உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றான ரஷ்யா தனது பொருளாதாரம், நாணய மதிப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் தங்கத்தை அதிகளவில் விற்பனை செய்து வருகிறது.
ரஷ்யாவின் மத்திய வங்கியான சென்டர்ல் பேங்க் ஆப் ரஷ்யா வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் 43.5 டன் தங்கத்தை விற்பனை செய்து பணமாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் நடப்பு ஆண்டின் 2ஆம் பாதியை அதாவது ஜூலை மாதத்தை 2,282 டன் தங்க இருப்புடன் துவங்கியுள்ளதாக சென்டரல் பேங்க் ஆப் ரஷ்யா தெரிவித்துள்ளது, மேலும் தற்போது கையிருப்பில் தங்கத்தின் மதிப்பு தற்போதைய சந்தை மதிப்பின் படி 299 பில்லியன் டாலராகவும் மதிப்பிடப்பட்டு உள்ளது.
ரஷ்யா தனது தங்கத்தை ரஷ்ய வங்கிகளுக்கு தான் பெரும் பகுதி செய்துள்ளது, இந்த தங்கத்தை வைப்பாக வைத்துக்கொண்டு பணமாக பெற்றுள்ளது, சில சிறிய அளவிலான தங்கத்தை ரீடைல் சந்தையிலும் விற்பனை செய்துள்ளது.
கடந்த 24 வருடத்தில் ரஷ்யா ஒவ்வொரு ஆண்டும் தனது தங்க இருப்பை தொடர்ந்து அதிகரித்து மட்டுமே வந்த நிலையில், தற்போது முதல் முறையாக விற்பனை செய்ய துவங்கியுள்ளது. இதில் முக்கியமாக ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலக்கட்டத்தில் ரஷ்ய மத்திய வங்கி 27.9 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளது. இதற்கு என்ன காரணம்..?
ரஷ்ய மத்திய வங்கியும், ரஷ்ய அரசும் தங்கத்தை விற்பனை செய்ய முக்கியமான காரணம் நிதி பற்றாக்குறை தான். உக்ரைன் உடன் நடக்கும் போராட்டம் மூலம் ராணுவ செலவுகள் அதிகரித்துள்ளது, இந்த ஆண்டின் பெரும்பாலான காலக்கட்டத்தி கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்துள்ளது.
இதேபோல் ரஷ்யாவின் ஏற்றுமதி வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதால் ரஷ்யாவின் நிதி நிலை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் ரஷ்யாவின் பட்ஜெட்டின் நிதி பற்றாக்குறை அளவு 6 டிரில்லியன் ரூபிள் ஆக அதிகரித்தது.
இந்த நிதி பற்றாக்குறைய குறைக்க வேண்டும் என்பதற்காகவே தங்கத்தை பணமாக்கும் முயற்சியில் ரஷ்ய அரசு இறங்கியுள்ளது.
2002-2025 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ரஷ்யா சுமார் 1900 டன் தங்கத்தை வாங்கியுள்ளது, ஆனால் உக்ரைன் உடன் போர் துவங்கிய 2020ல் இருந்து வெறும் 55 டன் தங்கத்தை மட்டுமே வாங்கியுள்ளது, இதில் 43.5 டன் தங்கத்தை இந்த ஆண்டு விற்பனை செய்துள்ளது.
மறுமுனையில் ஈரான் போர் மற்றும் முதலீட்டு சந்தையில் நடந்த ஏஐ துறை மீதான முதலீட்டு மாற்றம் காரணமாக தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக விலை உயர துவங்கியுள்ளது.
More Articles
- Russia: ஒரேநாளில் 3 எண்ணெய் கிணறு மீது தாக்கிய உக்ரைன் ட்ரோன்.. உச்சக்கட்ட கோபத்தில் புடின்!
- அமெரிக்காவால் இந்தியாவுக்கு புது சிக்கல்.. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் 100% வரி??
- ரஷ்யாவுடன் ராசியாகும் டிரம்ப்.. இந்தியாவுக்கு வரி குறைப்பு.. அமெரிக்கா அடித்த அந்தர் பல்டி!
- பழிக்கு பழி வாங்கிய உக்ரைன்.. உச்சக்கட்ட கோபத்தில் புடின்.. ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஆலை மீது மெகா அட்டாக்..!
- புடின் கட்டவிழ்த்த கொடும் தாக்குதல்.. 500 டிரோன்.. சுக்குநூறான உக்ரைன் தலைநகர் Kyiv..!
- விடிய விடிய அடித்த ரஷ்யா.. கதறும் உக்ரைன்.. ஈரான் போர் முடிந்த அடுத்த கணமே இப்படியா?