ரியல் எஸ்டேட்டுக்கான புதிய சட்டம்: பிளாட் விலைகள் உயரும் அபாயம்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியல் எஸ்டேட்டுக்கான புதிய சட்டம்: பிளாட் விலைகள் உயரும் அபாயம்!!!
கடந்த வியாழன்று ரியல் எஸ்டேட்டுக்கான புதிய மசோதாவிற்கு கேபினட் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. ஆனால் புதிய மசாதாவினால், வீடுகள் மற்றும் கட்டுமானப் பொருள்களின் விலை உயரும் என்று சொல்லப்படுகிறது.

இந்த மசோதாவின் சாராம்சம் என்னவென்றால், ரியல் எஸ்டேட் உரிமையாளர், தன்னிடம் வீடு வாங்க வரும் வாடிக்கையாளருக்கு, அவருடைய 70 சதவீத பணமும், அந்த வீடு கட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஒரு ஒப்பந்தம் எழுதித் தரவேண்டும்.

அவ்வாறு பயன்படுத்தும் போது, கட்டுமானச் செலவுகளைக் குறைப்பதிலும், ரியல் எஸ்டேட் உரிமையாளரின் கடன்களைக் குறைப்பதிலும் அவருக்கு மிகப் பெரிய சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது. இந்த பிரச்சினைகளை சமாளிக்க அவருக்கு அதிக பணம் தேவைப்படும். அந்த அதிகப் பணத்தை அவர் வாடிக்கையாளரின் தலையில் சுமத்திவிடுவார். அதனால் வாடிக்கையாளர்கள் அதிகமாக பணம் செலுத்த நேரிடும்.

மேலும் கார்பெட் ஏரியாக்களில் வீடுகளைக் கட்டும் போது ஒரு சதுர அடிக்கும் அதிகமாக செலவாகும். அதனால் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் அந்த பணத்தை வாங்குவார்கள்.

அதுபோல் வீட்டுமனை வாங்குவதற்கான புதிய மசோதாவும், வீட்டுமனைகளின் விலைகளை அதிகரிக்கச் செய்துவிடும் என்று கருதப்படுகிறது. வீட்டுமனைகளின் விலை அதிகரித்தால், அந்த அதிகரிப்பை ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களின் தலையில்தான் சுமத்துவார்கள்.

ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபடும் ஒரு பெரிய புள்ளி கூறும் போது, 50 சதவீதம் அளவிற்காகவாவது கட்டுமான செலவுகள் அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

இன்னுமொரு ரியல் எஸ்டேட் உரிமையாளர் கூறும் போது, வாடிக்கையாளரிடம் அவர்கள் செலுத்தும் பணத்திற்கு மிகவும் வெளிப்படையாக இருக்கும் போது, அது மேலும் கட்டுமானச் செலவுகளை அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் ரியல் எஸ்டேட் துறைக்குக் கடன் வழங்குவதில் ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி மிகவும் கடுமையாக இருக்கிறது. அதோடு இப்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையப் போவதில்லை.

அதனால் வீடுகளின் விலை மிக விரைவில் அதிகரிக்கப் போகிறது என்பது உறுதி!!.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Real Estate Bill likely to make homes costlier

The mandate for a developer to keep 70 per cent of the buyers' funds in an escrow to ensure that money is used for that project itself is likely to put pressure on financing costs and debt reduction for builders. This is likely to be passed on ultimately to the consumer, as the builder is likely to protect his margins.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X