தங்கம் எப்போதுமே மதிப்பு கொண்ட ஒரு சொத்து எனவே தயங்காமல் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள், பிட்காயின் என்பது டிஜிட்டல் தங்கம் அச்சப்படாமல் முதலீடு செய்யலாம் என பலரும் கூறுவது உண்டு. ஆனால் எந்த முதலீடும் எப்போது வேண்டுமானாலும் வீழ்ச்சி அடையும் நஷ்டத்தையும் தரும் என்பதற்கு இந்த இரண்டு முதலீடுகளுமே பெரிய உதாரணமாகிவிட்டன.
வழக்கமாக போர் அல்லது புவிசார் அரசியல் பதற்றங்கள் நிலவும் காலங்களில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கம் மற்றும் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகள் இருக்கும். இதுதான் நாம் பார்த்த வரலாறு. ஆனால் ஈரான் போர் கிட்டதட்ட 4 மாதங்களுக்கும் மேலாக முடிவில்லாமல் நீடிக்கிறது. ஆனால் தங்கமும், பிட்காயினும் வளர்ச்சி அடையாமல் முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தையே தந்துள்ளன.
இந்த ஆண்டில் இதுவரை பிட்காயின் சுமார் 27% முதல் 31% வரையிலும், தங்கம் சுமார் 7% வரையிலும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்காவின் முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளான நாஸ்டாக் 10%, எஸ்&பி 500 போன்றவை 9% வரை இந்த ஆண்டில் லாபத்தை சந்தித்துள்ளன. இது, தங்கம், பிட்காயின்கள் மீது முதலீட்டாளர்களுக்கு இருந்த நம்பிக்கை குறைந்திருப்பதையே காட்டுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது ஒரு பிட்காயின் மதிப்பு சுமார் 64,000 டாலர்களாக உள்ளது. இதுவே கடந்த ஆண்டில் 1 லட்சம் டாலர்களை கடந்தது, தங்கம் விலை இந்திய சந்தையிலேயே 22 கேரட் ஆபரண தங்கம் 1.33 லட்சம் என்ற உச்சத்தை தொட்டு தற்போது 1.05 லட்சம் என்ற நிலையில் நீடிக்கிறது.
அடுத்த 3 – 5 ஆண்டுகளுக்கு இது தான் தங்கம் விலை..!! அடித்து சொல்லும் நிபுணர்கள்..!!
தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு என்ற பிம்பம் உடைந்து, முதலீட்டாளர்கள் தற்போதைய புவிசார் அரசியல் பதற்றங்களை கண்டு கொள்ளாமல் விலகிச் செல்வது விசித்திரமாக இருப்பதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். தங்கம் விலை சரிந்ததற்கான காரணங்களை Global X ETF நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் ஜஸ்டின் லின் தெளிவாக பட்டியலிட்டுள்ளார்.
அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாக இருப்பதால், முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் கிரிப்டோ போன்ற சொத்துக்களில் இருந்து வெளியேறி, டாலர் சார்ந்த முதலீடுகளை நோக்கி நகர்கின்றனர். அதுமட்டுமில்லாமல் முதலீட்டாளர்கள் தற்போது தங்கம் மற்றும் பிட்காயினை விட, செயற்கை நுண்ணறிவு சார்ந்த வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளில் அதிக முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர் என்கிறார்.
PF ஓய்வூதிய தொகை ரூ.7,500ஆக உயர்கிறதா? மக்களவையில் மத்திய அரசு விளக்கம்..!!
தங்கம் மற்றும் பிட்காயின் நிலையான வருமானமோ, டிவிடெண்டோ தருவதில்லை என்பதால் முதலீட்டாளர்கள் இவற்றை தவிர்க்க தொடங்கியுள்ளனர் என்றும் அவர் விளக்குகிறார். அதேசமயம், பேங்க் ஆஃப் அமெரிக்கா , ஜேபி மார்கன் ஆகியவை தங்களின் முந்தைய தங்க விலை கணிப்புகளை குறைத்து கொண்டுள்ளன. அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பால் தங்கத்தின் டிமாண்ட் குறைந்து பெரிய அளவில் விலை ஏற்றம் இருக்காது என கூறுகின்றன.
அந்த வகையில் போர் சூழலிலும் தங்கம் மற்றும் பிட்காயின் ஆகிய இரண்டும் 2026-ல் முதலீட்டாளர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை தந்த முதலீடுகளாக மாறியுள்ளன. இனி வரும் நாட்களிலாவது இவற்றின் விலை உயருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More Articles
- பிட்காயின், கிரிப்டோ வைத்திருப்பது 'Haram'.. பாகிஸ்தான் அமைப்பின் அறிவிப்பு..!
- பிட்காயின் முதலீட்டாளர்கள் தலையில் துண்டு!! வரலாறு காணாத சரிவில் இருந்து மீண்டு வருமா கிரிப்டோசந்தை?
- எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!
- பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!
- மொத்தமும் போச்சு!! பிட்காயின் முதலீட்டாளர்கள் தலையில் துண்டு!! கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை!!
- உலகமே வெறுக்கும் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தான் பிட்காயினை கண்டுபிடித்தாரா? உண்மை என்ன?