ரூபாய் மதிப்பு சரிவால் ரூ. 6,800 கோடி மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டை திரும்பப்பெற்ற முதலீட்டாளர்கள்!

கடந்த சில வாரங்களாக ரூபாய் மதிப்பு மிகப் பெரிய அளவில் சரிந்து வரும் நிலையில் டெபட் மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள் 6,800 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டினை திரும்பப் பெற்றுள்ளனர்.

இதுவே 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெபட் மியூச்சுவல் ஃபண்டில் 9,810 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு ஆகஸ்ட் மாதம் ரூபாய் மதிப்பு மற்றும் பணவீக்கம் அதிகரித்ததே காரணம் என்று வல்லுநர்களும் கூறி வருகின்றனர்.

டெபட் மியூச்சுவல் ஃபண்டில் சென்ற மாதம் முதலீட்டாளர்களால் 6,803 கோடி ரூபாய் இழப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதுவே ஜூலை மாதம் 7,000 கோடியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் கடந்த நான்கு மாதங்களாகவே டெபட் ஃபண்டுகள் முதலீடு வெளியேறுவது அதிகரித்துள்ளது. 5 மாதத்தில் 52,700 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் வெளியேறியது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

அதே நேரம் பங்கு சந்தை 7,700 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டினை பெற்றுள்ளது. தற்போது சில்லறை முதலீட்டாளர்கள் 10 சதவீதம் மட்டுமே டெபட் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளனர். மீதத்தைப் பங்குச் சந்தையில் நேரடியாகச் செய்துள்ளனர்.

Have a great day!
Read more...

English Summary

Week Rupee Effect: Rs 6,800 Crore Withdrawn From Debt Mutual Funds