தமிழ்நாட்டில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம், விலை லேசாக உயர்ந்துள்ளது.இன்றைய தினம் சென்னை ,மதுரை , கோவை, திருச்சி உட்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் என்ன என்பதை நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

தமிழ்நாட்டில் நேற்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் 15 ரூபாய் விலை உயர்ந்து 13,150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் நகை என பார்க்கும்போது நேற்று விட இன்று 120 ரூபாய் விலை கூடி 1,05,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் எல்லாம் தங்கம் இதே விலைக்கு தான் விற்பனை ஆகிறது.

Advertisement

கடந்த வாரத்தில் 6 வர்த்தக நாட்களில் நான்கு நாட்கள் தங்கம் விலை சரிந்து இருந்தது, இரண்டு நாட்கள் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் இந்த வாரமே விலை உயர்வுடன் தான் தொடங்கி இருக்கிறது. ஈரான் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் தங்கம், விலையில் பெரிய மாற்றமில்லாமல் இருக்கிறது.

ரூ.9,000 குறைந்த தங்கம் விலை..!! இப்போ தங்கம் வாங்கலாமா? இன்னும் விலை குறையும் என காத்திருக்கலாமா?

இன்றைய தினம் உங்கள் கையில் 50,000 ரூபாய் இருந்தால் 12% செய்கூலி சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி சேர்த்து 22 கேரட் ஆபரண தங்கம் 3.296 கிராம் வாங்க முடியும். இதுவே 24 கேரட் என்றால் 3.02 கிராம் வாங்கலாம். 18 கேரட் தங்கம் என்றால் 50,000 ரூபாய்க்கு 3.95 கிராம் தங்கம் கிடைக்கும்.

Advertisement

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராமுக்கு 14,346 ரூபாய்க்கும் 10 கிராம் 1,43,460 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 10,965 ரூபாய்க்கு விற்பனையாகிறது, ஒரு சவரன் 87,720 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் வாங்க வேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள் இன்னும் விலை குறையும் என காத்திருக்காமல் இன்றைய விலை வாய்ப்பையே பயன்படுத்தி வாங்கி கொள்வது நல்லது.

தங்கம் விலை பத்தின கவலையே வேண்டாம்..!! 25 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்படும் இந்திய தங்க சுரங்கம்!!

வெள்ளி விலையில் மாற்றமில்லை ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.35 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. ஈரான் போர் , அமெரிக்க மத்திய வங்கி வட்டி நடவடிக்கைகள் ஆகியவற்றை பொறுத்து தான் இந்தியாவில் தங்கம், வெள்ளி விலையில் மாற்றத்தை காணலாம்.

Advertisement

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.