டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 72 ரூபாயாக சரிந்தது!

அமெரிக்க டாலருக்கு இந்தியா ரூபாய் மதிப்பு முதன் முறையாக வரலாறு காணாத விதத்தில் வியாழக்கிழமை பிற்பகல் 72.08 டாலர் என சரிந்தது. ஒரே மாதத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 சதவீதம் வரை சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இன்று காலை ரூபாய் மதிப்பு 9 பைசா உயர்ந்து 71.62 ரூபாயாக இருந்த நிலையில் பிற்பகல் 12:45 மணியளவில் 33 பைசா சரிந்தது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே ரூபாய் மதிப்பு சரிவிற்கான காரணம் என்றும் மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நேற்றைய முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 71.75 ரூபாயாக இருந்தது.ரூபாய் மதிப்புச் சரிவு குறித்துக் குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி "இந்தியாவில் மொரிஷியஸ் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் கருப்புப் பணத்தினை வெள்ளியாக்கும் முதன்மையான வெளிநாட்டு முதலீட்டாளர்களாக உள்ளனர் என்று தான் எச்சரிப்பதாகவும், எனவே P-Notes முறையினை இந்தியாவில் இருந்து ஒளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

P-Notes என்பது வெளிநாட்டு முதலீடுகளை இந்தியாவில் பெறுவதற்கான ஒரு வழி என்பது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Indian Rupee Fall 72/$ For The First Time And Recorded Low