இன்று செலவு செய்து நாளை பணம் செலுத்தலாம் என்ற வசதியே பெரும்பாலானோர் கிரெடிட் கார்டு பெறுவதற்கு காரணமாகிறது. அதிக பணப்பரிவர்த்தனை கொண்ட அக்கவுண்டுகளை குறிவைத்து வங்கிகளும் ஆஃபர்களை அள்ளித் தந்து கிரெடிட் கார்டு வழங்கி வருகின்றன. அப்படி வழங்கப்படும் கார்டுகளுக்கு சில வங்கிகளில் 36 முதல் 45 சதவீதம் வரை வருடாந்திர வட்டி வசூலிக்கப்படுகிறது. இதையெல்லாம் கவனிக்கும் சிலர் கிரெடிட் கார்டுகளுக்கு வசூலிக்கப்படும் மறைமுக கட்டணங்களை கவனிப்பதே இல்லை.

Advertisement

மினிமம் டியூ: கிரெடிட் கார்டு பெறுவதற்கு முன்பு ஒவ்வொருவரும் அதற்கான கட்டணங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். மினிமம் டியூவை மட்டும் செலுத்தி வந்தால் உங்கள் அக்கவுண்ட் டிஃபால்ட் ஆகாமல் தப்பிக்குமே தவிர.. மீதமுள்ள தொகைக்கு சேர்த்து வட்டி ஏறிக்கொண்டு இருக்கும். ஆண்டுக்கு 45 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படலாம். எனவே ஒவ்வொரு மாதமும் முழு பில் தொகையையும் செலுத்த முயற்சி செய்யுங்கள்!

Advertisement

ஏடிஎம்-இல் பணம் எடுப்பதை தவிருங்கள்: சிலர் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஏடிஎம்-மில் பணம் எடுத்து விடுவார்கள். கிரெடிட் கார்டுகளுக்கு வட்டி இல்லா காலம் வழங்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் வங்கிகள் கேஷ் அட்வான்ஸ் என்ற மற்றொரு கட்டணத்தையும் இதற்கு வசூலிக்கின்றன. உங்கள் தேவைக்காக யோசிக்காமல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் நீங்கள் அதிக வட்டி செலுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். அவசர செலவுகள் ஏற்பட்டால் ஒழிய கிரெடிட் கார்டு மூலம் ரொக்கமாக பணம் எடுப்பதை தவிருங்கள்.

லேட் பேமென்ட்: உரிய தேதியில் கிரெடிட் கார்டு பில்லை செலுத்துங்கள். தாமதமாக நீங்கள் செலுத்துவதற்கு தாமதக் கட்டணம் வசூலிக்கப்படுவதோடு, மீதமிருக்கும் தொகைக்கும் வட்டி ஏறிக்கொண்டே செல்லும். இதனால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிப்படையும். கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் பிற்காலத்தில் கடன் பெறுவது சிரமமாக இருக்கும். எனவே உங்களுடைய பேங்க் அக்கவுண்டில் ஆட்டோ பே ஆப்ஷனை ஆன் செய்து வைக்கலாம். அப்படி இல்லை என்றாலும் ரிமைண்டர் அமைத்துக் கொள்வது நல்லது.

Advertisement
உயில் மட்டும் இருந்தால் போதாது! உங்கள் பெயரில் சுமூகமாக சொத்தை மாற்ற வேண்டுமா? உடனே Probate வாங்குங்க!

ஆன்லைன் ஷாப்பிங் கட்டணங்கள்: வெளிநாடு செல்லும்போது அல்லது அங்குள்ள ஆன்லைன் இணையதளங்களில் ஷாப்பிங் செய்யும் போது கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் அதற்கு ஃபாரின் கரன்சி மார்க் அப் கட்டணம் என்ற ஒரு வித கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனுடன் ஜிஎஸ்டி-யும் சேர்த்து செலுத்த வேண்டும். எனவே அடிக்கடி வெளிநாடு செல்பவர்கள் குறைந்த மார்க்கப் கட்டணம் உடைய கிரெடிட் கார்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

கிரெடிட் லிமிட்டை தாண்டி செலவு செய்தல்: உங்களுக்கு எவ்வளவு கிரெடிட் லிமிட் வழங்கப்பட்டிருக்கிறதோ அதைவிட அதிகமாக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். இதற்கு ஓவர் லிமிட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில வங்கிகள் அனுமதிக்கப்பட்ட வரம்பை தாண்டி செலவு செய்யும்போது அந்த பரிவர்த்தனையை நிராகரித்து விடும். ஆனால் சில வங்கிகள் இதற்கு அனுமதித்து அதன் பிறகு கூடுதல் கட்டணம் வசூலிக்கும். இதனாலும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும்.

Advertisement

எனவே கிரெடிட் கார்டை பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அவற்றின் விதிகளை படிக்காமல் பயன்படுத்துவது தான் ஆபத்தில் போய் முடியும். எனவே கிரெடிட் கார்டு பெறும் போது அதற்கான நிபந்தனைகள் மற்றும் விதிகளை தெளிவாக படித்துவிட்டு அதன் பிறகு வாங்க வேண்டும்.