| நகரம் | விலை | விலை மாற்றம் |
|---|---|---|
| புது டெல்லி | ₹87.67 | 0.00 |
| கொல்கத்தா | ₹92.02 | 0.00 |
| மும்பை | ₹90.03 | 0.00 |
| சென்னை | ₹92.81 | +0.20 |
| குர்கான் | ₹88.10 | +0.12 |
| நொய்டா | ₹87.98 | +0.09 |
| பெங்களூர் | ₹90.99 | -0.07 |
| புவனேஸ்வர் | ₹92.74 | -0.02 |
| சண்டிகர் | ₹82.45 | 0.00 |
| ஹைதராபாத் | ₹95.70 | 0.00 |
| ஜெய்ப்பூர் | ₹90.65 | -0.17 |
| லக்னோ | ₹87.81 | 0.00 |
| பாட்னா | ₹91.49 | -0.18 |
| திருவனந்தபுரம் | ₹96.48 | +0.30 |
| மாநிலம் | விலை | விலை மாற்றம் |
|---|---|---|
| அந்தமான் & நிக்கோபார் | ₹78.05 | 0.00 |
| ஆந்திரப் பிரதேசம் | ₹97.47 | 0.00 |
| அருணாச்சல பிரதேசம் | ₹80.21 | 0.00 |
| அசாம் | ₹89.56 | 0.00 |
| பீகார் | ₹91.49 | 0.00 |
| சண்டிகர் | ₹82.45 | 0.00 |
| சத்தீஸ்கர் | ₹93.36 | 0.00 |
| தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ | ₹87.94 | 0.00 |
| டெல்லி | ₹87.67 | 0.00 |
| கோவா | ₹88.46 | 0.00 |
| குஜராத் | ₹90.47 | 0.00 |
| ஹரியானா | ₹88.41 | 0.00 |
| ஹிமாச்சல பிரதேசம் | ₹87.13 | 0.00 |
| ஜம்மு & காஷ்மீர் | ₹83.45 | 0.00 |
| ஜார்கண்ட் | ₹92.62 | 0.00 |
| கர்நாடகா | ₹90.99 | 0.00 |
| கேரளா | ₹96.48 | 0.00 |
| லடாக் | ₹88.86 | 0.00 |
| லட்சத்தீவு | ₹95.71 | 0.00 |
| மத்திய பிரதேசம் | ₹91.99 | 0.00 |
| மகாராஷ்டிரா | ₹90.03 | 0.00 |
| மணிப்பூர் | ₹85.26 | 0.00 |
| மேகாலயா | ₹87.55 | 0.00 |
| மிசோரம் | ₹88.00 | 0.00 |
| நாகாலாந்து | ₹88.65 | 0.00 |
| ஒடிசா | ₹92.74 | 0.00 |
| பாண்டிச்சேரி | ₹86.47 | 0.00 |
| பஞ்சாப் | ₹88.12 | 0.00 |
| ராஜஸ்தான் | ₹90.65 | 0.00 |
| சிக்கிம் | ₹90.45 | 0.00 |
| தமிழ்நாடு | ₹92.81 | 0.00 |
| தெலுங்கானா | ₹95.70 | 0.00 |
| திரிபுரா | ₹86.59 | 0.00 |
| உத்தரப்பிரதேசம் | ₹87.81 | 0.00 |
| உத்தரகாண்ட் | ₹88.24 | 0.00 |
| மேற்கு வங்காளம் | ₹92.02 | 0.00 |
இந்தியாவில் டீசல் விலையை தினமும் மாற்றும் முறையை ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் அறிமுகம் செய்துள்ளன. இந்த விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் டீசலின் விலை வேறுபட்டுள்ளன. இந்தியாவில் டீசல் விலை தினமும் மாற்றப்படுகின்றன.
இந்தியாவின் டீசல் விலையை பாதிக்கும் முக்கியமான காரணங்கள்:
கச்சா எண்ணெயின் விலை:
உலகம் முழுவதும் டீசல் விலையை நிர்ணயிப்பதில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் தேவை மற்றும் விநியோகம் மற்றும் கச்சா எண்ணெயின் பொருளாதார நிலைகளின் அடிப்படையில் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகின்றன. உலக அளவில் கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடுகளில் காணப்படும் அசாதாரண அரசியல் சூழ்நிலை, கச்சா எண்ணெய் உற்பத்தியில் மந்தநிலை, உயர்ந்துவரும் சர்வதேச தேவை போன்ற காரணங்கள் டீசல் விலையை வெகுவாக பாதிக்கின்றன.
டீசலின் டிமாண்ட் மற்றும் சப்ளை:
நாட்டில் உள்ள பெரும்பாலான வாகனங்கள் பெட்ரோலை சார்ந்து இருக்கின்றன. சுத்திகரிப்பு காரணங்கள் அல்லது இறக்குமதியில் மந்தநிலையால் பெட்ரோல் சப்ளை குறைந்தால், டீசல் கையிருப்பு குறையும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு டீசல் சப்ளை சரியாக நடக்காவிட்டால், அது டீசல் விலை உயர்ந்திருக்க வழிவகுத்துவிடும். வெளிநாடுகளில் இருந்து டீசல் இறக்குமதி செய்யப்படுவதால், அது இந்தியாவில் டீசல் விலையை வெகுவாக பாதிக்கும்.
வரி விதிப்புகள்:
உள்ளூர் அரசு எரிபொருள் மீது விதிக்கும் விதிக்கும் வரிகள் டீசல் விலையை பாதிக்கும். அவ்வப்போது, எரிபொருட்கள் மீதான வரியை மத்திய அரசு உயர்த்தும்போது, இழப்பை ஈடுகட்டுவதற்கும், எண்ணெய் வணிகத்தில் குறைந்த அளவிலான லாபத்தை பராமரிக்கவும் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் டீசல் மீதான விலையௌ உயர்த்துகின்றன.
ரூபாய் மதிப்பு:
இந்தியாவில் டீசல் விலை உயர்வுக்கு முக்கியமான காரணங்களில் டாலருக்கு நிகரான ரூபாயை மாற்றுவதற்கான பரிமாற்ற விகிதமும் ஒன்றாகும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு ஈடான விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் டாலரில் செலுத்துகின்றன. ஆனால், அவற்றின் மீதான செலவினங்கள் ரூபாயில் இருக்கின்றன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கும்போது, கச்சா எண்ணெய் விலை குறைந்து, அது எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை உயர்த்தும். அதேபோல, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்திருக்கும்போது, கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து, அது எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை குறைத்துவிடும்.
சரக்கு போக்குவரத்து:
டீசல் விலையை நிர்ணயிப்பதில் சரக்கு போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் சேமிப்புக்கிடங்கு அமைந்திருக்கும் பகுதியில் இருந்து பக்கத்தில் இருக்கும் விநியோக சேமிப்புக்கிடங்குக்கு எரிபொருளை கொண்டு செல்லும் செலவை காட்டிலும், தொலைதூரப்பகுதி அல்லது மிகவும் தொலைவான பகுதிகளுக்கு டீசல் போன்ற எரிபொருளை கொண்டு செல்வதற்கு கூடுதல் செலவாகும். இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் டீசல் மீதான விலை மாறுபடுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். நகரங்களுக்கு இடையே காணப்படும் தொலைவை பொருத்து டீசல் விலையும் மாறுபடும்.
டீசலை பற்றி
எரிபொருளின் ஒருவகையான திகழும் டீசல், பஸ்கள், ரயில்கள், விசைப்படகுகள் உள்ளிட்ட வாகனங்களை இயக்க பயன்படுகின்றன.
விவசாயம் மற்றும் கட்டுமானப்பணிகளில் பயன்படுத்தப்படும் மெஷின்களிலும் டீசல் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, டீசல் எரிபொருள், ஹைட்ரோகார்பனின் கலவையாகும். அதன் பாய்லிங் பாயின்டின் ரேஞ்சு 150 முதல் 380 டிகிரி செல்சியசாக இருக்கும்.
பெட்ரோலியம் கச்சா எண்ணெயில் மூன்று வகையான ஹைட்ரோகார்பன்கள் இருக்கும்.
நாப்தெனிக்(சைக்ளோபாராஃபினிக்)-Naphthenic (cycloparaffinic)
பாராஃபினிக்-Paraffinic
ஆரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்ஸ்-Aromatic Hydrocarbons
ஓலெஃபின்கள் அல்லது நிறைவுறா ஹைட்ரோகார்பன்கள் கச்சாப்பொருளாக அரிதாகவே காணப்படுகின்றன. நவீன வேதியியலில், பாராஃபினிக்(Paraffinic) மற்றும் நாப்தெனிக்(Naphthenic) என்ற வார்த்தைகள், ஹைட்ரோகார்பன் குழுக்களின் அடிப்படையில் முறையே அல்கேன்ஸ்(alkanes) மற்றும் சைக்ளோ ஆல்கேன்ஸ்(cycloalkanes) என்று அழைக்கப்படுகின்றன.
கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் பணி பிசுபிசுப்பான திரவத்தை 400 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சூடு செய்வதில் இருந்து தொடங்குகிறது. இந்த செயல்முறையில் திரவம், நீராவி நிலைக்கு மாறும். அதன்பிறகு அந்த நீராவி பகுதியளவு வடிகட்டும் கோபுரத்திற்கு செல்லும். இந்த நீராவி அதிக உயரத்திற்கு சென்றவுடன் அது குளிர்ச்சியடைய தொடங்குகிறது. நீராவி ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை புள்ளியை அடையும். அப்போது, அதில் உள்ள ஹைட்ரோகார்பன் சங்கிலிகள் மீண்டும் திரவ நிலைக்கு திரும்பும். வெவ்வேறு நிலைகளில் உள்ள கோபுரத்தில், பல்வேறு அடுக்குகளில் உள்ள வடிகட்டி தகடுகள் திரவங்களை ஈர்த்துக்கொள்ளும்.
மிக நீளமான ஹைட்ரோகார்பன் சங்கிலி, 400 டிகிரி செல்சியஸுக்கும் மேற்பட்ட கொதிநிலையைக் கொண்டிருக்கும். அந்த ஹைட்ரோகார்பன் சங்கிலி வடிகட்டி கோபுரத்திற்குள் நுழைந்தவுடன், அது மீண்டும் திரவமாக மாறத் தொடங்கும். இது பிட்டுமென்(bitumen) திரவமாக உருவாகி, வடிகட்டி கோபுரத்தின் அடிப்பகுதியில் இருந்து வெளியேறுகிறது. நீராவி மேலும் உயரத்தை அடையும்போது, குறுகிய ஹைட்ரோகார்பன் சங்கிலிகள் திரவமாகத் தொடங்குகின்றன. 370 டிகிரி செல்சியஸுக்கும் கீழே நீராவி குளிர்ச்சியடையும் போது எரிபொருள் எண்ணெய் உருவாகிறது. நீராவி மேலும் குளிர்ச்சியடையும் போது, கோபுரத்தின் மேல் பகுதியில் வடிகட்டிய பல்வேறு திரவங்களாக வெளிப்படும் வரை இந்த செயல்முறை தொடரும்.
வடிகட்டி கோபுரத்தில் உள்ள நீராவி, 200 முதல் 350 டிகிரி செல்சியஸுக்குள் இருக்கும்போது, டீசல் எரிபொருள் வெளிவரத் தொடங்குகிறது. அந்த நீராவி, வடிகட்டுதல் தகடுகளில் சேகரிக்கப்படும்போது, அதில் இருந்து உறிஞ்சப்பட்டு, அது டீசல் வைத்திருக்கும் தொட்டியில் செலுத்தப்படும்.
சமீபத்தில் மத்திய அரசு கலால் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ள நிலையில், எரிபொருள் விற்பனையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அழுத்தம் இருப்பதாக எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்திய பெட்ரோலியம் டீலர்களின் கூட்டமைப்பு பார்த் பெட்ரோலியம் நிறுவனத்திற்கு அனுப்பிய கடிதத்தில், “OMC (எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனம்) டீலர்களான நாங்கள் இப்போது எரிபொருள் விற்பனையில் எச்சரிக்கையாக இருக்குமாறு நிறுவனங்களால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டும், குறிப்பாக பிந்தையது மற்றும் சாதாரண விற்பனையை விட அதிகமாக விற்கக்கூடாது என அறிவிப்புகள் வருவதாக தெரிவித்துள்ளனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிபி இடையேயான கூட்டு நிறுவனமான ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி லிமிடெட் (ஆர்பிஎம்எல்), பொதுத் துறை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அடிக்கடி முடக்கியதாலும், மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்வதாலும் தனியார் எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனங்கள் இத்துறையில் நீடிக்க முடியாதது என்று அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.
OMCகள் நவம்பர் 2021 இல் தொடங்கி 137 நாட்களுக்கு எரிபொருள் விலையை முடக்கி, மீண்டும் 47 நாள் இடைவெளிக்கு சென்றன. எரிபொருள் விலையில் ஏற்பட்ட முடக்கம் பிப்ரவரி 2022 முதல் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களை நஷ்டத்தில் ஆழ்த்தியது என்று சந்தை ஆய்வுகள் கூறுகின்றன.
2 June 2022