சீனாவில் பிரம்மாண்ட கார் தொழிற்சாலையைக் கட்டும் சியோமி.. அடடே இந்தியாவுக்கு எப்போ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை நிறுவனமான சியோமி கடந்த ஒரு வருடமாகவே டெஸ்லா-வின் வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு எலக்ட்ரிக் வாகன பிரிவில் இறங்க வேண்டும் என்ற மிகப்பெரிய திட்டத்தைத் தீட்டி வருகிறது.

 

இந்நிலையில் சியோமி வருடத்திற்கு 3,00,000 கார்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைப் பெய்ஜிங்-ல் கட்ட உள்ளது. இந்தப் புதிய தொழிற்சாலையில் சீனா மட்டும் அல்லாமல் உலகம் முழுக்க வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்காக உருவாக்கப்பட்டு வருகிறது.

ஓலா, உபர்-ன் ஆட்டோ சேவைக்கு 5% ஜிஎஸ்டி.. ஜனவரி 1 முதல் கட்டணம் உயரும்..!

 சியோமி

சியோமி

ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சியோமி முதல் முறையாகப் பெரும் திட்டமிடல் உடன் கார் அதுவும் எலக்டிர் கார் தயாரிப்புத் துறையில் இறங்கியுள்ளது. இத்திட்டத்திற்காகப் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனத்தில் இருந்து உயர் அதிகாரிகளைத் தேடி தேடி பிடித்துள்ளது சியோமி.

 பெய்ஜிங்-ல் புதிய தொழிற்சாலை

பெய்ஜிங்-ல் புதிய தொழிற்சாலை

சியோமி நிறுவனம் பெய்ஜிங்-ல் கட்டப்படும் இந்தத் தொழிற்சாலையை இரண்டு பகுதிகளாகக் கட்டப்போகிறது. இதேவேளையில் சியோமி தனது ஆட்டோமொபைல் பிரிவு வர்த்தகத்தின் தலைமையகம், விற்பனை, ஆராய்ச்சி அலுவலகத்தையும் பெய்ஜிங் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பகுதியில் அமைக்க உள்ளது. இந்தப் பகுதி முழுக்க முழுக்கச் சீன அரசால் பொருளாதார வளர்ச்சிக்கு உருவாக்கப்பட்ட பெய்ஜிங் ஈ-டவுன் அமைப்பால் உருவாக்கப்பட்டது.

 சியோமி லீ ஜூன்
 

சியோமி லீ ஜூன்

சியோமி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான

லீ ஜூன் திட்டத்தின் படி 2024ஆம் ஆண்டுக்குள் சியோமி நிறுவனத்தின் இப்புதிய தொழிற்சாலையில் வருடத்திற்கு 3 லட்சம் கார்கள் என உற்பத்தி அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 10 பில்லியன் டாலர்

10 பில்லியன் டாலர்

சியோமி 2021 மார்ச் மாதத்திலேயே புதிய எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை மற்றும் வர்த்தகத்திற்காக அடுத்த 10 வருடத்திற்குச் சுமார் 10 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இப்பிரிவு வர்த்தகத்திற்காகச் சியோமி தனி நிறுவனத்தை ஆகஸ்ட் மாதம் துவங்கியது. தற்போது தொழிற்சாலை கட்டும் பணியைத் துவங்கியுள்ளது.

 சியோமி வளர்ச்சி

சியோமி வளர்ச்சி

சியோமி தனது கார் வடிவம், விலை, உற்பத்தி அளவு என அனைத்தையும் கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்ட நிலையில், தொழிற்சாலை கட்டும் இதேவேளையில் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதற்காகச் சீனா முழுவதும் திறக்கப்பட்ட சியோமி கடைகள் தற்போது கார் விற்பனை செய்யும் கடைகளாக மாறப் போகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Xiaomi to build electric vehicle Plant in Beijing with 10 billion dollar

Xiaomi to build electric vehicle Plant in Beijing with 10 billion dollar சீனாவில் பிரம்மாண்ட கார் தொழிற்சாலையைக் கட்டும் சியோமி.. அடடே இந்தியாவுக்கு எப்போ..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X