இந்தியர்கள் திருமணம், விசேஷம், பண்டிகைகள், முதலீடு, சேமிப்பு என எல்லாவற்றுக்கும் தங்கம் வாங்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். பெரும்பாலும் தங்கம் வாங்கும் போது கேஷ் ஆகவோ அல்லது டெபிட் கார்டு மூலமாகவோ தான் பணம் செலுத்துவோம். ஆனால் இப்போது சிலர் கிரெடிட் கார்டை அதிகம் பயன்படுத்தி தங்கம் வாங்கி வருகின்றனர். கிரெடிட் கார்டு மூலம் தங்கம் வாங்குவதால் ஒரு சில நன்மைகளும் கிடைக்கிறது .
கிரெடிட் கார்டை வைத்து நீங்கள் செலவு செய்யும் போது அதற்கு ரிவார்ட் பாயிண்ட்டுகள் மற்றும் கேஷ் பேக் ஆஃபர்களை பெறலாம். அதற்காக கார்டை அனாவசியமாக பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் கிரெடிட் கார்டு வட்டி பிற லோன்களைக் காட்டிலும் சற்று அதிகம். உதாரணமாக வருடத்திற்கு 45 சதவீதம் வரை சில கிரெடிட் கார்டுகளுக்கு வட்டி வசூலிக்கப்படுகின்றன.
நகைக் கடைகள், ஆன்லைன் ஸ்டோர்கள் போன்றவை கிரெடிட் கார்டு மூலம் தங்கம் வாங்குவதை அனுமதிக்கின்றன. எனவே நீங்கள் எளிதாக பணம் செலுத்தி தங்கம் வாங்கலாம். ஆனால் எல்லா இடங்களிலும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் வசதி இருப்பதில்லை. இந்த வசதி விற்பனையாளர் மற்றும் கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியை பொருத்து மாறுபடும்.
கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட தளங்களில் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கும். கார்டை பயன்படுத்தி அதிக அளவில் தங்கம் வாங்கினால் அதன் விதிமுறைகள் என்னென்ன என்பதையும் கட்டண விதிகளையும் ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
RBI வங்கி செயல்முறைகள் அனைத்திற்கும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்கும். அதேபோல கிரெடிட் கார்டு பயன்பாட்டுக்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 2013-ஆம் ஆண்டில் இதற்கான ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஒரு சில கிரெடிட் கார்டு வழங்குனர்கள் தங்கம் வாங்கிவிட்டு ஈஎம்ஐ முறையில் பணம் செலுத்தும் வசதியை வழங்கினர். ஆனால் ரிசர்வ் வங்கி இதற்கு கட்டுப்பாடுகளை விதித்தது.
இனி தங்க காயின்கள் மற்றும் தங்க பார்களை வாங்கிவிட்டு ஈஎம்ஐ முறையில் பணம் செலுத்த அனுமதிக்க கூடாது என வங்கிகளுக்கு உத்தரவிட்டது. அதிலிருந்து சில வங்கிகள் இதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஒரு சில கார்டு வழங்குனர்கள் தங்கம் வாங்கிவிட்டு கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த அனுமதிக்கின்றன. அப்படி செலுத்தும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சில நகைகடைகளில் ஸ்வைப் கட்டணம் என்று சொல்லப்படுகிற பரிவர்த்தனை கட்டணம் விதிக்கப்படுகிறது. உதாரணமாக நீங்கள் ரூ.2 லட்சத்திற்கு நகை வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு 3 முதல் 3.5 சதவீதம் வரை பரிவர்த்தனை கட்டணமாக வசூலிக்கப்படும். தங்கம் மற்றும் வெள்ளி வாங்க கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினாலும் மறு மாதத்திற்குள் முழுமையாக பில் செலுத்த முயற்சி செய்ய வேண்டும்.
கிரெடிட் கார்டுக்கு 42 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி சில இடங்களில் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில கார்டு வழங்குநர்கள், கிரெடிட் கார்டை தங்கம் வாங்க பயன்படுத்தினாலும் அதற்கு ரிவார்டு பாய்ண்டுகளை வழங்கப்படுவதில்லை. எனவே கார்டின் விதிமுறைகளை படித்து தெரிந்து கொள்வது சிறப்பு!
More Articles
- கிரெடிட் கார்டில் ஒளிந்திருக்கும் 5 மறைமுக கட்டணங்கள்! இது தெரியாம வாங்கிடாதீங்க!
- HDFC கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ஷாக்! விமான நிலைய லவுஞ்ச் வசதி பெற புதிய விதிமுறை அமல்
- ஏர்போர்ட் லவுஞ்ச் வசதி இனி கிடைக்காதா? ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய கிரெடிட் கார்டு விதிகள்!
- ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் பயனர்களே: கிரெடிட் கார்டு ரிவார்டு பாயிண்ட்ஸில் அதிரடி மாற்றம் - உங்கள் பலன்களை இழக்காதீர்கள்!
- இண்டஸ்இண்ட் வங்கி கிரெடிட் கார்டு பயனர்களே உஷார்! இன்று முதல் அமலுக்கு வரும் புதிய கட்டண விதிகள் இதோ!
- ஃபிஃபா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்: HDFC-யின் புதிய PIXEL Play கார்டு இன்று மாலை அறிமுகம்!