உலகளவில் தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்கம் விலை திடீரென உயர தொடங்கி இருக்கிறது. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் வெளியிட்ட ஒரு அறிவிப்பு தான் தங்கம் விலை உயர காரணம் என தெரிய வந்துள்ளது.

Advertisement

உலக சந்தையிலும், உள்ளூர் சந்தையிலும் ஜூன் மாதத்தில் தங்கம் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு விலை 3,980 டாலர்களாகவும், ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 1.04 லட்சம் என்ற அளவுக்கும் குறைந்து மக்களுக்கு சர்ப்பிரைஸ் தந்தது. ஜூலை மாதமும் இதே போல தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

Advertisement

அந்த வகையில் உலக சந்தையில் ஸ்பாட் கோல்டு ஒரு அவுன்ஸ் மீண்டும் 4000 டாலரை கடந்து 4,070 டாலர்களாக வர்த்தகமாகிறது. ஒரே நாளில் 1% அளவுக்கு தங்கம் விலை உயர்வு கண்டுள்ளது. சென்னையிலும் இன்று தங்கம் விலை சவரனுக்கு 1200 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,07,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் கெவின் வார்ஷ் வெளியிட்ட ஒரு அறிவிப்பு தான் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் ஏற்றமடைய காரணமாக உள்ளது. போர்ச்சுகலில் நடைபெற்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் வருடாந்திர கருத்தரங்கில் பேசிய அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ், விலைவாசி உயர்வு அபாயங்கள் கடந்த சில வாரங்களில் குறைந்துள்ளதாக கூறினார். அமெரிக்காவில் பணவீக்கத்தை 2% என்ற இலக்குக்குக் கொண்டு வருவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

Advertisement

வட்டி விகிதங்கள் தொடர்பான Forward Guidance-ஐ (வட்டி விகித போக்கினை தீர்மானிக்கும் வழிகாட்டி) வழங்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தது, சந்தையில் நிலவி வந்த நிச்சயமற்ற தன்மையை குறைத்தது. அதாவது இந்த ஆண்டு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வந்தது இதனால் பலரும் தங்கத்தை விடுத்து டாலரிலும் பத்திரங்களிலும் முதலீடு செய்தனர். இந்நிலையில் கெவின் வார்ஷின் கருத்துகள் இந்த அச்சத்தை ஓரளவுக்கு தணித்துள்ளன.

வட்டி உயர்வுக்கான சாத்தியங்கள் குறைந்திருப்பதாக கருதும் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தை நோக்கி நகர தொடங்கி இருப்பதால் தங்கம் விலை 4,000 டாலர் என்ற முக்கிய வரம்பை கடந்து 4,070 டாலராக உயர்ந்துள்ளது. இது தான் இந்திய சந்தையிலும் இன்று எதிரொலித்தது.

Advertisement

அமெரிக்க வட்டி விகித கொள்கை குறித்த தெளிவான நிலைப்பாடு வரும் வரை தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில் கெவின் வார்ஷின் சமீபத்திய பேச்சு, தங்கம் மீண்டும் வலுப்பெறுவதற்கான வாய்ப்பை தந்துள்ளன. இனி வரும் நாட்களில் உலக நடப்புகள், அமெரிக்க மத்திய வங்கியின் முடிவு ஆகியவற்றை பொறுத்து தங்கம் விலையில் மாற்றத்தை பார்க்கலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.