ஒரு காலத்தில் இந்தியாவில் விறகு அடுப்பில் தான் சமையல் செய்யப்பட்டது . பின்னர் படிப்படியாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு . மத்திய அரசே பல்வேறு மானிய திட்டங்களின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை நாட்டின் மூலை முடுக்கு எங்கும் கொண்டு சேர்த்திருக்கிறது.
தற்போது பெரும்பாலான இந்திய குடும்பங்களில் சமையலுக்கு கேஸ் அடுப்பையும் சிலிண்டரையும் தான் பயன்படுத்துகிறோம். அந்த அளவிற்கு பெரிய மாற்றம் வந்திருக்கிறது. இந்த சிலிண்டர்களை பொறுத்தவரை பாதுகாப்பாக பயன்படுத்தும் வரையில் எந்த ஆபத்தும் இல்லை, ஆனால் அதில் ஒரு சின்ன தவறு நேர்ந்தால் கூட பலரது உயிரை பறிக்கக்கூடிய விஷயமாக மாறிவிடும்.

எனவே சிலிண்டர் வாங்கும்போது அதில் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை கவனிப்பது கட்டாயம் இல்லை என்றால் எந்த நேரமானாலும் அது வெடித்து சிதற நேரிடலாம். ஒவ்வொரு சிலிண்டருக்கும் எக்ஸ்பயரி தேதி அதாவது காலாவதி தேதி என்பது இருக்கிறது. அந்த காலாவதி தேதியை கடந்து சிலிண்டரை பயன்படுத்தினால் பெரிய விபத்தில் சிக்க நேரிடலாம்.
சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி தெரிந்து கொள்வது என்பதை பார்க்கலாம் . அனைத்து சிலிண்டர்களிலுமே அதன் எக்ஸ்பயரி தேதி மிகத் தெளிவாக அச்சிடப்பட்டிருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால் அதனை கவனிக்க தவறிவிடுகிறோம் . சிலிண்டரில் இதுபோல ஒரு ஆங்கில எழுத்தும் உடன் இரண்டு எண்களும் இருக்கும். உதாரணமாக A 25, B 28, C 27 , D 26. இதில் ABCD என்பது மாதங்களையும், இரண்டு இலக்க எண்கள் ஆண்டுகளையும் குறிக்கின்றன.
A என்றால் ஜனவரி முதல் மார்ச்
B என்றால் ஏப்ரல் முதல் ஜூன்
C என்றால் ஜூலை முதல் செப்டம்பர்
D என்றால் அக்டோபர் முதல் டிசம்பர்.

மேலே கூறிய உதாரணங்களின் படி உங்கள் சிலிண்டரில் A25 என எழுதி இருந்தால் அந்த சிலிண்டர் மார்ச் 2025இல் காலாவதி ஆகிவிட்டது. B 28 என்றால் வரும் 2028ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை தான் இதனை பயன்படுத்த வேண்டும். C 27 என குறிப்பிடிருந்தால் 2027ஆம் ஆண்டு செப்டம்பருக்கு பின் இந்த சிலிண்டரை பயன்படுத்த கூடாது, D 26 என்றால் 2026 அக்டோபர் முதல் டிசம்பருக்குள் இது காலாவதி ஆகிறது என அர்த்தம்.
இது தவிர சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். குறிப்பாக சிலிண்டர் அருகே ரெப்ரிஜிரேட்டர் எனப்படும் குளிர்சாதன பெட்டியை ஒருபோதும் வைக்க கூடாது . ஏனெனில் குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியாக கூடிய வெப்பம் தொடர்ந்து வெப்ப அழுத்தத்தை உண்டாக்கி சிலிண்டர்களை வெடிக்க செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
அடுத்ததாக உங்களுடைய சிலிண்டரிலிருந்து கேஸ் அடுப்புக்கு செல்லக்கூடிய குழாயில் வாயு கசிவு இருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதற்கு சோப் தண்ணீரை அந்த குழாயின் மீது அப்ளை செய்ய வேண்டும் அப்போது அதில் குழிழிகள் உண்டானால் எரிவாயு கசிவு இருக்கிறது என அர்த்தம். மேலும் சிலிண்டர்களை மூடப்பட்ட கேபின்களில் வைக்க கூடாது. காற்றோட்டமாக இடத்தில் தான் வைக்க வேண்டும். மூடப்பட்ட கேபினில் எரிவாயு கசிவு ஏற்பட்டாலும் நமக்கு அது தெரியாமல் அதற்குள்ளேயே அந்த வாயு என்பது சேர்ந்து அழுத்தமாகி மிகப்பெரிய ஒரு விபத்தை ஏற்படுத்தக் கூடும்.
More From GoodReturns

சிலிண்டர் டெலிவரி OTP நடைமுறையில் மாற்றம்!! எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் புது அறிவிப்பு!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: இனி 35 நாட்களுக்கு ஒருமுறை தான் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியுமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications