மக்களே ராத்திரியோட ராத்திரியா இதெல்லாம் மாறப் போகுது!! தெரிஞ்சுக்கலனா உங்க பர்ஸ் காலி!!

பிப்ரவரி ஒன்றாம் தேதி இந்தியர்களுக்கு மிக முக்கியமான ஒரு நாள். மத்திய அரசு தன்னுடைய 2026 - 27 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனையொட்டி பங்குச்சந்தைகளும் செயல்பட போகின்றன. இவற்றுக்கு மத்தியில் பல்வேறு முக்கியமான மாற்றங்களும் நாளை முதல் அமலுக்கு வர இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வது நல்லது.

சிகரெட் விலை: மத்திய அரசு சிகரெட், பான் மசாலா , புகையிலை, குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கான வரியை அதிகரித்து இருக்கிறது. எனவே இவற்றின் விலை நாளை முதல் உயர போகிறது. சிகரெட்டின் விலை 15லிருந்து 40 சதவீதம் வரை உயரப் போகிறது. பான் மசாலா, மெல்லக்கூடிய புகையிலை , குட்கா போன்ற உடல் நலனுக்கு கேடு விளைவிக்க கூடிய பாவப்பொருட்களின் விலை அனைத்துமே நாளை முதல் பல மடங்கு உயர போகிறது. எனவே இவற்றை பயன்படுத்துவோர் இந்த பழக்கத்தை விட்டு விடுவது அவர்களின் பர்ஸுக்கு நல்லது.

மக்களே ராத்திரியோட ராத்திரியா இதெல்லாம் மாறப் போகுது!! தெரிஞ்சுக்கலனா உங்க பர்ஸ் காலி!!

சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் சிலிண்டர் விலையில் மாற்றத்தை அறிவிக்கும். அந்த வகையில் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது. விலை ஏறினால் நம்முடைய மாதாந்திர பட்ஜெட்டில் அடி விழும் விலை குறைந்தால் மாதாந்திர பட்ஜெட்டில் ஒரு கணிசமான தொகையை சேமிக்க முடியும்.

ஆதார் கட்டாயம்: பிப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து அனைத்து வகையான நில மற்றும் சொத்து பத்திரப்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயம். நிலத்தை வாங்குபவர், விற்பவர் மட்டுமில்லாமல் விட்னெஸாக கையெழுத்து போடும் நபரின் ஆதார் விவரங்களும் பத்திரப்பதிவின்போது சரிபார்க்கப்படும். இதற்கேற்ற வகையில் பயோமெட்ரிக் இயந்திரங்கள் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவை யுஐடிஏஐ சர்வரோடு இணைக்கப்பட்டுள்ளன. எனவே நம்முடைய கைவிரல் ரேகை பதிவு செய்தாலே போதும் ஆதார் சரிபார்ப்பு முடிந்த விடும். முறைகேடாக சொத்து பதிவு நடத்தப்படுவதை தடுக்க இது நடைமுறைக்கு வருகிறது.

ஃபாஸ்டேக்: வாகன உரிமையாளர்கள் தங்களுடைய வாகனங்களுக்கான know your vehicle நடைமுறையை இனி மேற்கொள்ள தேவையில்லை. சிலர் காருக்கான ஃபாஸ்டேக் எடுத்துவிட்டு அதை கொண்டு லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு பயன்படுத்துவதாக வந்த புகாரை அடுத்து தான் கேஒய்வி எனப்படும் know your vehicle நடைமுறை கட்டாயமாக்கப்பட்டது. அதாவது வாகன உரிமையாளர்கள் தங்களுடைய வாகனங்களுக்கு சரிபார்ப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் இனி ஃபாஸ்ட்டேக் அக்கவுண்ட் ஆக்டிவ் செய்வதற்கு முன்பாக அந்த கணக்கு வழங்கக்கூடிய வங்கிகளே know your vehicle நடைமுறையை முடித்துவிடும் என்பதால் வாகன உரிமையாளர்களுக்கு ஒரு பெரிய பிரச்சனை தீர்ந்தது.

வங்கி பயன்பாடு: இது தவிர பிப்ரவரி மாதத்தில் இருந்து ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கிகள் தங்களுடைய கிரெடிட் கார்டு விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கின்றன. ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் ஐம்பிஎஸ் சேவைக்கு பிப்ரவரி 15ஆம் தேதியிலிருந்து சர்வீஸ் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+