்சோ கார்சோ நிறுவனத்தின் தலைவராக இருக்கும் கார்லோஸ் ஸ்லிம் இப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.

மொத்த சொத்து மதிப்பு: 63.5 பில்லியன் டாலர்

வயது: 77

தாய் நாடு: மெக்சிகோ

துறை: பல துறைகள்

நிறுவனம்: குரூப்சோ கார்சோ

5வது இடம்

5வது இடம்

பேஸ்புக் நிறுவனத்தைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. இந்நிறுவனத்தின் தலைவரான மார்க் ஜூக்கர்பெர்க் டாப் 10 உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மிகவும் இளமையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த சொத்து மதிப்பு: 72.3 பில்லியன் டாலர்

வயது: 33

தாய் நாடு: அமரிக்கா

துறை: தொழில்நுட்பம்

நிறுவனம்: பேஸ்புக்

4வது இடம்

4வது இடம்

ஆடை உலகின் முன்னணி மற்றும் ஆடம்பர பிரண்டுகளாகத் திகழும் சரா, மாஸிமோ டட்டி, ஒஷியோ எனப் பல பிராண்டுகளை வைத்திருக்கும் இன்டிடெக்ஸ் நிறுவனத்தின் தலைவராக உள்ளார் அமேன்சியோ ஆர்டிகோ.

மொத்த சொத்து மதிப்பு: 75.9 பில்லியன் டாலர்

வயது: 81

தாய் நாடு: ஸ்பெயின்

துறை: ரீடைல்

நிறுவனம்: இன்டிடெக்ஸ்

 3வது இடம்

3வது இடம்

முதலீட்டு உலகில் பலருக்கும் முன்மாதிரியாக விளங்கும் வாரன் பபெட் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.

மொத்த சொத்து மதிப்பு: 81.7 பில்லியன் டாலர்

வயது: 87

தாய் நாடு: அமெரிக்கா

துறை: பல துறை வர்த்தகம்

நிறுவனம்: பெர்ஷைர் ஹேத்வே

 2வது இடம்

2வது இடம்

பல வருடமாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்திலேயே இருந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிறுவனர்களில் ஒருவரான பில் கேட்ஸ் இப்பட்டியலில் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

மொத்த சொத்து மதிப்பு: 89.4 பில்லியன் டாலர்

வயது: 62

தாய் நாடு: அமெரிக்கா

துறை: தொழில்நுட்பம்

நிறுவனம்: மைக்ரோசாப்ட்

முதல் இடம்

முதல் இடம்

ஈகாமர்ஸ் மற்றும் கிளவுட் சேவையில் உலகின் முன்னணி நிறுவனமாகத் திகழும் அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பீசோஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.

கடந்த வாரம் பிளாக் ப்ரைடே தின விற்பனையில் அதிகளவிலான வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையைப் பெற்றதன் மூலம் இவரது சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் விலை அதிரடியாகக் குறைந்த நிலையில் ஜெப் பீசோஸ் அவர்களின் சொத்து மதிப்பு 1.6 பில்லியன் டாலர் குறைந்தது.

மொத்த சொத்து மதிப்பு: 98.4 பில்லியன் டாலர்

வயது: 53

தாய் நாடு: அமெரிக்கா

துறை: தொழில்நுட்பம்

நிறுவனம்: அமேசான்.காம்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

world top 10 richest billionaires in 2017

world top 10 richest billionaires in 2017
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X