இந்திய தங்க நகை கடைகளில் முன்னணி நிறுவனமான விளங்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் ஜூன் காலாண்டு முடிவுகளுக்கு பின்பு தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருந்து வரும் வேளையில், உள்நாட்டு மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் சுமார் 5 கோடி பங்குகளை பிளாக் டீல் வாயிலாக விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
இதன் தகவல் முதலீட்டு சந்தையில் பெரிய அளவில் எதிரொலித்து இன்றைய வர்த்தகத்தில் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்து 573.10 ரூபாயில் இருந்து 563.20 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.
என்டிடிவி வெளியிட்ட செய்தியில் நாட்டின் முன்னணி மியூச்சுவல் பண்ட் நிறுவனம் சுமார் 5 கோடி கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகளை பிளாக் டீல் மூலம் 8-10 சதவீத தள்ளுபடியில் விற்க உள்ளதாக தெரிவித்தது. ஆனால் இந்த செய்தியில் எந்த நிறுவனம் விற்கப்போகிறது என்பதை குறிப்பிடவில்லை.
ஆனால் சந்தை தரவுகளை வைத்து பார்க்கும் போது, ஜூன் 30ஆம் தேதி முடிவில் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தில் 5 கோடிக்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பட்டியலில் மோதிலால் ஆஸ்வால் மிட்கேப் பண்ட்ஸ் சுமார் 9.71 சதவீதம் அதாவது கிட்டத்தட்ட 9.5 கோடி பங்குகளை வைத்துள்ளது.
SUV எல்லாம் இனி செட் ஆகாது.. மீண்டும் பழையப்படி குட்டி காருக்கு மாறிய மக்கள்!
இதனால் இந்த பண்ட் கூட விற்க வாய்ப்புள்ளது, கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகளை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 50 சதவீதம் வரையில் உயர்ந்திருக்கும் வேளையில் இதை பணமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் பிரதமர் மோடி ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்த அடுத்த ஒரு வருடத்திற்கு மக்களை தங்கத்தை வாங்க வேண்டாம் என அறிவித்ததோடு, தங்கம் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டது.
இந்த அறிவிப்பு நகை கடைகளின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், ஜூன் காலாண்டு முடிவுகளில் கல்யாண் ஜுவல்லர்ஸ் சுமார் 38 சதவீத அதிக வருவாய் ஈட்டியது பலரையும் வியக்க வைத்தது. இதன் வாயிலாகவே கடந்த ஒரு மாதத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.
இதேவேளையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் பங்குகள் தற்போது 564.80 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டாலும் ப்ரோகரேஜ் நிறுவனமான சிட்டிகுரூப் இந்நிறுவனத்திற்கு சுமார் 750 ரூபாய் டார்கெட் விலையை கொடுத்துள்ளது.
More Articles
- உயர்ந்தது தங்கம் விலை..!! சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை என்ன?
- முதலீட்டாளர்களே இந்த வாரம் ரொம்ப முக்கியம்.. கட்டம் கட்டி அடிச்சா லாபம் தான்!
- 28% சரிந்த தங்கம் விலை..!! 30 ஆண்டு கால வரலாற்றை சுட்டிக்காட்டி எச்சரிக்கும் நிபுணர்கள்..!!
- 10 ஆண்டுகளில் இல்லாமல்.. தங்கத்தை வாங்கி குவிக்கும் உலக நாடுகள்! திடீரென ஏன் இந்த முடிவு?
- தங்கம் விலை: ஜூலை மாசத்துல என்னென்ன நடந்திருக்கு பாருங்க..!! வெள்ளி விலையை அடிச்சிக்கவே முடியாது..!!
- தங்கம் விலையில் யூடர்ன்.. ஒரேநாளில் கிராமுக்கு 300 ரூபாய் குறைந்த தங்கம்..!!