இந்திய தயாரிப்புகளில் எத்திலீன் ஆக்சைடு என்ற கேன்சர் பாதிப்பு உண்டாக்கும் கெமிக்கல் இருப்பது கண்டுப்படிக்கப்பட்டதன் வாயிலாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்புகள் தடைச் செய்யப்பட்டது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளையில் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் நடத்திய சோதனைகளில், இந்திய உணவுப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் இந்த 'எத்திலீன் ஆக்சைடு' (Ethylene Oxide) கெமிக்கல் கலப்படம் இருப்பது தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது என டெக்கான் ஹெரால்டு தெரிவித்துள்ளது.

ஆனால் இதுவரை, இந்த ரசாயனத்தின் பயன்பாட்டைத் தடைச் செய்ய எந்த நடவடிக்கையும் இந்திய அதிகாரிகள் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது எனவும் கூறப்பட்டு உள்ளது.
செப்டம்பர் 2020 முதல் ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டத்தில், ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் நடத்திய சோதனைகளில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட 527 உணவுப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டது.
இதில் 313 மாதிரிகள் முந்திரி, எள் போன்ற பொருட்களிலும், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் (60), உணவுக் கட்டுப்பாடு உணவுகள் (48) மற்றும் பிற உணவுப் பொருட்கள் (34) ஆகியவற்றில் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.
எத்திலீன் ஆக்சைடு உள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய 87 ஷிப்பிங் கன்சையின்மென்ட் துறைமுக எல்லையிலே தடுத்து நிறுத்தப்பட்டன. மீதமுள்ள பொருட்கள் சந்தைக்குச் சென்ற பின்பு ஐரோப்பிய அதிகாரிகளின் நடவடிக்கையில் இருந்து நீக்கப்பட்டன என்றும் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
எத்திலீன் ஆக்சைடு என்பது நிறமற்ற ஒரு வாயு, இது பூச்சிக்கொல்லி மற்றும் கிருமி நீக்கம் செய்யும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த எத்திலீன் ஆக்சைடு உண்மையில் மருத்துவக் கருவிகளில் இருக்கும் கிருமியை நீக்கப் பயன்படுத்தும் ஒரு வகைக் கெமிக்கல் ஆகும்.
எத்திலீன் ஆக்சைட் கொண்ட உணவு பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட்டாலோ, நுகர்ந்தாலோ லிம்போமா மற்றும் லுகேமியா போன்ற புற்றுநோய்கள் வருவதற்கான அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில், உணவுப் பாதுகாப்பைக் கண்காணிக்கும் "ரேபிட் அலர்ட் சிஸ்டம் ஃபார் ஃபுட் அண்ட் ஃபீட்" (Rapid Alert System for Food and Feed - RASFF) என்ற தளத்தில் கிடைத்த தகவல்களின்படி, 525 உணவுப் பொருட்கள் மற்றும் 2 தீவனப்பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் கண்டறியப்பட்டது.
இதில், 332 பொருட்களின் தாயகம் (sole origin) இந்தியா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு கண்டறியப்பட்ட பிற நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இந்திய உணவுப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடைக்குக் காரணமாக இருந்த இதே எத்திலீன் ஆக்சைடு தான், ஐரோப்பிய ஒன்றியத்தில் இது தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு எவ்விதமான நடவடிக்கையும் இந்திய அரசு சார்பில் எடுக்காதது கவலைக்குறியது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications