தங்கம் 4100 டாலர் என்ற மட்டத்தை தாண்டுவதற்காக தொடர்ந்து போராடி வருகிறது, ஆனால் ஒவ்வொரு நாளும் ஈரான் போர், பெடரல் ரிசர்வ்-ன் வட்டி விகித உயர்வு தொடர்பான அச்சம் காரணமாக இந்த அளவீட்டை தாண்ட முடியாமல் உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்கம் மீதான தங்களுடைய கவனத்தை திருப்பியிருக்கும் காரணத்தால் உயர துவங்கியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 0.29 சதவீதம் உயர்ந்து 4067.18 டாலராக உள்ளது. இதே வர்த்தக சூழ்நிலை நிலைத்தால் அமெரிக்க வர்த்தக நேரத்தில் தங்கம் 4075 டாலரை தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம் தேர்வு செய்ய அமெகிக்கா கடைசி வாய்ப்பு கொடுத்திருப்பதாக டிரம்ப் கூறியும், ஈரான் செவி சாய்க்காத நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வண்ணம் உள்ளது.
ஹார்முஸ் நீரிணை இன்று ஓப்பன்.. டிரம்ப் அறிவிப்புக்கு பின்பும் இப்படி நடக்குதே.. ஈரான் திட்டம் என்ன..?
இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டை தேட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது, இதன் வெளிப்பாடாகவே தங்கம் இந்த வார சர்வதேச சந்தை வர்த்தகத்தில் 0.70 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இதுவே சென்னை ரீடைல் சந்தையில் 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 14351 ரூபாயில் இருந்து 14400 ரூபாயாக உயர்ந்து 0.3414% உயர்வை பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் தங்கம் விலை எந்தளவுக்கு உயரும் என்பதை முதலீட்டு சந்தையின் வர்த்தகத்தை பார்க்கும் போது எளிதாக புரிந்துக்கொள்ள முடியும். சர்வதேச ஸ்பாட் சந்தையில் இன்று தங்கம் விலை 4067.18 டாலராக இருக்கும் வேளையில், 21 நாள் சிம்பிள் மூவிங் ஆவரேஜ் விலை 4,061.33 டாலராக உள்ளது.
ஐடி துறையின் ஆட்டம் ஆரம்பம்.. சென்னை, கோவை சிறப்பான முன்னேற்றம்.. ஜூலை மாதம் நடந்த முக்கிய விஷயம்!
இந்த நிலையில் அடுத்தி சில நாட்களுக்கும் முதலீட்டு சந்தைக்கு தங்கம் சாதகமாக இருந்தால் 50 நாள் SMA அளவான 4,165.72 டாலரை எளிதாக எட்டலாம். இதற்கிடையில் போர் அச்சம் குறைன்து கச்சா எண்ணெய் பேரலுக்கு 65-70 டாலர் வரையில் வந்தால் 100 நாள், 200 நாள் SMA விலையான 4406.82 - 4490.03 டாலர் வரையில் உயரலாம் என கணிக்கப்பட்டுகிறது.
இதன் மூலம் இந்தியாவில் 24 கேரட் தங்கம் விலை 1 கிராம் 15,629.41 முதல் 15,924.52 ரூபாய் வரையில் உயரலாம். இந்திய ரீடைல் சந்தையில் ஜனவரி மாதம் அதிகப்படியாக 18,328 ரூபாய் வரையில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
இதேவேளையில் மீண்டும் முதலீட்டு சந்தை தங்கத்திற்கு எதிராக மாறும் பட்சத்தில் 4000 டாலர் அளவீட்டையும் இழந்து 3,951.44 டாலர் வரையிலும் வர வாய்ப்புள்ளது.
More Articles
- தங்கம் விலையில் யூடர்ன்.. வெள்ளி கொடுத்த சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்து நடக்கும் டிவிஸ்ட்..!
- பட்டென குறைந்த தங்கம்.. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?
- Gold: செம டிவிஸ்ட்.. 60 நாட்களுக்கு பின்பு நகை கடைகளுக்கு திடீரென மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.. ஏன்?
- தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லுமா? ஆகஸ்ட் மாதத்தில் என்ன நடக்கும்?
- தங்கம் விலை ஏறினாலும் , இறங்கினாலும் இவங்க பிஸ்னஸுக்கு மட்டும் மவுசு குறையவே இல்ல..!!
- தங்கம் விலை 28% சரிவு.. அடுத்து என்ன நடக்கும்.. 30 வருட வரலாற்று சொல்லும் முக்கிய தகவல்!