பிப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து நாடு முழுவதும் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. இவை அனைத்துமே பொதுமக்களின் பாக்கெட்டிலேயே கை வைக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. ஃபாஸ்டேக் விதிமுறைகளில் தொடங்கி சிலிண்டர் விலை மாற்றம், புகையிலை பொருட்கள் விலை உயர்வு என பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமலுக்கு வரக்கூடிய முக்கிய மாற்றங்கள் என்னென்ன என்பதை தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி மாதம் என்றாலே இந்தியர்களுக்கு பட்ஜெட் மாதம் பிப்ரவரி இந்த ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினமே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட போகிறது. இதனை தாண்டி பிப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து பல்வேறு முக்கியமான மாற்றங்களை நாம் எதிர்கொள்ள போகிறோம்.

ஃபாஸ்டேக்: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஃபாஸ்டேக்கில் முக்கியமான ஒரு மாற்றத்தை பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைமுறைக்கு கொண்டு வருகிறது. இதன்படி வாகனங்களுக்கான know your vehicle எனப்படும் கேஒய்வி நடைமுறை முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது. காருக்காக வாங்கிய ஃபாஸ்டேக்கை லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்கி குறைந்த அளவு சுங்க கட்டணம் செலுத்துவதாக எழுந்த புகாரை எடுத்து தான் know your vehicle எனப்படும் வாகனங்களை சரிபார்க்கும் நடைமுறை அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால் இது பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துவதாக எழுந்தபுகாரை எடுத்து பிப்ரவரி 1 முதல் அது நிறுத்தப்படுகிறது. எனவே உங்களுடைய வாகனங்களுக்கு ஃபாஸ்டாக் வழங்கக்கூடிய வங்கிகளே இனி உங்கள் வாகனங்களுக்கான கேஒய்வி நடைமுறையும் பார்த்துக் கொள்ளும். ஃபாஸ்டேக் வந்த பிறகு நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் வாகனத்திற்கு know your vehicle பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
சிலிண்டர் விலை: வழக்கமாக மாதத்தின் முதல் நாளில் இந்தியாவில் சிலிண்டர் விலையில் மாற்றம் அறிவிக்கப்படும். சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் சிலிண்டர் விலையை உயர்த்தலாம் அல்லது குறைக்கலாம் அல்லது அப்படியே நீட்டிக்கச் செய்யலாம். வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை பல மாதங்களாகவே உயர்த்தப்படாமல் அதே அளவிலேயே இருக்கிறது. இந்த ஒன்றாம் தேதி விலை மாற்றம் இருக்கிறதா என்பது தெரிய வரும். கடந்த மாதம் தான் 19 கிலோ வணிக சிலிண்டருக்கான விலை 14.50 ரூபாய் குறைக்கப்பட்டது.
புகையிலை பொருட்கள்: பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து இந்தியாவில் பான் மசாலா, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் என உடல் நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடிய புகையிலை பொருட்களுக்கெல்லாம் கூடுதல் வரி நடைமுறைக்கு வர உள்ளது. இதனால் தற்போது நீங்கள் வாங்கக்கூடிய சிகரெட் , பீடி, பான் மசாலா மற்றும் புகையிலை எல்லாம் பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு பல விலை மடங்கு உயரும்.


Click it and Unblock the Notifications