பிப்ரவரி முதல் நாளான இன்று மத்திய பட்ஜெட் அறிவிப்புகளுக்காக ஒட்டு மொத்த இந்தியாவே ஆர்வத்துடன் காத்திருக்கிறது. இந்த நிலையில் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் சிலிண்டர் விலை உயர்வு அறிவிப்பு வந்திருக்கிறது.
சென்னையில் இன்றைய தினம் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் பாரத் , இந்துஸ்தான், இந்தியன் ஆயில் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தரப்பில் இரண்டு வகையான சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. ஒன்று வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர், மற்றொன்று வணிக பயன்பாட்டுக்கு அதாவது கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள்.

சர்வதேச சந்தையில் ஏற்படும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றன. சர்வதேச சூழல் படி விலை ஏறலாம், இறங்கலாம் அல்லது அப்படியே நீடிக்கலாம்.
இதன்படி பிப்ரவரி ஒன்றாம் தேதியான இன்று சிலிண்டர் விலை மாற்றப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வணிகப் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 1849.50 ரூபாயாக இருந்தது. அதுவே இன்றைய தினம் 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் இந்த மாதத்தில் இருந்து வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 1899.50 ரூபாய்க்கு விற்கப்படும். கடந்த ஜனவரி மாதம் தான் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 110 ரூபாய் உயர்த்தப்பட்டது இந்த மாதம் 50 ரூபாய் என இந்த இரண்டு மாதங்களில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 160 ரூபாய் வரை உயர்ந்து இருக்கிறது. டெல்லியில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 1740.50 ரூபாய்க்கும் , மும்பையில் 1692 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு ஹோட்டல், டீக்கடை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக அவற்றின் விலையும் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதே வேளையில் பொதுமக்களுக்கு நற்செய்தியாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 868.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் நம்முடைய குடும்ப பட்ஜெட்டில் எந்த ஒரு பாதிப்பும் இந்த முறை ஏற்படவில்லை.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications