ஜூன் மாதத்தில் தங்கம், விலை படபடவென சரிந்து மக்களுக்கு நிம்மதியை தந்தது. ஜூலையிலும் அதே மாற்றம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்கம் மக்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்ததா இல்லை ஏமாற்றம் தந்ததா? இன்று தங்கம் விலை என்ன? என்பன உள்ளிட்ட தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
சென்னையில் இன்றைய தினம் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 25 ரூபாய் விலை உயர்ந்து 13,255 ரூபாய்க்கு விற்பனையாகிறது நேற்று 13230 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாயும் ஒரு சவரனுக்கு 200 ரூபாயும் உயர்ந்து 1,06,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து இந்த இரண்டு நாட்களி தங்கம் விலை ஒரு கிராமுக்கு 100 ரூபாயும் ஒரு சவரனுக்கு 800 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது.
ஜூலை மாதத்தில் பெரிய அளவில் தங்கத்தின் விலை மாறவில்லை. ஏனெனில் ஒன்றாம் தேதி அன்று தங்கம் விலை ஒரு கிராம் 13,250 ரூபாயாக இருந்தது. அதன் பின்னர் விலை ஏறி, இறங்கி மீண்டும் விலையேறி தற்போது ஒரு கிராமங்களை 13,255 ரூபாய் என்ற அளவில் நிற்கிறது. அதாவது ஜூலை ஒன்றாம் தேதியுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை மாதத்தின் கடைசி நாளான இன்று ஒரு கிராமுக்கு 5 ரூபாய் விலை கூடி இருக்கிறது. அந்த வகையில் தங்கம் விலை ஒரே அளவிலேயே இருக்கிறது. இதனால் மக்களுக்கு பெரிய ஏமாற்றம் தான்.
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை இன்று ஒரு கிராம் 14,460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் 1,44,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் 11,070 ரூபாய்க்கும் ஒரு சவரன் 88,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை மேலும் குறையும்..!! உலக தங்க கவுன்சில் வெளியிட்ட குட் நியூஸ்..!!
வெள்ளியின் விலையை பொறுத்தவரை இன்றைய தினம் ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. 4 நாட்களாக வெள்ளியின் விலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. ஜூலை 1ஆம் தேதி அன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 245 ரூபாயாக இருந்தது இன்று 10 ரூபாய் குறைந்திருக்கிறது. அதாவது இந்த ஒரு மாத காலத்தில் வெள்ளியின் விலை 10 ரூபாய் மட்டுமே குறைந்திருக்கிறது.
ஜூலை மாதம் தங்கம், வெள்ளி விலையில் பெரிய அளவு குறையாமல் மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளன. இந்த சூழலில் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியின் கூட்டம் நடைபெற்றது. அதில் வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கக்கூடிய கூட்டத்தில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதற்கான சிக்னலை வெளியிட்டு இருக்கிறது.
26 வருடத்தில் 2வது முறை.. தங்க நகைகளுக்கு இப்படியொரு நிலைமையா? உலக தங்க கவுன்சில் சொன்ன விஷயம்!
பொதுவாக அமெரிக்காவில் வட்டி விகிதம் மாறாமலோ அல்லது உயர்வதற்கான அறிகுறிகள் இருக்கிறது என்றாலோ தங்கம் விலை குறையும். ஏனெனில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து பணத்தை எடுத்து அமெரிக்க பத்திரங்களில் தான் முதலீடு செய்வார்கள். இதனால் தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்து அதன் விலை குறையும். அந்த வகையில் வரும் மாதங்களில் இன்னும் தங்கத்தின் விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதன் எதிரொலியாக தான் உலக சந்தையில் ஸ்பாட் கோல்டின் விலை ஒரு அவுன்ஸ் 4,081 டாலராக குறைந்துள்ளது.உலக சந்தையில் தங்கம் விலை குறைந்தால் இந்தியாவிலும் விலை குறையும் ஆனால் அதற்கு மாறாக இன்று சில்லறை விற்பனையில் தங்கம் விலை லேசாக உயர்ந்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More Articles
- 26 வருடத்தில் 2வது முறை.. தங்க நகைகளுக்கு இப்படியொரு நிலைமையா? உலக தங்க கவுன்சில் சொன்ன விஷயம்!
- தங்கம் தான் இப்போ செம பிஸ்ன்ஸ்.. டாடா, கோத்ரெஜ் வெளியிட்ட மெகா அறிவிப்பு!
- தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. காய் நகர்த்த துவங்கிய அமெரிக்கா.. இனி தான் திரில்லிங் ஆன நேரம்!
- உங்க கையில் ரூ.1 லட்சம் இருக்கா? இன்னைக்கு ரேட்டுக்கு எவ்வளவு தங்கம் வாங்க முடியும் தெரியுமா?
- ஆட்டத்தை கலைத்த ஈரான்.. தங்கம் விலையில் டிவிஸ்ட்.. இனி நடப்பதெல்லாம் இந்தொரு விஷயத்தை வைத்து தான்!
- தரையை தட்டும் தங்கம்.. 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய மாற்றம்!