ஈரான் போர் நேரடியாக நம் வீட்டு சமையல் அறை வரை பாதிக்க தொடங்கிவிட்டது. முன்பை போல அத்தனை எளிதாக வீட்டு உபயோகத்திற்கு சிலிண்டர் முன்பதிவு செய்தால் நமக்கு கிடைப்பது கிடையாது. இதற்கு முன்பு சிலிண்டர் முன்பதிவு செய்தால் இரண்டு மூன்று நாட்களிலேயே டெலிவரி செய்து விடுவார்கள். ஆனால் நிலைமை தற்போது தலைகீழாக இருக்கிறது. 10 முதல் 15 நாட்கள் ஆனாலும் கூட சிலிண்டர் டெலிவரி செய்யவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்.
சிலிண்டர் விநியோகம் செய்யக்கூடிய எல்பிஜி விநியோக அலுவலகங்களிலும், சிலிண்டர் குடோன்களிலும் மக்கள் காலி சிலிண்டர்களோடு காத்திருக்கக்கூடிய சூழல் உண்டாகி இருக்கிறது. இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி போன்ற எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோக பயன்பாட்டு சிலிண்டர் டெலிவரிக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என தொடர்ச்சியாக கூறி வருகின்றன. இருந்தாலும் போருக்கு முந்தைய நிலைமை இன்னும் இந்தியாவில் வரவில்லை என்பதுதான் நம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.

இந்த சூழலில் தான் மத்திய அரசு எல்பிஜி இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்கள் வீட்டில் PNG (piped natural gas) குழாய் இயற்கை எரிவாயு இணைப்பு பெறுவதற்கான வசதி இருந்தால் அதற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. பிஎன்ஜி இணைப்பு வசதி இருந்தும் எல்பிஜியில் தான் இருப்பேன் என கூறுபவர்களுக்கான எல்பிஜி கேஸ் இணைப்பு மூன்று மாதங்களில் துண்டிக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விட்டிருக்கிறது.
எல்பிஜிக்கு மாற்றாக இந்தியாவில் லட்சக்கணக்கான குடும்பங்கள் பிஎன்ஜி இணைப்புக்கு ஏற்கனவே மாறிவிட்டன. இவர்களுக்கு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த கவலையே இல்லை. வீட்டில் பிஎன்ஜி இணைப்பு இருந்தால் நேரடியாகவே குழாய் வழியாக கேஸ் நம் அடுப்படிக்கே வந்துவிடும். சிலிண்டர் தேவையில்லை. குழாய் வழியாகவே கேஸ் விநியோகம் 24 மணி நேரமும் கிடைக்கும்.
இந்தியாவிலேயே அதிகளவு பிஎன்ஜி உற்பத்தி செய்யப்படுவதால் ஈரான் போர் போன்ற எந்த ஒரு போர் சூழலும் நமக்கு கேஸ் விநியோகத்தில் தடையை ஏற்படுத்தாது. தற்போதைய சூழலில் கேஸ் விநியோக நிறுவனங்களும் கூட வீடுகளுக்கு பிஎன்ஜி இணைப்பு வழங்க தயாராக இருக்கின்றன. ஏற்கனவே இந்தியாவில் 60 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் பிஎன்ஜி இணைப்பு இருப்பதாகவும் நிறுவனங்கள் தொடர்ந்து இதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்றும் அரசு கூறுகிறது.

பிஎன்ஜி இணைப்பு இருந்தால் நேரடியாக நம்முடைய வீட்டிற்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயு வந்துவிடும் நாம் சிலிண்டர் வாங்க வேண்டும், சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் , காத்திருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. முதலில் உங்களுடைய ஊரில் செயல்படக்கூடிய கேஸ் விநியோகஸ்தர்கள் பிஎன்ஜி இணைப்பு கொடுப்பதற்கு அங்கீகாரம் பெற்று இருக்கிறார்களா என்பதை பார்க்க வேண்டும்.
இந்தியாவில் பல்வேறு அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் இந்த சேவை வழங்குகின்றன. இந்த இணைப்பு பெற செக்யூரிட்டி டெபாசிட் தொகையாக 5000 முதல் 10000 ரூபாய் வரை கேட்பார்கள். அதை கொடுக்க வேண்டியது இருக்கும். புதிய இணைப்பு பெறுவதற்கு தனியாக ஒரு கட்டணம் கேட்பார்கள். இதனை அடுத்து தொழில்நுட்ப நிபுணர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து பிஎன்ஜி இணைப்பு வழங்கும் வசதி இருக்கிறதா என ஆய்வு செய்வார்கள்.
உங்கள் வீட்டில் பிஎன்ஜி இணைப்புக்கான சாத்தியம் இருந்தால் அடுத்தக்கட்டமாக குழாய் பதிப்பது, கேஸ் மீட்டர் பொருத்துவது ஆகிய பணிகள் நடைபெறும். அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் முடித்த பிறகு உங்களுக்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயு என்பது விநியோகம் செய்யப்படும். இதில் நீங்கள் சிலிண்டர் வாங்க வேண்டும் முன்பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது 24 மணி நேரமும் உங்களுக்கு கேஸ் விநியோகம் வந்து கொண்டே இருக்கும்.
நீங்கள் எவ்வளவு பயன்படுத்தினீர்களோ கேஸ் மீட்டரில் இருக்கக்கூடிய உங்களுடைய பயன்பாட்டு அளவை பொறுத்து உங்களுக்கான பில்லிங் கட்டணம் வசூல் செய்யப்படும். இது தற்போதைக்கு பெரிய நகரங்களில் மட்டுமே சாத்தியம். வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை விட பிஎன்ஜிக்கு ஒரு மாதத்திற்கு 20% வரை குறைவாகவே செலவாகும் என சொல்லப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரை தற்போது வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் பிஎன்ஜி இணைப்பு என்பது வழங்கப்படுகிறது. பெரம்பூர், ராயபுரம், ஓஎம்ஆர் சாலை , சோழிங்கநல்லூர், தாம்பரம் , அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளில் பிஎன்ஜி இணைப்பு கிடைக்கிறது.
More From GoodReturns

LPG வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

ஈரான் போரில் அடுத்த திருப்பம்: ஹார்முஸ் ஜலசந்தியை வைத்து மெகா திட்டம் தீட்டும் ஈரான் அரசு..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: 2 கப்பல்களில் வந்த எல்பிஜி நாட்டின் மொத்த தேவையையும் பூர்த்தி செய்யுமா?

ஈரான் இனி தலைதூக்கவே முடியாது; ஆட்சியிலும் ராணுவத்திலும் பிளவு - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

அடிசக்க.. சொன்னதை செய்த Iran..!! இந்தியாவுக்கு லட்டு மாதிரி வரும் 2 LNG கப்பல்..!

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

ஈரான் போரால் இந்தியாவில் புது பிரச்சனை.. மருத்துவமனைகளில் ஷாக்.. என்ன நடக்குது?!



Click it and Unblock the Notifications

