இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கக்கூடிய பெரிய பிரச்சனை அவர்கள் வேலையை விட்டு நிற்கும் போது சம்பள பாக்கி கிடைக்க பல வாரங்கள் , மாதங்கள் அலைய வேண்டும். திடீரென நிறுவனங்கள் அவர்களை பணிநீக்கம் செய்வது அல்லது அவர்களே வேலை ராஜினாமா செய்வது என நிறுவனத்தை விட்டு வெளியேறும் சமயத்தில் அந்த ஊழியருக்கு நிதி சம்பந்தப்பட்ட செட்டில்மெண்டுகள் உடனடியாக கிடைக்காது.
சில நிறுவனங்கள் சில வாரங்களில் செட்டில்மெண்ட் தரும், சில நிறுவனங்கள் பல மாதங்கள் கூட எடுத்து கொள்ளும். இது தவிர அந்த ஊழியர் நிறுவனத்திற்கும் வீட்டிற்கும் அலைய வேண்டிய தேவை இருக்கும். ஆனால் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டப்பட்டிருக்கிறது. வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து நிலைமை தலைகீழாக மாறப்போகிறது.

இந்தியாவில் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து புதிய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன. புதிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் ஒரு ஊழியர் வேலையை விட்டு நிற்கும் போது அவருக்கான Final and Full settlement-களை இரண்டு அலுவல் நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என விதிமுறை கொண்டு வரப்பட்டிருக்கிறது. அதாவது அந்த ஊழியர் வேலை செய்த கடைசி அலுவல் நாளிலிருந்து அடுத்த இரண்டு அலுவல் நாட்களுக்குள் Final and Full settlement-களை முடித்து விட வேண்டும்.
இதற்கு முன்பு ஒரு ஊழியர் திடீரென வேலையை விட்டு நின்றாலும் அல்லது பணிநீக்கம் செய்யப்படுகிறார் எனும் போதும் அவருக்கு இத்தனை நாட்களுக்குள் செட்டில்மெண்ட் செய்ய வேண்டுமென எந்த ஒரு டைம் லைனும் கிடையாது. நிறுவனங்கள் அவற்றுக்கு தேவையான கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளும். ஆனால் புதிய தொழிலாளர் சட்டம் ஊழியர்களுக்கு சாதகமான விதிமுறையை கொண்டு வந்துள்ளது.

எனவே ஏப்ரல் முதல் வேலையை ராஜினாமா செய்வோருக்கு 2 நாட்களிலேயே சம்பள பாக்கி , அலோவென்ஸுகள், போனஸ் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும். ஒருவேளை பணிநீக்கம் செய்யப்பட்டாலும் நிதி இழப்பீடுகள் 2 நாட்களில் கைக்கு வந்துவிடும். எனவே ஊழியர்கள் எப்போது சம்பள பாக்கி கிடைக்கும் என காத்திருந்து கவலைப்பட தேவையில்லை.
இனி இரண்டே நாட்களுக்குள் இந்த செட்டில்மெண்ட் முடிக்கப்பட்டு விடும். இதன் மூலம் ஒரு ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது வேலையை ராஜினாமா செய்தாலோ இரண்டு அலுவல் நாட்களிலேயே அவருக்கு நிலுவையில் இருக்கக்கூடிய சம்பளம் , நிறுவனம் சார்பில் அவருக்கு வர வேண்டிய நிதி சார்ந்த போனஸ் மற்றும் பிற நிதி சார்ந்த அனைத்தும் செட்டில் செய்யப்பட்டு விடும்.
ஊழியர்களை பொறுத்தவரை இது சாதகமான விதிமுறை நிறுவனங்களை பொறுத்தவரை நிதி சார்ந்த செட்டில்மெண்டுகளை முடிக்க 2 நாட்கள் தான் அவகாசம் என்பது சற்று சவாலானது தான். இருந்தாலும் அரசின் விதிகளுக்கு இணங்கி தான் ஆக வேண்டும். புதிய தொழிலாளர் சட்டத்தின் படி நம் சம்பள கட்டமைப்புகள் கூட ஏப்ரல் மாதம் முதல் மாற்றம் அடைய உள்ளன.


Click it and Unblock the Notifications