மகளின் திருமணத்திற்கு நகை எடுக்க வேண்டும். குழந்தையின் எதிர்காலத்திற்கு தங்கம் வாங்க வேண்டும் என்று கனவு கண்டு வரும் நடுத்தர மக்களுக்கு, இன்று மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. பொதுவாக தங்கம் இந்தியர்களை பொறுத்த வரையில் வெறும் முதலீடு மட்டுமல்ல, இந்திய சாமானியனின் ஒரு மிகப்பெரிய உணர்ச்சி. அப்படிப்பட்ட தங்கம் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு 10 கிராமுக்கு சுமார் 15,000 ரூபாய் வரை உயர்ந்து, நடுத்தர மக்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
ட்ரம்ப் - ஈரான் போர் பதற்றம், இங்கே ஒரு பாமரனின் வீட்டு சுபகாரிய கனவை சிதைத்து கொண்டிருக்கிறது. 10 கிராம் தங்கம் கிட்டத்தட்ட 1.45 லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. இந்த சூழலில் ஒவ்வொரு சாமானியனின் மனதிலும் தோன்றியிருக்கும் கேள்வி இனிமேல் தங்கம் கனவில் தான் வாங்க முடியுமா என்பது தான். இந்த அதிரடி உயர்வு தற்காலிகமானதா அல்லது இன்னும் விலை அதிகரிக்குமா? சந்தை நிபுணர்களின் கணிப்புகள் என்ன? கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

உலக நாடுகள் பதற்றமான சூழலில் இருந்து வரும் நிலையில் நின்று கொண்டிருக்க, மீண்டும் தங்கம் விலையானது மின்னல் வேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 48 மணி நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் தங்கம் விலை 15,000 ரூபாய் வரை உயர்ந்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. ஒருபுறம் ஈரான் - அமெரிக்கா போர் பதற்றம், மறுபுறம் வட்டி விகித குறைப்பு குறித்த எதிர்பார்ப்பு என இரண்டுக்கும் நடுவே சிக்கி தவிக்கும் தங்கம், சாமானியர்களின் எட்டாக்கனியாக மாறி வருகிறது.
கடந்த திங்கள்கிழமையன்று எம்சிஎக்ஸ் சந்தையில் 1,29,595 ரூபாய் என்ற குறைந்தபட்ச விலையை எட்டிய 10 கிராம் தங்கம் விலையானது, அங்கிருந்து மீட்சி கண்டு இன்று 1,44,570 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த இரண்டு தினங்களில் மட்டும் சுமார் 15,000 ரூபாய் ஏற்றம் கண்டுள்ளது. நிபுணர்களின் கணிப்பு படி, பணவீக்கம் குறித்த கவலை குறைந்துள்ளது. இது மத்திய வங்கிகளை வட்டி குறைப்பு செய்ய ஊக்குவிக்கலாம் என்ற எண்ணத்தின் மத்தியில் தான், கடந்த வாரத்தில் தங்கம் விலையானது சரிவை கண்டது.
இருப்பினும் ஈரான் - அமெரிக்கா இடையிலான பதற்றமானது தணியலாம் என்ற அறிகுறிகள் எழுந்துள்ளது. இதனிடையே கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்படலாம். இது பேரலுக்கும் 100 டாலர்களுக்கு கீழாக சரிந்து 86.60 டாலராக காணப்படுகிறது. இது மேலும் பங்குச் சந்தையையும் ஊக்குவித்துள்ளது. அதேசமயம் வட்டி அதிகரிக்க வாய்ப்பில்லை என்ற சூழல் ஆனது, மேற்கொண்டு தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஈரான் போரானது முடிவுக்கோ வந்தாலும் கூட, வட்டி விகிதம் அதிகரிக்காமல் இருப்பது வட்டியில்லா முதலீட்டுக்கு சாதகமாக அமையலாம். ஆக குறுகிய காலத்தில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் விலை அதிகரிக்கவே செய்யும். தொடர்ந்து பாதுகாப்பு புகலிடமாகவே இருக்கும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

தங்கம் விலையில் அதிரடி திருப்பம்! டிரம்ப் கொடுத்த போர் நிறுத்த ட்விஸ்ட்! அடுத்து என்ன நடக்கும்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி



Click it and Unblock the Notifications