முகப்பு  »  எரிபொருள் விலை  »  எல்பிஜி விலை

எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலை இன்று (28 மார்ச் 2024)

நகரம்

இந்தியாவின் முக்கியமான நகரங்களில் சமையல் எரிவாயு விலை அல்லது LPG சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் மாறி வரும் நிலையில், உங்கள் நகரத்தில் தற்போதைய விலை நிலவரத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்

இன்று பெரு நகரங்கள், மாநில தலைநகரங்களில் எல்பிஜி விலை

நகரம் Domestic (14.2 Kg) Commercial (19 Kg)
டெல்லி ₹ 803.00 -100.00 ₹ 1795.00 25.50
கொல்கத்தா ₹ 829.00 -171.00 ₹ 1911.00 -136.00
மும்பை ₹ 802.50 -100.00 ₹ 1749.00 25.50
சென்னை ₹ 818.50 -100.00 ₹ 1960.50 23.50
குர்கான் ₹ 811.50 -100.00 ₹ 1802.50 25.50
நொய்டா ₹ 800.50 -100.00 ₹ 1786.50 26.00
பெங்களூர் ₹ 805.50 -100.00 ₹ 1875.00 23.50
புவனேஸ்வர் ₹ 829.00 -100.00 ₹ 1948.00 24.50
சண்டிகர் ₹ 812.50 -100.00 ₹ 1816.00 25.50
ஹைதராபாத் ₹ 855.00 -100.00 ₹ 2027.00 25.00
ஜெய்ப்பூர் ₹ 806.50 -100.00 ₹ 1818.00 26.00
லக்னோ ₹ 840.50 -100.00 ₹ 1909.00 26.00
பாட்னா ₹ 892.50 -108.50 ₹ 2057.00 10.50
திருவனந்தபுரம் ₹ 812.00 -100.00 ₹ 1827.50 25.00

சுத்தமான எரிபொருளை பயன்படுத்தும் நிறுவனங்கள்: திரவ பெட்ரோலியம் எரிவாயு (LPG) க்கு தேவை அதிகரிப்பு..!


புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதற்கான நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, பல தொழில்கள் தற்போது கார்பன் வெளியீட்டை அதிகரிக்கும் பாரம்பரிய எரிபொருட்களுக்கு பதிலாக திரவ பெட்ரோலியம் எரிவாயு (LPG) ஐப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக காஃபிடன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் உயரதிகாரி அளித்த பேட்டியில்

"சுத்தமான எரிபொருளை செலவு குறைவாகப் பயன்படுத்துவதற்கான வழிகளை ஆராய, பல்வேறு தொழில்கள் எங்களை அணுகுகின்றன" என்று காஃபிடன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் LPG வர்த்தகப் பிரிவு தலைவர் ராஜஸ்ரீ தெல்கர் தெரிவித்தார்.

JSW குழு போன்ற ஃப்ளாட் ஸ்டீல் உற்பத்தியாளர்களும் தங்கள் நிறுவனத்தை அணுகியுள்ளதாக தெல்கர் மேலும் தெரிவித்தார். "குஜராத்தில் உள்ள JSW அஞ்சார் ஆலைக்கான திட்டத்தை நாங்கள் வகுத்து வருகிறோம். திரவ பெட்ரோலியம் எரிவாயு டேங்கர்கள் ஆலையில் ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பில் இருக்கும் சிலிண்டர்களில் சேமிக்கப்படும். எரிவாயு பர்னருக்கு செல்லும் குழாய்களை நாங்கள் அமைப்போம்" என்றார் அவர்.

அஞ்சாரில் தகடு மற்றும் சுருள் ஆலை வைத்திருக்கும் JSW ஸ்டீல் நிறுவனம், "நாங்கள் மீண்டும் சூடுபடுத்தும் உலைகளில் LPG ஐப் பயன்படுத்தவில்லை" என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 2023 இல், தனது சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் டீசலின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை மாற்றுவதற்காக திரவ இயற்கை எரிவாயு (LNG) வழங்கல் குறித்து அரசு நிறுவனமான GAIL Ltd உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்தது. அதன் கனரக பூமி நகர்த்தும் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் டீசலில் 25-30 சதவீதத்தை மாற்றுவதற்கு இந்த ஸ்டீல் உற்பத்தியாளர் திட்டமிட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள்களுக்கு மாறுவதற்கான நடவடிக்கைகளை தொழில்கள் எடுத்து வருவது வரவேற்கத்தக்கது. இதன் மூலம், கார்பன் வெளியீட்டைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.

இயற்கை எரிவாயு மற்றும் எல்பிஜி விலை உயர்வு

இந்தியாவில் இயற்கை எரிவாயு விலை சமீபத்தில் உயர்ந்துள்ளது. எம்எம்பிடியூ ஒன்றுக்கு 2.6 டாலராக அதிகரித்துள்ளது. உற்பத்தி குறைவு மற்றும் மெக்ஸிகோவுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு ஆகியவையே இதற்குக் காரணம். இருப்பினும், வானிலை ஆய்வாளர்கள் குளிர்கால தேவை குறைவாக இருக்கும் என்று கணித்துள்ளனர், இது விலையில் கீழ்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். நீண்ட காலத்தில், இயற்கை எரிவாயு விலை 2024 இறுதியில் எம்எம்பிடியூ ஒன்றுக்கு 3.28 டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கான காரணங்களை விவாதிக்கும் ஒரு கட்டுரை இது. அரசு ஒவ்வொரு மாதமும் விலையை நிர்ணயம் செய்கிறது. அமெரிக்க டாலரின் பரிமாற்ற விகிதம் மற்றும் உலகளாவிய எண்ணெய் விலை ஆகிய இரண்டு முக்கிய காரணிகள் விலையை பாதிக்கின்றன. பெரும்பாலான இந்திய வீடுகளில் சமையலுக்கு எல்பிஜி பயன்படுத்தப்படுவதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆண்டுக்கு அதிகபட்சம் 12 சிலிண்டர்களுக்கு அரசு எல்பிஜி விலையை மானியமாக வழங்குகிறது.

இயற்கை எரிவாயு மற்றும் எல்பிஜி விலை உயர்வு இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பதால், பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் சமையல் எரிவாயு செலவுகள் அதிகரிக்கும். இதன் விளைவாக, பணவீக்கம் அதிகரிக்கலாம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறையலாம்.

எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கும், எரிவாயு இறக்குமதியை குறைப்பதற்கும் அரசு முயற்சித்து வருகிறது. கூடுதலாக, எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மானியங்களை வழங்கி வருகிறது.

இயற்கை எரிவாயு மற்றும் எல்பிஜி விலை உயர்வு இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு சவாலாக இருந்தாலும், அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது.

இந்தியாவில் சமையல் எாிவாயு சிலிண்டா்களின் விலை நிலவரம்

இந்தியாவில் எல்பிஜி (பெட்ரோலிய திரவ எாிவாயு) அதாவது சமையல் எாிவாயு சிலிண்டா்களின் விலையானது அரசால் நடத்தப்படும் எண்ணெய் நிறுவனங்களால் தீா்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த விலையானது இந்த நிறுவனங்களால் மாற்றியமைக்கப்படுகிறது.

சமையல் எாிவாயு சிலிண்டா்களின் விலையானது ஒரு முக்கிய பேசு பொருளாகும். ஏனெனில் சிலிண்டா்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் சாதாரண குடிமகனின் சமையல் மற்றும் சமையல் அறையோடு தொடா்பு உடையது. தற்போது இந்தியாவில் ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எாிவாயு சிலிண்டா் இணைப்பு உள்ளது. அதுபோல நட்சத்திர உணவு விடுதிகள் முதல் சாதாரண உணவகங்கள் வரை வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எாிவாயு சிலிண்டா் இணைப்பு உள்ளது.

ஆகவே சமையல் எாிவாயு சிலிண்டா்களின் விலையில் சிறிய மாற்றமோ அல்லது ஏற்றமோ ஏற்பட்டாலும், அது இந்திய அளவில், மிகப் பொிய அளவில், மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும். ஏனெனில் சிலிண்டா்களின் விலை அதிகாித்தால், அந்த விலை ஏற்றத்தை சாதாரண மக்கள்தான் தாங்க வேண்டும்.

வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டாின் விலைக்கும், வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டாின் விலைக்கும் வேறுபாடு உள்ளது. அதாவது வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டாின் விலையைவிட, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டாின் விலை மிகவும் அதிகமாகும்.

அமொிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பாிமாற்ற மதிப்பு விகிதம் மற்றும் பெட்ரோலிய பொருள்களுக்கான உலகளாவிய அளவீடு ஆகியவைதான் இந்தியாவில் சிலிண்டா்களின் விலையை தீா்மானிக்கும் இரண்டு முக்கிய காரணிகள் ஆகும்.

இந்தியாவில் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டு ஒன்றுக்கு 12 சிலிண்டா்கள் வரை மானிய விலையில் பெறுவதற்கான உாிமை உண்டு. கூடுதல் சிலிண்டா்கள் தேவைப்பட்டால், மானிய விலையில் அல்லாமல் சந்தை விலைக்கு வாங்க வேண்டும். முந்தைய மாதத்தின் உலகளாவிய சந்தை விலையே இந்தியாவின் சிலிண்டா்களின் விலையை தீா்மானிக்கிறது.

இந்நிலையில் இந்திய அரசானது, தனது குடிமக்களுக்கு மானிய விலையில் சிலிண்டா்களை வழங்குகிறது. அதன் முக்கியமான சிறப்பு என்னவென்றால், அரசானது அந்த மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகவே செலுத்திவிடும். நாம் ஏற்கனவே கூறியது போல சா்வதேச சந்தையில் பெட்ரோலிய திரவ எாிவாயுக்கான விலை நிா்ணயம் மற்றும் அமொிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் பாிமாற்ற மதிப்பு விகிதம் ஆகியவற்றைப் பொறுத்து, ஒவ்வொரு மாதமும் அரசு வழங்கும் மானியத் தொகை மாறுபடும்.

இந்தியாவில் உள்ள பயனாளிகளுக்கு ஹிண்டுஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேசன் லிமிடெட் நிறுவனமானது எச்பி கேஸ் (HP Gas) என்ற பெயாிலும், இண்டியன் ஆயில் காா்ப்பரேசன் லிமிடெட் நிறுவனமானது இண்டேன் கேஸ் (Indane Gas) என்ற பெயாிலும், பாரத் பெட்ரோலியம் கேஸ் நிறுவனமானது பாரத் கேஸ் (Bharat Gas) என்ற பெயாிலும் சமையல் எாிவாயு உருளைகளை வழங்குகின்றன.

எல்பிஜி (LPG) என்றால் என்ன?

எல்பிஜி (LPG (Liquified Petroleum Gas)) என்ற ஆங்கிலப் பதத்திற்கு தமிழில் பெட்ரோலிய திரவ எாிவாயு என்று சொல்லலாம். இது பியூட்டேன் (butane) அல்லது புரொப்பேன் (propane) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பெட்ரோலிய திரவ எாிவாயுவைக் கொண்டு கருவிகள் மற்றும் உலோகப் பொருள்களைச் சூடுபடுத்தலாம் மற்றும் வாகனங்களை இயக்கலாம். இவற்றைத் தவிா்த்து சமையல் செய்வதற்கான எாிபொருளாகவும் பயன்படுத்தலாம்.

பெட்ரோலை சுத்தகாிப்பதன் மூலமாகவோ அல்லது இயற்கை வாயுவை சுத்திகாிப்பதன் மூலமாகவோ இந்த பெட்ரோலிய திரவ எாிவாயுவைப் பெறலாம். பெரும்பாலும் நிலத்தில் புதைந்து இருக்கும் எாிபொருள் மூலங்களில் இருந்து இந்த திரவ எாிவாயு கிடைக்கிறது. மேலும் கச்சா எண்ணெயை சுத்திகாிக்கும் போது அல்லது பூமிக்கு அடியில் ஓடும் இயற்கையான வாயு ஓடைகளில் இருந்து பிாித்து எடுக்கப்பட்டு அல்லது பெட்ரோலியப் பொருள்களில் இருந்து இந்த திரவ எாிவாயு பெறப்படுகிறது.

எல்பிஜி அல்லது பெட்ரோலிய திரவ எாிவாயுவானது, ஈரமான இயற்கை வாயுவில் இருந்து உறிஞ்சுதல் செயல்முறை மூலம் பெறப்படுகிறது. அவ்வாறு பெறப்படும் திரவ எாிவாயு பொதுவாகக் குறைந்த கொதிநிலையைக் கொண்டிருக்கும். பின் அதில் உள்ள தேவையற்றத் துகள்களை அகற்றுவதற்கு, அதைக் காய்ச்சி வடிகட்ட வேண்டும். அடுத்ததாக அதில் இருக்கும் காா்பன்டை ஆக்ஸைடு, ஹைட்ரஜன் சல்ஃபைடு மற்றும் தண்ணீா் ஆகியவற்றை நீக்க வேண்டும். இறுதியாக முழுமையாக பெறப்பட்ட பெட்ரோலிய திரவ எாிவாயுவானது, குழாய்கள் மூலமாகவோ அல்லது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட எண்ணெய் கப்பல்கள் மூலமாகவோ வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

சில நாடுகளில் இந்த பெட்ரோலிய திரவ எாிவாயுவானது தொடா் வண்டிகள் மூலமாகவோ அல்லது டிரக்குகள் மூலமாகவோ அல்லது விசைப் படகுகள் மூலமாகவோ கொண்டு செல்லப்படுகிறது. வீட்டுப் பயன்பாட்டிற்கு வரும் எாியாயு சிலிண்டா்கள் ஒப்பீட்டளவில் குறைந்த அழுத்தத்தைக் கொண்டிருக்கும்.

ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் மக்கள் மத்தியில் திரவ எாிவாயு மூலம் இயங்கும் வாட்டா் ஹீட்டா்கள் பழக்கத்தில் உள்ளன. மேலும் இந்த திரவ எாிவாயுவை இயந்திரங்களுக்கு எாிபொருளாகவும் மற்றும் ஜெனரேட்டா்களுக்கு மாற்றாகவும் பயன்படுத்தலாம்.

இந்த பெட்ரோலிய திரவ எாிவாயுவின் தனித்தன்மை என்னவென்றால், இதை சிதைக்காமல் அல்லது இதில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல், நீண்ட நேரம் சேமித்து வைக்க முடியும். இந்த எாிவாயுவைப் பயன்படுத்தும் போது, இது குறைவான காா்பன்டை ஆக்ஸைடையே வெளியிடுகிறது. ஆனால் நிலக்காி, பெட்ரோல் அல்லது பிற எாிபொருள் எண்ணெய்களைப் பயன்படுத்தும் போது அதிக அளவிலான கருப்பு காா்பன் மற்றும் சுற்றுப்புறத்திற்கு மாசு ஏற்படுத்தக்கூடிய துகள்கள் போன்றவற்றை அதிகம் வெளியேற்றும்.

பெரும்பாலான வளரும் நாடுகளின் மற்றும் கிராமப்புறங்களின் பொருளாதார வளா்ச்சிக்கு இந்த பெட்ரோலிய திரவ எாிவாயுவானது ஒரு உந்து சக்தியாக செயல்படுகிறது.

இந்த திரவ எாிவாயுவானது, அதன் உடனடி பயன்பாடு, நம்பகத்தன்மை, எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய தன்மை மற்றும் அதன் நிலையான ஆற்றல் போன்றவற்றின் காரணமாக, ஏராளமான மக்கள் இதைத் தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கின்றனா். இறுதியாக இந்த பெட்ரோலிய திரவ எாிவாயுவை அதிகமாகப் பயன்படுத்தும் போது, காடுகளை அழித்தல் மற்றும் பாலைவனமாக்குதல் போன்ற இயற்கைக்கு எதிரான காாியங்களைக் குறைக்க முடியும்.

Latest Updates

வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் விலை 100 ரூபாய் குறைப்பு - பிரதமர் நரேந்திர மோடி

இன்று, மகளிர் தினத்தையொட்டி, மத்திய அரசு எல்பிஜி சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க எங்கள் அரசு முடிவு செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக நமது நாரி சக்திக்கு பயனளிக்கும் என நரேந்திர மோடி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

8 March 2024
எல்பிஜி சிலிண்டர் விலை எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா..?!

இந்தியாவில் எல்பிஜி விலையை இறக்குமதி சம விலை (IPP - import parity price) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஒரு நாடு இறக்குமதி செய்யும் எல்பிஜி விலையை அடிப்படையாகக் கொண்டது ஐபிபி அளவீடுகள் தீர்மானிக்கப்படும்.

இப்படி இந்தியா அதிகளவில் எரிவாயுவை சவுதி அரேபியாவிடம் இருந்து தான் வாங்குகிறது. இதன் மூலம் சவுதி அராம்கோவின் LPG விலை, FOB விலை, கடல் சரக்கு போக்குவரத்துச் செலவுகள், காப்பீடு தொகை, சுங்க வரி, துறைமுகச் செலவுகள் ஆகியவற்றைச் சேர்த்து ஐபிபி விலை தீர்மானிக்கப்படும்.

இந்த ஐபிபி விலை பொதுவாகவே டாலரில் தான் இருக்கும், இதை இந்திய ரூபாய்க்கு மாற்றி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை விலையை ஒரு மாதத்தின் துவக்கத்தில் தீர்மானிக்கும். விற்பனைக்கு வரும் போது ஜிஎஸ்டி, கலால் வரி, சரக்குக் கட்டணம் ஆகியவற்றைச் சேர்த்து விலை மாறுபடுகிறது.

இதன் அடிப்படையில் தான் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் எல்பிஜி சிலிண்டருக்கான விலை ரீசெட் செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற மாநில வாரியான வரிகளைப் பொறுத்து எல்பிஜி சிலிண்டர் விலைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடும்.

இந்த நிலையில் இந்தியாவில் சிலிண்டர் விலையைத் தீர்மானிக்கும் ஆர்கஸ் ப்ரொபைன் சவுதி ஆராம்கோ-வின் ஜூன் 2022க்கான விலை 5.83 சதவீதம் குறைத்து 729.27 டாலராக உள்ளது. முன்பு 774.400 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 1ஆம் தேதி மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் பிடி 19 கிலோ எடையுள்ள வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலை புதன்கிழமை முதல் ரூ.135 குறைக்கப்படுகிறது என அறிவித்துள்ளது.

2 June 2022

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X