மேற்காசிய நாடுகளில் நிலவக்கூடிய போர் பதற்றம் இந்தியாவில் எல்பிஜி பற்றாக்குறையை தீவிரப்படுத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இந்தியாவிற்கு வளைகுடா நாடுகளில் இருந்து எல்பிஜி கொண்டுவரப்படவில்லை. தன்னுடைய எல்பிஜி தேவைக்கு பெரும்பாலும் வெளிநாடுகளையே இந்தியா சார்ந்து இருப்பதால் பெரிய அளவிலான எல்பிஜி தட்டுப்பாடுக்கு வித்திட்டு இருக்கிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி வைத்து விட்டன. குறிப்பிட்ட சதவீதத்தில் மட்டுமே வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் மருத்துவமனைகள், கேண்டீன்கள் என முன்னுரிமை அடிப்படையில் தான் வழங்கப்பட்டு வருகிறது. நிலைமை இப்படி இருக்க வீட்டு உபயோக பயன்பாட்டு சிலிண்டர் முன்பதிவு செய்தாலும் முன்பை போல தங்களுக்கு சிலிண்டர் கிடைப்பது இல்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்.

சிலிண்டர் முன்பதிவு செய்து ஒரு வாரம் பத்து நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி இருப்பதாக புகார் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இந்த சூழலில் தான் பொதுமக்களுக்கு முறையாக சிலிண்டர் கிடைக்க வேண்டும் டெலிவரி செய்யக்கூடிய ஊழியர்களோ அல்லது நிறுவனங்களோ வீட்டு உபயோக பயன்பாட்டுக்கு வழங்க கூடிய சிலிண்டர்களை தவறான வழிகளில் விற்பனை செய்து கணக்கு காட்டி விடக்கூடாது , சிலிண்டர்களைப் பதுக்கி கள்ள சந்தைகளில் விற்பனை செய்யக்கூடாது செய்வதை தடுக்கவும் ஓடிபி டெலிவரி நடைமுறை நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
இதன்படி வாடிக்கையாளர் தங்கள் வீட்டு உபயோக பயன்பாட்டிற்கு சிலிண்டர் வேண்டும் என வேண்டும் என முன்பதிவு செய்தால் அவருடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும் , சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் போது அந்த ஓடிபி-ஐ கூறினால் தான் உங்களுக்கு சிலிண்டர். முதலில் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே இருந்த இந்த நடைமுறை தற்போது நாடு முழுவதுமே அமலுக்கு வந்துவிட்டது. எனவே சிலிண்டர் முன்பதிவு செய்த உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி மெசேஜை மக்கள் பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்.

சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர் உங்களிடம் இருந்து ஓடிபி-ஐ பெறுவார். இதனை அடுத்து ஏஜென்சி ஊழியர்கள் தங்கள் கணினி அமைப்பில் அந்த ஓடிபி-ஐ உள்ளிட்டால் தான் சிலிண்டர் வெற்றிகரமாக விநியோகம் செய்யப்பட்டது என்பது கணக்கில் கொள்ளப்படும். இதனை விநியோக அங்கீகாரக் குறியீடு என அழைக்கிறார்கள். சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனம் வாடிக்கையாளரிடம் தான் சிலிண்டரை வழங்கியது என்பதை உறுதி செய்கிறது இந்த ஓடிபி சிஸ்டம்.
நாடு முழுவதும் எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர் வீட்டிற்கு வந்து சிலிண்டரை டெலிவரி செய்யும் போது மட்டுமே ஓடிபி வழங்க வேண்டும். ஒரு வேளை அவர் வராமலேயே எங்கேயோ இருந்தோ அல்லது ஏஜேன்சியில் இருந்தோ போன் செய்து ஓடிபி கேட்டால் தரக்கூடாது.ஏனெனில் உங்களின் சிலிண்டர் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்படலாம். எனவே ஓடிபி வழங்கும் போது கவனம் தேவை.
அதே வேளையில் ஏராளமானவர்கள் சிலிண்டர் இணைப்பு பெறும் போது ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்திருப்பார்கள், ஆனால் இப்போது அந்த நம்பர் பயன்பாட்டில் இல்லாமல் போகலாம். இந்த ஓடிபி என்பது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு தான் போகும். இதுவும் சிலிண்டர் டெலிவரியில் சிக்கலை ஏற்படுத்தியது. பணம் கட்டியும் ஓடிபி வரவில்லை, சிலிண்டர் வரவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்.
இந்த பிரச்சினைக்கும் எண்ணெய் நிறுவனங்கள் தீர்வு கண்டு விட்டன. இனி எந்த போனில் இருந்து நீங்கள் சிலிண்டர் முன்பதிவு செய்கிறீர்களோ அதில் உள்ள சிம்கார்டுக்கே ஓடிபி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் வேறு போனில் இருக்கலாம் ஆனால் நீங்கள் வேறு போனில் செயலி மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்கிறீர்கள் என வைத்து கொள்வோம். அப்படி இருக்கும் போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் எந்த போனில் இருந்து பதிவு செய்தீர்களோ அதில் உள்ள மொபைல் எண் ஆகிய இரண்டுக்குமே ஓடிபி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்கள் தங்களின் பழைய நம்பர் செயல்பாட்டில் இல்லை என்றால் கேஸ் ஏஜென்சி தொடர்பு கொண்டு அதனை புதிய நம்பருக்கு மாற்றி கொள்வது நல்லது என ஏஜென்சிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் மக்கள் சிறு தவறுகளால் தங்களுக்கு சிலிண்டர் கிடைப்பதை தவறவிட்டு விட கூடாது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications