தங்கம் விலை கடந்த 24 மணி நேரத்தில் 3 முறை விலை உயர்ந்து பேரதிர்ச்சியை தந்துள்ளது. நேற்று காலை மற்றும் மாலை என இரண்டு முறை விலை உயர்ந்த தங்கம் இன்று காலையும் விலை கூடியுள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 270 ரூபாய் விலை உயர்ந்து 13,750 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 2,160 ரூபாய் விலை கூடி 1,10,000 ரூபாயை எட்டிவிட்டது. தங்கம் விலை கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி ஒரு கிராம் 13,750 ரூபாயாக இருந்தது. அதன் பின்னர் கிட்டதட்ட ஒன்றரை மாத காலம் தங்கம் விலை படிப்படியாக குறைந்து தான் வந்தது. இந்த சூழலில் நேற்று இன்று என போட்டி போட்டு கொண்டு தங்கம் விலை உயர்ந்திருக்கிறது.
நேற்று மட்டும் காலை ,மாலை என இரண்டு வேளையும் சேர்த்து மொத்தமாக தங்கம் விலை ஒரு கிராம் 280 ரூபாய் விலை உயர்ந்தது. இன்று காலை மீண்டும் 270 ரூபாய் அதிகரித்துள்ளது. அந்த வகையில் 24 மணி நேரத்தில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 550 ரூபாயும் ஒரு சவரன் 4,400 ரூபாயும் உயர்ந்துள்ளது. 10 கிராம் என பார்த்தால் ஒரே நாளில் 5,500 ரூபாய் விலை உயர்ந்து 137,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்கம் விலை இப்படி அதிகபட்ச விலையை எட்டியுள்ளது. அதாவது 7 வாரங்களில் இல்லாத உச்சபட்ச விலையை எட்டியுள்ளது. மதுரை, கோவை, திருச்சி என தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,750 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,10,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
5 ஆண்டுகளில் 300% லாபம்.. தங்க நகை விற்கும் நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா?
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை இன்று ஒரு கிராம் 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் 1,50,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று காலை முதல் இன்று காலை வரை ஒரு கிராமுக்கு 600 ரூபாயும் , 10 கிராம் தங்கம் 6000 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 270 ரூபாய் விலை உயர்ந்து 11,565 ரூபாய்க்கும் ஒரு சவரன் 2160 ரூபாய் விலை கூடி 92,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை இனி பூட்டி வைப்பது வேஸ்ட்.. பாரம்பரியத்தை உடைக்கும் ஜென்Z.. உலக தங்க கவுன்சில் சொன்ன விஷயம்!
வெள்ளியின் விலையை பொறுத்தவரை இன்றைய தினம் ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் விலை உயர்ந்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 10000 ரூபாய் விலை உயர்ந்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு வாரமாக வெள்ளியின் விலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்த நிலையில் நேற்றும் இன்றும் மொத்தமக ஒரு கிராமுக்கு 15 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 15,000 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.
உலக சந்தையில் ஸ்பாட் கோல்டின் விலை ஒரு அவுன்ஸ் 4,260 டாலராக இருக்கிறது. ஒரு அவுன்ஸ் வெள்ளி 62 டாலராக விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததே இந்தியாவிலும் தங்கம் விலை உயர காரணமாகும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More Articles
- முடிவுக்கு வரும் ஈரான் போர்..? 7 வார உயர்வில் Gold Rate.. இனி தொடர் ஏறுமுகம் தானா?
- தங்கத்தை இனி பூட்டி வைப்பது வேஸ்ட்.. பாரம்பரியத்தை உடைக்கும் ஜென்Z.. உலக தங்க கவுன்சில் சொன்ன விஷயம்!
- தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரே நாளில் ரூட்டை மாற்றிய தங்கம், வெள்ளி..!!
- தங்கம் விலை எவ்வளவு உயரும்.. அதிகப்படியான வாய்ப்பு இதுதான்..!
- தங்கம் விலையில் யூடர்ன்.. வெள்ளி கொடுத்த சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்து நடக்கும் டிவிஸ்ட்..!
- பட்டென குறைந்த தங்கம்.. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?