ஈரான் போர் காரணமாக இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. முதலில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்திய அரசு தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை வெளியிட்டு இருக்கிறது.
ஈரானில் கிட்டதட்ட ஒரு மாத காலமாக போர் நீடிப்பதால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் கொண்டு வரப்படவில்லை. இது இந்தியாவில் கடுமையான எல்பிஜி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது. ஆங்காங்கே எல்பிஜி கிடைக்காமல் உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. பல்வேறு உணவு வகைகள் மற்றும் டீ , காபி உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்திருக்கிறது.

ஆட்டோக்கள் , உற்பத்தி நிறுவனங்கள் என பல்வேறு இடங்களிலும் எல்பிஜி கிடைக்காமல் ஏராளமானவர்கள் திண்டாடுகிறார்கள். இதற்கு இடையே மத்திய அரசு வீட்டு உபயோக பயன்பாட்டு சிலிண்டர் டெலிவரிக்கு தான் முன்னுரிமை கொடுத்து வருவதாக தெரிவித்து வருகிறது. பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் நம் நாட்டில் போதுமான அளவு சிலிண்டர் இருப்பு இருக்கிறது என தெரிவித்து வருகிறது.
இந்த சூழலில் மிக முக்கியமான ஒரு அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதாவது இந்தியாவில் குழாய் வழி இயற்கை எரிவாயு எனப்படும் பிஎன்ஜி (piped natural gas - PNG) இணைப்புக்கு மாறுவதற்கான வசதி உள்ள இடங்களில் இருக்கக்கூடிய குடும்பங்கள் தங்களுடைய எல்பிஜி இணைப்பை பிஎன்ஜி இணைப்புக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் எங்கெல்லாம் பிஎன்ஜி இணைப்புக்கு மாறுவதற்கான வசதி இருக்கிறதோ அவர்கள் எல்லாம் அதற்கு கட்டாயம் மாற வேண்டும். அவ்வாறு மாறாமல் மறுக்கும் குடும்பங்களின் எல்பிஜி இணைப்பை துண்டித்து விடுவோம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஒரே விதமான எரிபொருளை சார்ந்து இருப்பதை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இதன்படி குழாய் வழி இயற்கை எரிவாயு அதாவது பிஎன்ஜி இணைப்புக்கு மாறுவதற்கான சாத்தியமும் வசதியும் உங்களுடைய வீட்டில் இருக்கிறது எனும்போது நீங்கள் அதற்கு கட்டாயம் மாற வேண்டும் . இல்லை எனக்கு எல்பிஜி தான் வேண்டும் எனக் கூறினால் உங்களுடைய எல்பிஜி இணைப்பை நிறுத்தி விடுவார்கள். எல்பிஜி தட்டுப்பாடு நீடிப்பதால் மத்திய அரசு இயன்ற அளவு வீட்டு பயன்பாட்டிற்கும் குழாய் வழி இயற்கை எரிவாயு விநியோகத்தை வழங்குவதற்கு முடிவு செய்து இருக்கிறது.
வீட்டு உபயோகம் மட்டும் இல்லாமல் வணிக நோக்கத்தில் எல்பிஜி தேவைப்படுவோர் கூட தங்களுக்கு அதற்குரிய வசதி இருக்கும் பட்சத்தில் பிஎன்ஜி இணைப்பு பெற்று பிஎன்ஜி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறது. பிஎன்ஜி உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது என்பதால் அது தடை இன்றி கிடைக்கும் என சொல்லப்படுகிறது. எனவே பிஎன்ஜி இணைப்புக்கான வசதி இருந்தும் அந்த வீட்டில் இருப்பவர்கள் அதனை ஏற்க மறுத்தால் அடுத்த மூன்று மாதங்களில் அவர்களுக்கான எல்பிஜி இணைப்பை துண்டித்து விட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. வசதி இருக்கும் இடங்களில் பிஎன்ஜி வழங்கிவிட்டு அதற்கான வசதி இல்லாத பகுதிகளில் எல்பிஜி விநியோகம் செய்வதை உறுதிப்படுத்த அரசு இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது.
More From GoodReturns

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும் கப்பல்கள் இயக்குவதில் சிக்கல்!! ஈரானால் எழுந்த புதிய பிரச்சினை!!

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் Toll Gate- ஆ? வாய்ப்பில்ல ராஜா என்கிறார் டிரம்ப்!!

ஈரான் போட்ட முட்டுக்கட்டை! இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்வி..ஜேடி வேன்ஸ் சொன்ன அந்த பேட் நியூஸ்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

ஈரான் கொடுத்த ஒற்றை அப்டேட்.. தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை! இதுலேயே தெரிஞ்சுக்கோங்க?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

ஈரான் போர் நிறுத்தம் நீடிக்குமா? வெள்ளிக்கிழமை நடக்க இருக்கும் டிவிஸ்ட்!!

அமெரிக்க வானில் வட்டமிட்ட Dooms Day விமானம்!! டிரம்ப் ஈரானுக்கு விதித்த கெடு நெருங்குவதால் பதற்றம்!!

ஈரான் போர்: டிரம்ப் நிர்வாகத்திலேயே ஒரு கருப்பு ஆடு? செய்தியாளர்களிடம் உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

கிடுகிடுவென உயரும் விமான டிக்கெட் கட்டணங்கள்: ஈரான் போர் தான் காரணமா?



Click it and Unblock the Notifications