சிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்து சேவையை விரிவாக்கும் இன்போசிஸ்!

இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ், சிங்கப்பூரின் டீமாசேக் நிறுவனத்துடன் இணைந்து தெற்கு ஆசியாவில் தனது சேவையை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளையும். டெமாசேக்கின் 40 சதவீத பங்குகளையும் கொண்டு மென்பொருள் சேவையை மேம்படுத்த இருப்பதாக, அறிக்கை ஒன்றில் இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட இருக்கும் இந்தக் கூட்டு நிறுவனத்தில், 200 க்கும் மேற்பட்ட மென்பொருள் வல்லுநர்களும், ஒப்பந்த அடிப்படையான பணியாளர்களும் பணியமர்த்தப்படவுள்ளனர். காலப்போக்கில் இன்போசிஸ் ஊழியர் அந்த நிறுவனத்துக்கு இடமாற்றம் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்போசிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் ஸ்வேதா அரோரா, தெற்காசிய பிராந்தியத் தலைவராகவும், புதிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் செயல்படுவார் என்று இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Infosys announces joint venture with Singapore’s Temasek