சர்வதேச அளவில் நடக்கும் போர், வர்த்தக மோதல், பொருளாதார சரிவு என எங்கோ ஓர் நாட்டில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் இந்தியாவில் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கு முக்கிய காரணம் இந்தியா தனக்கு தேவையான பெரும் அளவிலான தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்கிறது.
தங்க இறக்குமதிக்காக வெளிநாடுகளை சார்ந்திருப்பதால் தான் சர்வதேச அளவில் நிகழக்கூடிய எந்த ஒரு மாற்றங்களும் இந்திய சந்தையில் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த பிரச்சனைக்கு இருக்கக்கூடிய ஒரே தீர்வு உள்நாட்டிலேயே தங்கம் தயாரிப்பது தான். மத்திய, மாநில அரசுகள் சார்பாக நாட்டின் எந்தெந்த பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருக்கிறது அவற்றை தோண்டி எடுக்க முடியுமா என்பது குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உள்நாட்டில் தங்கம் உற்பத்தி தொடங்கி நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு நாம் உற்பத்தி செய்ய தொடங்கி விட்டால் சர்வதேச நிகழ்வுகள் தங்கம் விலையை உயர்த்தாது அதே வேளையில் தங்கத்தின் விலை பெருமளவு குறையும். அந்த வகையில் இந்தியர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகி இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் மிகப்பெரிய தங்கப் புதையல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் ஜொன்னகிரி பகுதியில் பூமிக்கு அடியில் பெரிய அளவில் தங்கம் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு தனியார் நிறுவனம் இதனை குத்தகைக்கு எடுத்து தங்கத்தை பிரித்து எடுப்பதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறது. வழக்கமாக அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தான் இவ்வாறு தங்கத்தை தோண்டி எடுத்து உலோகமாக மாற்றி வழங்கும், அதற்கான குத்தகையை இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு தனியார் நிறுவனத்திற்கு இது வழங்கப்பட்டிருக்கிறது.

Geomysore Services என்ற தனியார் நிறுவனம் இங்கே தங்கத்தை எடுத்து தங்கள் பிராண்ட் பெயரிலேயே விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியா மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக இருந்தது. குறிப்பாக கோலார் தங்க சுரங்கம் 1880 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2001 ஆம் ஆண்டு வரை உள்நாட்டில் பெருமளவில் தங்கம் உற்பத்தி செய்து வந்தது. அடுத்ததாக ஹட்டி கோல்டு மைன்ஸ் என்ற நிறுவனம் தங்க சுரங்கம் அமைத்தது.
அதற்கு அடுத்ததாக மூன்றாவது ஒரு நிறுவனம் பெரிய தங்க சுரங்கத்தை அமைக்கிறது. தற்போது ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பும் இந்த ஜொன்னகிரி தங்கச் சுரங்கத்தின் மீதுதான் இருக்கிறது. இந்த நிறுவனம் இந்த பகுதியில் தங்கத்தை பூமிக்கு அடியில் இருந்து பிரித்து எடுத்து உலோகமாக மாற்றி நேரடியாக தங்களுடைய பெயரில் ஒரு பிராண்டை உருவாக்கி உள்நாட்டு நகை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கிறது.
இது நகை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு வரி உள்ளிட்ட எதுவும் இல்லாமல் குறைந்த விலையில் தங்கம் கிடைப்பதற்கு வழிவகை செய்யும். இதனால் தங்கத்தின் விலை குறைவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது இந்த ப்ராஜெக்ட் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டிருக்கிறது. வணிக ரீதியில் அல்லாத உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
முதலில் 2027 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் 600 கிலோகிராம் தங்கம் பிரித்தெடுக்க முடிவு எடுத்திருப்பதாக நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர். அடுத்தகட்டமாக படிப்படியாக ஓராண்டுக்கு இரண்டு டன்கள் தங்கம் வரை பிரித்தெடுப்பது என இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. இது நடந்து விட்டால் இந்தியாவிலேயே அதிக அளவு தங்கம் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு பகுதியாக ஜொன்னகிரி மாறும்.
ஒரு காலத்தில் இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இணையாக தங்கம், உற்பத்தி செய்தது. ஆனால் 1990களுக்கு பின் அரசு இரும்பு, காப்பர் உள்ளிட்டவற்றை தோண்டி எடுப்பதில் அதிக கவனம் செலுத்தியது. இதனால் தங்க சுரங்கங்கள் கண்டறியும் பணியும் நிறுத்தப்பட்டது. தற்போது தான் அவை மீண்டும் தொடங்கப்பட்டு தனியார் துறைக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?



Click it and Unblock the Notifications