ஆபரணதங்கம் இன்று தடாலடியாக விலை உயர்ந்துள்ளது. நேற்று தமிழ்நாட்டில் தங்கம் விலை குறைந்திருந்த சூழலில் திடீரென இன்று விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் இன்றைய தினம் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்ந்து 13,360 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று 13,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் ஒரே நாளில் தங்கத்தின் விலை கிராமுக்கு 160 ரூபாயும் ஒரு சவரனுக்கு 1280 ரூபாயும் விலை கூடியுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்கம் விலை ஒரே நாளில் அதிக உயர்வு கண்டுள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் 1,06,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சி என தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,360 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,06,880 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
EPFO சம்பள வரம்பில் மாற்றம்.. மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்.. PF கணக்கில் என்னென்ன மாறுகிறது?
24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை இன்று ஒரு கிராம் 14,575 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் 1,45,750 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 175 ரூபாய்க்கும், 10 கிராம் தங்கம் 1750 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 160 ரூபாய் விலை உயர்ந்து 11,175 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1280 ரூபாய் விலை கூடி 89,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரேஷன் கார்டு KYC: சிறப்பு முகாம்கள் அறிவிப்பு.. இந்த தேதிய மிஸ் பண்ணிட்டா ரேஷன் அரிசி கிடைக்காது..
வெள்ளியின் விலையை பொறுத்தவரை இன்றைய தினம் ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை உயர்ந்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை உயர்ந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு வாரமாக வெள்ளியின் விலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.
உலக சந்தையில் ஸ்பாட் கோல்டின் விலை ஒரு அவுன்ஸ் 4,137 டாலராக இருக்கிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில் சுமார் 50 டாலர்கள் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை 1,45,544 ரூபாயாக வர்த்தகமாகிறது. உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததே இந்தியாவிலும் தங்கம் விலை உயர காரணமாகும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More Articles
- தங்கம் விலை எவ்வளவு உயரும்.. அதிகப்படியான வாய்ப்பு இதுதான்..!
- தங்கம் விலையில் யூடர்ன்.. வெள்ளி கொடுத்த சர்ப்ரைஸ்.. அடுத்தடுத்து நடக்கும் டிவிஸ்ட்..!
- பட்டென குறைந்த தங்கம்.. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?
- Gold: செம டிவிஸ்ட்.. 60 நாட்களுக்கு பின்பு நகை கடைகளுக்கு திடீரென மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.. ஏன்?
- தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லுமா? ஆகஸ்ட் மாதத்தில் என்ன நடக்கும்?
- தங்கம் விலை ஏறினாலும் , இறங்கினாலும் இவங்க பிஸ்னஸுக்கு மட்டும் மவுசு குறையவே இல்ல..!!