உலக சந்தையிலும் சரி உள்ளூர் சந்தையிலும் சரி தங்கம் விலை தன்னுடைய வரலாற்று உச்சபட்ச விலையிலிருந்து 25 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. நீண்ட காலத்திற்கு பின் ஜூன் மாதத்தில் தான் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை தொடர்ச்சியாக குறைந்திருக்கிறது என தங்கம் விலை நிலவரத்தை கண்காணித்து வரக்கூடிய நிபுணர்கள் கூறுகின்றனர்.

Advertisement

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இன்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 13,100 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,04,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராம் 14291 ரூபாய்க்கும் 10 கிராம் தங்கத்தின் விலை 1,42,910 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்திலும் 10 கிராம் தங்கத்தின் விலை 1,41,000 ரூபாயாக ஆக வர்த்தமாகிறது.

Advertisement

உலக சந்தையை பொருத்தவரை ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டின் விலை 4000 டாலருக்கும் கீழ் சென்று 3980 டாலர்களாக வர்த்தமாகி வருகிறது. தங்கத்தின் விலை கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் கிட்டத்தட்ட 10 % விலை குறைந்துள்ளது. உதாரணமாக தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 14,500 ரூபாயாக இருந்தது ஜூன் 30-ஆம் தேதி அன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 13,200 ரூபாய் என விற்பனையானது.

அதாவது ஜூன் மாதத்தில் தங்க கிராமுக்கு கிட்டத்தட்ட 10 % குறைந்து அதாவது 1300 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் என பார்க்கும்போது 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஜூன் மாதத்தில் மட்டும் 10,400 ரூபாய் விலை சரிவடைந்து இருக்கிறது. ஜூலை மாத தொடக்கமான இன்றும் தங்கம் விலை குறைவில் தான் வர்த்தகமே தொடங்கியுள்ளது.

ஜூன் மாதத்தை போலவே ஜூலை மாதமும் தங்கம் 10% வரை குறைந்தால் சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 11,790 ரூபாய்க்கு செல்லும் அப்படி என்றால் ஒரு சவரன் தங்கம் விலை 94,320 ரூபாயாக குறையும். தற்போதுள்ள விலையிலேயே தங்கம் கிராமுக்கு 700 ரூபாய் குறைந்தால் போதும் தங்கம் ச்வரனுக்கு 1 லட்சம் ரூபாய் என சரிந்திவிடும்.

Advertisement

அடுத்து வரக்கூடிய சில மாதங்களுக்கு தங்கம் விலை பெரிய அளவில் உயராது என்றே நிபுணர்கள் கணிக்கின்றனர். இதற்கு அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுவது ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் உலக சந்தையில் ஏராளமான முதலீட்டாளர்கள் டாலர் அடிப்படையிலான வட்டி வருமானம் தரக்கூடிய முதலீடுகளுக்கு தங்களுடைய பணத்தை மாற்றி வருகின்றனர். எனவே தங்கத்தின் டிமாண்ட் குறைந்து விலையும் குறைந்துள்ளது. இந்த போக்கு இப்படி நீடித்தால் தங்கம் விலை குறையும் என சொல்லப்படுகிறது.

ஜூனை போலவே ஜூலையிலும் தங்கம் விலை குறைந்தால் சாமானிய மக்களுக்கு , வீட்டில் திருமணம் போன்ற விசேஷங்களை நடத்துவோருக்கு பெரிய ஜாக்பாட்டாக அமையும். ஏனெனில் இந்த ஆண்டு இறுதி முதல் தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். அந்த வகையில் ஜூன் மாதம் மேஜிக் ஜூலையிலும் நிகழ்கிறதா என்பதை நாம் பொறுத்து தான் பார்க்க வேண்டும்.

Advertisement

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.